No icon

பாராயூப்பூர் மறைமாவட்டத்திற்கு வாரிசுரிமை ஆயர்

இந்தியாவின் பாராயூப்பூர்   மறை மாவட்டத்திற்கு, அருள்பணி ஷியாமால் போஸ் அவர்களை, வாரிசுரிமை ஆயராக, மே 17, ஆம் தேதி திருத்தந்தை  நியமித்துள்ளார். 
மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள பாராயூப்பூர்  மறைமாவட்டத்தின் கோசாபா என்ற ஊரில் 1961 ஆம் ஆண்டு பிறந்த, புதிய வாரிசுரிமை ஆயர் ஷியாமால் போஸ், 1991 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி அம்மறைமாவட்டத்திற்கென, அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
பெங்களூரு புனித பேதுரு பாப்பிறை இறையியல் கல்லூரியில், விவிலியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ள இவர், பாராயூப்பூர்  மறைமாவட்டத்தின் சமுதாயநல மையத்தின் இயக்குனராகவும், அப்பகுதியின் சமுதாய முன்னேற்ற அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு முதல், பாராயூப்பூர்   மறை மாவட்டத்தின் பொருளாதார மற்றும் வேந்தராக பணியாற்றி வருகிறார். பாராயூப்பூர்  மறைமாவட்டம், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களால், 1978 ஆம் ஆண்டு
மார்ச் 12 ஆம் தேதி, கொல்கத்தா உயர்மறை மாவட்டத்தி லிருந்து பிரிக்கப்பட்டு தனி மறைமாவட்டமாக உருவானது. 10, 568 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த மறைமாவட்டத்தில், 2011 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, 94,45,909 மக்களும், 2018 ஆம் ஆண்டின் நிலவரப்படி, அம்மறைமாவட்டத்தில் 62,847 கத்தோலிக்கரும் உள்ளனர். பெங்காளி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் உட்பட வேறுபல மொழிகளும், இப்பகுதியில் பேசப்படுகின்றன.

Comment