No icon

மருத்துவம் பேசுகின்றது

நெல்லிச்சாறு மருத்துவம்

    நெல்லிக்கனியின் சாறு அரை அவுன்ஸ் அளவு எடுத்து தேன் கலந்து உட்கொள்ள முத்துத்துளி என்ற நோய் குணமாகும். சிறிது கூர்மையாய் நோக்கினால் நீர் கோர்த்து கண்பார்வையை இந்நோய் மறைக்கிறது.
    நெல்லிச்சாறு, தேன், திப்பிலிப்பொடி மூன்றையும் சேர்த்துக் குழைத்து உள்வாய்ப் பகுதி, நாக்கு முதலிய வற்றின் மீது பூசி வர அங்கு ஏற்பட்டுள்ள புண்கள் ஆறிவிடும்.
    நெல்லிச்சாறு, எலுமிச்சைச் சாறு ஒவ் வொன்றும் ஓர் அவுன்ஸ் கலந்து பருகி வர வயிற்றுப் பூச்சிகள் அழியும்.
        நெல்லிச்சாறை வெறும் வயிற்றில் 5, 6 முறைகள் பருகிவர வயிற்றுக்கடுப்பு தணியும். ஆனால் உணவை முழுவதுமாக நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக தயிர், மோர் மட்டும் நோய் குணமாகும்வரை அருந்த வேண்டும்.
    நெல்லிச்சாற்றுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து அருந்திவர பித்தம் குறையும். வெள்ளைச் சர்க்கரை கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது. நெல்லிச்சாறை தினமும் மூன்று வேளை முறையே ஒரு அவுன்ஸ் என்று தொடர்ச்சியாக சில நாள்கள் உட்கொண்டுவர பித்தமானது முற்றிலும் குணம்பெறும். பசியின்மை மறைந்து பசி நன்கு எடுக்கும்.
    நெல்லிச்சாறை தினசரி அருந்திவர மேக வெட்டை நோய் வராது. ஏற்கெனவே இருந்தாலும் நீங்கிவிடும்.
    நெல்லிச்சாறு அன்றாடம் சேர்க்க சிறுநீரில் வெள்ளைப்போக்கு, சுக்கில மேகம் நோய்கள் ஏற்படாது.
    நெல்லிச்சாறில் எந்த இனிப்பும் கலவாமல் அருந்திவர சர்க்கரை நோயின் கடுமை குறையும். 
    நெல்லிச்சாறு கணையத்திற்கு வலிமை ஊட்டும். கணையத்தைச் சீர்ப்படுத்தும். இனிப்பை மட்டும் சேர்க்கக்கூடாது. எனவே சர்க்கரை நோயாளி தினம் ஒரு நெல்லிக்கனி மென்று சாறு விழுங்கினாலே போதும். சர்க்கரை நோயாளிக்கு நெல்லிக்கனி ஒரு மாமருந்து.
சிறுநீர் தொடர்பாக நோய்கள் முற்றிலும் நீங்க:
இரவில் உலர் திராட்சையை நீரில் இட்டும், மறுநாள் காலை அதை நீரில் பிசைந்து, அதனுடன் நெல்லிச்சாறு கலந்தும் அருந்தி வரவும். இரத்தம் வெளியேறும் இடத்தை நெல்லிச்சாறு கொண்டு அடிக்கடி கழுவ, நிற்காத இரத்தப்போக்கு நிற்கும். எளிதில் உறையும் தன்மை அடையும். நெல்லிச்சாறு அருந்துபவர்களுக்கு இரத்த மண்டலம் வலுவாக, வளமாக இருக்கும். காயம் ஏற்பட்டாலும் இரத்தம் அதிகமாக  வெளியேறாது.
தினம் ஒரு நெல்லிக்காய், பல வியாதிகளை நீக்கும் நல்ல மருந்தாகும்.

Comment