
திரு. சா. பீட்டர் அல்போன்ஸ்
சிறுபான்மை மாணவர்களுக்கென்று தனி தரவரிசைப் பட்டியல் தயாரித்து உதவிய தமிழக அரசுக்கு நன்றி!
இதுநாள் வரை சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்ற தகுதியை வைத்துக்கொண்டு பல்வேறு சிறப்பு சலுகைகளை அனுபவித்து கொண்டு இருந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அந்த சிறுபான்மை இன மாணவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை.
முதன் முறையாக இந்தியாவில் தமிழ்நாட்டில் சிறுபான்மை மாணவர்களுக்கான தனி தரப்பட்டியல் வெளியிடப்பட்டு சிறுபான்மை மாணவர்களுக்காக அந்நிறுவனங்களில் 50-65 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால் சிறுபான்மை இனங்களை சார்ந்த நூற்றுக்கணக்கான ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெறக்கூடிய வாய்ப்பை முதலமைச்சர் உருவாக்கி தந்துள்ளார். இந்த மாபெரும் உதவிக்காக தமிழக சிறுபான்மை சமூகங்கள் காலம் முழுவதும் நமது முதலமைச்சருக்கு நன்றி கடன்பட்டுள்ளது.
தங்கள் உண்மையுள்ள,
திரு. சா. பீட்டர் அல்போன்ஸ்,
தலைவர், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம்.
Comment