
கண்டிக்கிறோம்! விளம்பரத்தை தடைசெய்ய கோருகிறோம்!
- Author குடந்தை ஞானி --
- Monday, 24 Jun, 2019
ஸ்டார் குழுமத்தின் விஜய் தொலைக்காட்சி வக்கிர மனப்பான்மை யோடு கிறிஸ்தவ சிறுபான்மையினரைச் சீண்டும் விதத்தில் அண்மை காலமாக சூப்பர் சிங்கருக்கான ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பி வருகிறது. இதில் திருமணம் என்னும் அருளடையாளம் ஒரு கத்தோலிக்க ஆலயத்தில் நடைபெறுவது போலவும் குருவானவர் சம்மதமா என்று கேட்கிறபோது மணமகன் தக்க பதில் சொல்லாமல் மாரி மாரி என்று ஒரு கீழ்த்தரமான சினிமா பாடலை ஆலயத்திலே ஆடிப்பாடி துள்ளுவது
போல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் விஜய் தொலைக்
காட்சி நிறுவனத்தாரை வன்மையாகக் கண்டிக் கிறோம். இதனை நிறுத்திக் கொள்ளும்படி எச்சரிக்கிறோம். இந்த விளம்பரம் எடுக்க உதவிய கத்தோலிக்க ஆலயமும் அதன் நிர்வாகமும் கண்டனத்திற்குரியதே!
Comment