No icon

பாராளுமன்றத் தேர்தல் வருகிறது - நம்மவர் சிந்தனைக்கு!

பாராளுமன்றத் தேர்தல் வருகிறது - நம்மவர் சிந்தனைக்கு!

நல்லிணக்கம் நம் பாதை!  நற்செயல் நம் வாழ்வு!

 

புனிதமும் நேயமுடன் பாரில் மனிதம்

அணியணிசேர் கட்சிக்கே வாக்குரிமை - யெங்களினி

நல்லிணக்கக் கொள்கை இது! எம்மவரின் பாதை என்பேன்!

அல்இணக்கம் தூளாகும் தூற்று!

 

இறை அருளின் அன்புபொழியும் இன்னல்சேர் வன்மக்

கறைபடிந்தார் வெம்மொழியும் வேண்டா -திரைக்கலை

வீரமேன்?வேற்றுரைகள் நம்புதில்லை - அன்புணர்வாய்

பாராளும் நல்லிணக்கம் கோர்த்து!

 

அருள்நெறி நல்லறங்கள், சார்ந்த நலன்கள்

இருளகற்றும் பண்பாட்டின் சொந்தம் - திருக்கோயில்

பொன்னாட்டை ஒற்றுமையை இன்ப அன்பை நல்லிணக்கப்

புன்னகையே கொல்லுமினி காண்!

 

கிறிஸ்தவம் () அல்லாரிடம் நம்முறவு வாஞ்சை

உரையாடல் அன்பாலே பூக்கும் கரைபட்ட

கதாலங்கள் இளங்கினிமேல் வாராது! நாவினிக்க

ஞாலங்கள் நமதென்போம் சேர்ந்து!

 

ஆதாரம் யேசுவழி அன்பமைதி பாரினிலே

வேதாந்த மூளைஉடல் இசுலாமும் - போதிமரம்

பௌத்தம் இதழ்களாய் நல்சமணம் கைகளாய்

ஒளடதம் நல்லிணக்கம் ஆகு!

 

வாழ்க்கைக்குப் பாதைசொன்ன ஆன்றோர் சமயங்கள்

பாழ்பட்டு கட்சிகளாய் அன்பில்லா! சீழ்பிடித்த

உள்ளம் வழிபாட்டில் பண்பாட்டில் நல்லிணக்கம்

கொள் அதுவே ஆன்மிக மாண்பு

 

நாட்டின் மரபுகள் வேற்று சமயத்தின்

கோட்பாடும் நம்மவரும் போற்றவேண்டும் - நாட்டின் மேல்

பற்றும் உரிமைக்குப் போராடும் பண்பினரைப்

பற்றிவாழும் நல்லிணக்கம் போற்று!

 

சாதிமுறை நல்சமய பேர்விழாக்கள் யாவுமே

மோதும் குழப்பத்திற் கல்லவே - "யாதுமூரே

யாவரும் கேளீர்"  "பிறப்பொக்கும்" பாதையே

ஓவியமாய் தந்தவரம் ஓது!

வெட்டிவயல் வளவன்

Comment