No icon

தமிழில்: முனைவர் சி.ஜெ.ரோஸ்

உலக அமைதிக்காக திருத்தந்தை திறந்த வாசல்

கத்தோலிக்க திருஅவைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் முதன் முதலாக ஒரு வளைகுடா நாடு சென்று மக்களை சந்தித்து, அங்கு பொது வெளியில் திருப்பலி நிறைவேற்றி புதிய வரலாறு படைத்துள்ளார். 
1971ல் ஏழு எமிரேட்டுகள் இணைந்து உருவானது ஐக்கிய அரபுக் குடியரசுகள் (ருnவைநன ஹசயb நுஅசையவநள -ருஹநு)  என்னும் கூட்டமைப்பு. அரசர் ஆட்சி நிலவும் இத் தேசத்தில் குடிமக்கள் அனைவரும் ஒரே மனதுடன் பாதுகாப்பாக இங்கு வாழ்கிறார்கள்.  இவ்வுண்மையை உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.  உலகத் தலைவர்கள் வெளிப்படையாக பாராட்டியும் உள்ளனர். 
இந்த ஆண்டை (2019) ஐக்கிய அரபுக் குடியரசுகள் ‘சகிப்புத்தன்மை ஆண்டு’ என சிறப்பிக்கிறது. இதற்கு மெருகூட்டும் வண்ணம் திருத்தந்தை பிரான்சிஸ் அழைக்கப்பட்டார். பிப்ரவரி மாத முதல் வாரத்தின் மூன்று நாள்கள் அவரது நிகழ்ச்சிகள் அங்கு இடம் பெற்றன. கிழக்கு - மேற்கு பிரதேசங்களிடையே நிலவி வரும் மோதல்கள் தணிந்து, மனம் திறந்த உரையாடல்கள் மூலம் சகோதரத்துவத்தின் வாசல்கள் திறக்கப்படவும் முழு அமைதி அங்கு தவழவும் திருத்தந்தையின் இப்பயணம் வழிவகுத்துள்ளது.
திருத்தந்தையின் ஐக்கிய அரபுக் குடியரசுகள் பயண நாள்களின்போது எகிப்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இசுலாமிய இறையியல் மேதையும் அல் அஸ்கர் க்ரான்ட் இமாமுமான முனைவர் அஹ்மத் அல் த்வியிப் அங்கு வருகைபுரிந்தார். இதனால்
இவர்கள் இருவரிடையே நிகழ்ந்த சந்திப்பும், நேரடி உரையாடல் களும் கிறிஸ்தவ-இசுலாமிய சகோதரத்துவத்தின் புதிய அத்தி யாயங்களை உருவாக்கி யுள்ளன. 
சகிப்புத்தன்மை ஆண்டை முன்னிட்டு ‘உலக மானுட சகோதரத்
துவ மாநாட்’டினை  ஐக்கிய அரபுக் குடியரசுகள் ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாடும் அதனை தொடர்ந்து, திருத்தந்தையும் இமாமும் பிப்ரவரி
4-ல் கையொப்பமிட்ட ‘கிறிஸ்தவ
-இசுலாமிய சகோதரத்துவ கூட்டறிக் கை’யும் எதிர்காலத்திற்கான திசை காட்டிகளாகும்.
அபுதாபி உடன்பாடு
திருத்தந்தையும் இமாமும் கையொப்பமிட்ட கூட்டறிக்கைக்கு ‘அபுதாபி உடன்பாடு’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  ஐக்கிய அரபுக்
குடியரசுகளின் தலைநகர் அபுதாபி.
அபுதாபி உடன்பாட்டின் நெடுந் தலைப்பு உள்ளத்தை ஈர்க்கிறது: “கெய்ரோயில் எகிப்திய மசூதியின் ஷெரிப்பும் கிழக்கும் மேற்கும் உள்ள இஸ்லாமியரும், கிழக்கும் மேற்கும் உள்ள கத்தோலிக்க திருஅவையும் இறைவனின் பெய ரால் அறிக்கையிடும் உடன்பாடு”. உடன்பாட்டின் முகவுரை வார்த்தை
கள் கவனத்திற்குரியன. “உரை
யாடல் பண்பாட்டை ஏற்றுக்
கொண்ட நாங்கள், அப்பண் பாட்டையே எங்களிடையே நிலவும்
ஒத்துழைப்பிற்கான நடைமுறை நியதியாகவும் ஏற்றுக் கொள்கி றோம்”.
அபுதாபி உடன்பாட்டின் உள்ளடக்கம் உலக நாட்டு, சமயத் தலைவர்களை உசுப்பத்தக்கது: “சமயங்கள் எதுவும் போரையோ, தீவிரவாதத்தையோ மூட்டுதல் கூடாது. சமயங்களின் உண்மை படிப்பினைகளான நீதி, பரந்த அறிவு, அன்புடமை ஆகிய பண்பு
களை மானுடம் போற்ற வேண்டும்.
மானுடர் யாவரும் தமக்கு விருப் பமான சமய நம்பிக்கையை தழுவ சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். ஏக பண்பாட்டு ஆதிக்கம் மானுடர் மேல் சுமத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். நீதி நெறி உணர்த்தும் சுய மதிப்பு ஒளிரும் வாழ்க்கையைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மையும் ஒருவருக்கு ஒருவர் மதிக்கும் கலாச்சாரமும் பரப்பப்பட வேண்டும்”. 
அபுதாபி உடன்பாடு மேலும் கூறுகிறது: “சமய நம்பிக்கையாளர்கள் உரையாடல்கள் மூலம் வாழ்க்கை விழுமியங்களையும், அறப்பண்புகளையும் தம் செயல்பாடுகளில் பிரதிபலிக்க வேண்டும். அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். குடியுரிமைகளும், நீதி உணர்வில் நிலைத்த ஏனைய உரிமைகளும் கடமைகளும் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் பயிற்சி நிறுவனங்களிலும் இந்த உடன்பாடு பற்றிப் புரிதலும், விவாதமும் உருவாக ஏற்பாடு செய்தல் நன்று”. 
போர் கூடாது, நீதி மறுத்தலும் கூடாது
உடன்பாட்டில் கையெழுத்து பதித்த பின்னர் திருத்தந்தை ஆற்றிய உரை உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. உள்நாட்டு போர்களாலும், கலகங்களாலும் துவண்டு வரும் சில அரபு நாடுகளை திருத்தந்தை மேற்கோள் காட்டினார்.  போரையும், அநீதியையும் இணைந்து உலக நாடுகள் எதிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். 
உள்நாட்டு கலகங்களும், போர்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேற்கு ஆசியச் சூழலில் ஒரு வளைகுடா நாட்டிற்குச் சென்று தான் சொல்ல நினைத்ததை சரியாக பிட்டு வைத்து பாராட்டுகளும் பெற்று மீண்டுள்ளார் திருத்தந்தை. உலக அமைதி ஏற்பட கிழக்கிலும், மேற்கிலுமுள்ள நாடுகளிடையே உரையாடலும், உறவாடலும் ஏற்பட வேண்டுமென பத்து ஆண்டுகளுக்கு முன் ஜோர்தான் நாட்டு அரசர் அப்துல்லா விடுத்த அறைகூவலின் தொடர்ச்சியாக திருத்தந்தையின் பயணம் அமைந்துள்ளது என ஒப்பமைவுலகு (றடிசடன டிசனநச) நோக்கர்கள் கணிக்கின்றனர். பல இஸ்லாமிய நாடுகளில் ஏற்கெனவே பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பரந்துபட்ட ஒரு குறிக்கோளை முன்னிறுத்திச் செயல்படுகிறார் என்பதை இப்போது உணர முடிகிறது.
முதல் திருப்பலி. அமைதி பரிசு
வளைகுடா பிரதேசத்தில் திருத்தந்தை ஒப்புக்கொடுத்த முதல் திருப்பலியின்போது ஆற்றிய
மறையுரையில் அபுதாபி உடன்பாட்டில் தொனித்த கருத்துகளை விளக்கிக் கூறினார். 
உலகில் அமைதியும், நாடுகளுக்கிடையே இணக்கமும் உருவாகி நிலைப்பதற்கு, சமயங் களிடையே புரிதலும் உறவும் ஏற்பட உழைப்போரை ஊக்குவிப்பதற்காக ‘மானுட சகோதரத்துவ பரிசு’ (ழரஅயn குசயவநசnவைல ஹறயசன)  திருத்தந்தையின் இப்பயணத்தின்போது நிறுவப்பட்டது. ஐக்கிய அரபுக் குடியரசுகளின் அழைப்பை ஏற்று திருத்தந்தை மேற்கொண்ட இத்திருப்பயணம் உலக அமைதி ஏற்படப் பதித்த உறுதியான சுவடு என்பதில் ஐயமில்லை.  
வழக்கத்திற்கு மாறாக, அரசரும் இளவரசரும் அவர்கள் குடும்பத்தினரும் விமான நிலையத்திற்கு நேரடியாக வந்து திருத்தந்தையை வழியனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
- நன்றி: மாத்ரு பூமி, மலையாள நாளிதழ் 
(14- 02- 2014)
 

Comment