No icon

திருத்தந்தை பிரான்சிஸின் 30வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்

“நாம் இணைந்து நடைபயில்வோம்“ என்ற அழைப் புடன், திருத்தந்தை பிரான்சிஸ், மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை ருமேனியா நாட்டிற்குத் தனது முப்பதாவது திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார். 
திருத்தந்தை, தனது 30வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணமாக, காலை 8.15 மணிக்கு உரோம் பன்னாட்டு பியூமிச்சினோ விமான நிலையத்திலிருந்து, ஆல்இத்தாலியா ஹ320 விமானத்தில், ருமேனியத் தலைநகர் புக்காரெஸ்ட்டுக்குப் புறப்பட்டார். திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பயணத்திற்கு முன்பும் பின்பும் உரோம் மேரி மேஜர், அன்னை மரியா பசிலிக்கா சென்று செபிப்பது வழக்கம். மே 30 ஆம் தேதி மாலையே திருத்தந்தை அங்கு சென்று செபித்தார். தம் இல்லத்தில் உரோம் நகரில் வீடின்றி வாழ்கின்ற 15 ருமேனிய நாட்டவரை, தாம் புறப்படுவதற்கு முன்பு  சந்தித்து வாழ்த்தினார். புக்காரெஸ்ட் நகருக்குப் பயணம் மேற்கொண்ட 2 மணி 20 நிமிட நேரத்தில், வழியில் கடந்து சென்ற இத்தாலி, குரோவேஷியா, போஸ்னியா-எர்செகொவினா, மொந்தெநெக்ரோ, செர்பியா, பல்கேரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு, நல்வாழ்த்தும், செபமும் நிறைந்த தந்திச் செய்திகளையும் திருத்தந்தை அனுப்பினார்.
புக்காரெஸ்ட் காட்ரோசெனி  மாளிகையில் வரவேற்பு
மே 31, காலை 11.09 மணிக்கு, புக்காரெஸ்ட் நகரின் ஹென்றி கோண்டா ஓட்டோபெனி  பன்னாட்டு விமானத்தளத்தைச் சென்றடைந்த திருத்தந்தையை, ருமேனிய அரசுத்
தலைவர்  கிளவுஸ் வெர்னர் யோகானிஸ்
தனது துணைவியாருடன் வரவேற்றார். மரபு உடைகளில் இரு வளரிளம் பருவத்தினர், மஞ்சள் நிற
ரோஜா மலர்க் கொத்தை திருத்தந்தையிடம் கொடுத்து வரவேற்ற னர். சிவப்புக் கம்பளத் தில், அரசுத் தலை வருடன் நடந்து
வந்த வேளை
யில், திருஅவை மற்றும் முக்கிய அரசு
அதிகாரிகளை ஒவ்
வொருவராக  திருத்தந்தை
பிரான்சிஸ் வாழ்த்தினார். அங்கு இரு பக்கங்களிலும், வத்திக்கான் கொடிகளுடன் நின்றுகொண்டிருந்த பொதுமக்களும் திருத்தந்தையை வாழ்த்தினர். திருத்தந்தையும், அரசுத் தலைவரும், விமானத்தளத்திலுள்ள பிரமுகர்கள் அறையில் சிறிதுநேரம் இருந்தபின்னர், அங்கிருந்து 19 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, காட்ரோசெனி அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றனர்.  இவ்விடத்தில், திருத்தந்தைக்கு அதிகாரப்பூர்வ அரசு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அம்மாளிகையில் விருந்தினர் நூலில் திருத்தந்தை பிரான்சிஸ் கையெழுத்திட்டார். ருமேனியத் திருத்தூதுப்பயணத்திற்கென தயாரிக்கப்பட்ட பதக்கம் ஒன்றை, அரசுத்தலைவருக்கு அன்பளிப்பாக அளித்தார். அதில் ருமேனியா நாட்டு வரைபடமும், அன்னை மரியாவைக் குறிக்கும் வகையில் ‘ஆ’ என்ற எழுத்தும், அதற்குமேல் வெற்றியைக் குறிக்கும் விதமாக, 12 விண்மீன்கள் கிரீடமும், ருமேனியா, இறைவனின் அன்னையின் தோட்டம் எனப் பொருள்படும் விதத்தில், அப்பதக்கத்தைச் சுற்றிலும், ரோஜா மலர்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த மாளிகையில் அரசுத்தலைவரையும், பிரதமர் வாசிலிக்கா வியோரிக்கா அவர்களையும், தனித்தனி அறைகளில் சந்தித்து கலந்துரையாடினார்.  பின்னர், ருமேனியாவின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்பில் முதலில் அரசுத்தலைவர் வரவேற்று உரையாற்றினார். இவ்வுரைக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ருமேனியாவுக்கான தனது முதல் உரையை வழங்கினார். இச்சந்திப்பு முடிந்து, புக்காரெஸ்ட் திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வும் எடுத்தார்.
 ருமேனிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையுடன் சந்திப்பு 
மே 31, வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 3.35 மணிக்கு, புக்காரெஸ்ட் நகரிலுள்ள, ருமேனிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையின் மாளிகைக்குச் சென்று முதுபெரும் தந்தை டானியேல் அவர்களையும் ருமேனிய ஆர்த்தடாக்ஸ் மாமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தார். முதலில் முதுபெரும் தந்தை டானியேல் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார். இதற்குப் பின்னர், வெள்ளி மாலை 4.45 மணிக்கு, ஆர்த்தடாக்ஸ் சபையின், மக்களின் மீட்பு தேசியப் பேராலயத்திற்குத் திறந்த காரில் திருத்தந்தை பிரான்சிஸ் முதுபெரும் தந்தை டானியேல் அவர்களுடன் சென்று, அங்கு நடைபெற்ற செப வழிபாட்டில் கலந்துகொண்டார். முதுபெரும் தந்தை டானியேல்  திருத்தந்தையை வரவேற்றபின், திருத்தந்தையும், ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே!’ என்ற செபம் பற்றி உரையாற்றினார். இறுதியில் எல்லாருடனும் சேர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ், அச்செபத்தைச் செபித்தார். முதுபெரும் தந்தை டானியேல் அவர்களுக்கு, புனித பவுல் அவர்கள் பிறந்ததன் இரண்டாயிரமாம் ஆண்டையொட்டிய நினைவுப் பரிசு ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
புக்காரெஸ்ட் ஆர்த்தடாக்ஸ் சபை பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பின்னர், அங்கிருந்து 3.1 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, புக்காரெஸ்ட் புனித யோசேப்பு கத்தோலிக்கப் பேராலயத்திற்குத் திறந்த காரில் சென்றார். 
1875க்கும், 1883 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்ட இந்தப் பேராலயத்தில், ஒவ்வோர் ஆண்டும், ஆர்கன் பன்னாட்டு இசை விழா நடைபெறுகின்றது. இங்கு, மறைசாட்சியான அருளாளர் விளாடிமிர் கிக்கா  மற்றும், திருத்தந்தை புனித 2 ஆம் ஜான் பால் அவர்களின் புனிதப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. திருத்தந்தை, இப்பேராலயத்திற்குச் சென்ற வேளை, அது விசுவாசிகளால் நிறைந்திருந்தது. அன்னை மரியா எலிசபெத்தம்மாளைச் சந்தித்த விழாவான மே 31, வெள்ளி
யன்று, திருத்தந்தையும், இப் பேராலயத்தில், இவ்விழாத் திருப் பலியை நிறைவேற்றினார். ஆயி
னும், திருத்தந்தை பிரான்சிஸ், புக்காரெஸ்ட் நகரில் நிறைவேற்றிய இந்த முதல் திருப்பலியில், பேராலயத்திற்கு வெளியே அமர்ந்தும், பெருமளவில் கத்தோலிக்கர் கலந்துகொண்டனர். திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், விசுவசிப்பவரும், சந்திப்பையும், ஒன்றிணைந்து நடைபயில்வதையும் ஊக்குவிப் போர் பேறுபெற்றோர். அன்னை மரியா, சந்திப்பு மற்றும் மகிழ்ச்சியின் எடுத்துக்காட்டு. சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்கு வியுங்கள் என அழைப்பு விடுத்தார். இத்திருப்பலியில் கடைசி ஆசீருக்கு முன்னர், புக்காரெஸ்ட் பேராயர்  யோவான் ரோபு, திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். இதே புனித யோசேப்பு பேராலயத்தில்தான், இருபது ஆண்டுகளுக்கு முன்னர், புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 1999 ஆம் ஆண்டு, மே 8 ஆம் தேதி திருப்பலி நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருப்பலியை நிறைவுசெய்து, புக்காரெஸ்ட் திருப்பீட தூதரகத்திற்குத் திருத்தந்தை சென்றபோது,  இரவு ஏறத்தாழ 8 மணியாக இருந்தது. அங்கு, ருமேனியாவில் பணியாற்றும், 22 இயேசு சபையினரை, ஏறத்தாழ ஒரு மணிநேரம் சந்தித்து கலந்துரையாடினார். இத்துடன் முதல் நாள் பயணம் முடிவுக்கு வந்தது. 

திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாள்

ஜூன் 01, சனிக்கிழமையும் திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவேற்றிய திருப்பலிகள், அன்னை மரியாவை மையப்படுத்தியே நிகழ்ந்தன. காலநிலை காரணமாக, சனிக்கிழமை காலையில், பயணத் திட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே, புக்காரெஸ்ட் திருப்பீட தூதரகத்திலிருந்து காரில் புறப்பட்ட திருத்தந்தை, பக்காயுக்குச் செல்லாமல், டார்குமூரஸூ நகருக்குச் சென்றார். அந்நகர் விமானத்தளத்தை உள்ளூர் நேரம் காலை 8.20 மணிக்கு, அதாவது, இந்திய-இலங்கை நேரம், சனிக்கிழமை காலை 10.50 மணிக்குச் சென்றடைந்த திருத்தந்தை, அங்கிருந்து காரில், ருமேனியாவில் புகழ்பெற்ற சுமுலேயு சியுக் அன்னை மரியா திருத்தலம் சென்றார். அத்திருத்தல வளாகத்தில், பெருமளவான ஹங்கேரி நாட்டவர் உட்பட, ஏறத்தாழ இரண்டு இலட்சம் விசுவாசிகள்  பலவண்ண, மழை மற்றும் குளிர் ஆடைகளுடன் அமர்ந்திருந்தனர். ஏனெனில், இத்திருத்தலம் அமைந்துள்ள பகுதியில் ஏறத்தாழ 6 இலட்சம் ஹங்கேரி நாட்டவர் வாழ்கின்றனர். இந்த வளாகத்தில் திறந்த காரில் வந்து, இலத்தீனில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலியைத் தொடங்கினார். இத்திருப்பலியில், ஹங்கேரி நாட்டு அரசுத்தலைவர் யானோஸ் ஏடர், ருமேனிய பிரதமர் வாசிலிக்கா வியோரிக்கா  மற்றும்  சுலோவாக்கியா, செர்பியா, உக்ரைன் நாடுகளின் விசுவாசிகளும் கலந்துகொண்டனர். 
தங்க ரோஜா காணிக்கை
சுமுலேயு சியுக்  அன்னை மரியா திருவுருவத்திற்கு, “தங்க ரோஜா”வைக் காணிக்கையாக  திருத்தந்தை பிரான்சிஸ் அளித்தார். செடி போன்ற அமைப்பை உடைய இந்த காணிக்கை, ஏறத்தாழ 84 செ.மீ. நீளமும் 1,200 கிராம் எடையையும் கொண்டது. இதன் காம்பும்,  இலைகளும் வெள்ளியாலும், அடிப்பாகம் பளிங்கினாலும் ஆனவை. இதிலுள்ள ரோஜா மலர்கள் 24 காரட் தங்கத்திலானவை. திருத்தந்தையின் இலச்சினையையும் இச்செடியில் பொறிக்கப்பட்டுள்ளது.
சுமுலேயு சியுக் அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில், அல்பா லூலியா பேராயர், ஜார்ஜ் மிக்கேலோஸ்  திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். இத்திருப்பலியை நிறைவு செய்து திருத்தந்தை பிரான்சிஸ். அருகில் உள்ள பேராயர் இல்லம் சென்றார். அந்த இல்லத்திற்கு, மரத்தாலான அழகான இயேசுவின் திருஇருதயப் படம்
ஒன்றை அன்பளிப்பாக அளித்தார்.
அந்த இல்லத்தில், மாற்றுத்திற னாளிகள் சிலரையும் திருத்தந்தை சந்தித்து வாழ்த்தினார். அதன் பின்னர் மதிய உணவருந்தி, ஹெலிகாப்டரில் டார்கு மூரஸ்  சென்று அங்கிருந்து  விமானத்தில் மோல்டாவியா மாநிலத்திற்குச் சென்றார் அம்மாநிலத்தின் லாசி 
நகரில், அரசியாம் அன்னை மரியா
பேராலயம் சென்றார்.  பின்னர், மாலை 5.30 மணியளவில் அந்நகரின் கலாச்சார மாளிகை வளாகத்தில் இளையோரை, அவர்கள் குடும்பத்தினருடன் சந்திக்கும் நிகழ்வு நடைபெறுகின்றது.
ஐந்து மணியளவில் யாஜ் (ஐயși) நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். ருமேனியாவில் இரண்டாவது பெரிய நகரமான யாஜ், வரலாற்று சிறப்புமிக்க மோல்டாவியா மாநிலத்தின் தலைநகரமாகும். பாஹூலி  நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகர், 1916ம் ஆண்டு முதல், 1918ம் ஆண்டு வரை, ருமேனியாவின் தலைநகரமாகவும் விளங்கியது.  ருமேனிய வரலாற்றின் அடையாளமாகவும், அந்நாட்டின் சமூக, கலாச்சார, கல்வி மற்றும், கலை வாழ்வில் முன்னணியாகவும் உள்ளது. ருமேனியாவின் யாஜ் நகரின் கத்தோலிக்கப் பேராலயத்தில், வயதானவர்களைச் சந்தித்தபின், அதற்கருகிலுள்ள அந்நகரின், கலாச்சார மாளிகை வளாகம் சென்றார். அவ்விடத்தில் விழாச் சூழலில் கூடியிருந்த, ஏறத்தாழ ஒரு இலட்சம், இளையோர், சிறார் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் திறந்த காரில் சென்றார். இந்நிகழ்வில், முதலில், மரபு ஆடைகளை அணிந்திருந்த நான்கு சிறார்கள், மலர்கள் கொடுத்து, திருத்தந்தையை வரவேற்றனர். இச்சிறாருடன் மேடையில் ஏறிய திருத்தந்தை, அன்னை மரியா திருவுருவத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். 
இந்நிகழ்விலும் மக்கள் பேரலையெனத் திரண்டிருந்தனர். இந்நிகழ்வை நிறைவுசெய்து, யாஜ் நகரிலிருந்து, புக்காரெஸ்ட் நகருக்கு ஒரு மணி நேரம் விமானப் பயணம் செய்து, அந்நகர் விமானத்தளத்தை அடைந்தபோது, உள்ளூர் நேரம் இரவு 8.05 மணியாக இருந்தது. இத்துடன்  இரண்டாம் நாள் சனிக்கிழமை பயண நிகழ்வுகள் நிறைவுற்றன.

மூன்றாம் நாள்
ஜூன் 02, ஞாயிறு திருத்தந்தையின் ருமேனியத் திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாள். இன்று காலையில், புக்காரெஸ்ட் திருப்பீடத் தூதரகத்தில் தனக்கு உதவிய
அனைவருக்கும் நன்றி சொல்லி, திருத்தந்தை பிரான்சிஸ் தனது இலச்சினை அமைக்கப்பட்ட அழகான கலைப் பொருள் ஒன்றை அன்பளிப்பாக அளித்தார். பின்னர், உள்ளூர் நேரம் காலை 8 மணிக்கு, அங்கிருந்து விமான நிலையம் சென்று, சிபியு நகர் சென்று, அங்கிருந்து பிளாஜ் (க்ஷடயத) நகருக்குக் காரில் சென்றார். திருத்தந்தை பிரான்சிஸ். சின்ன உரோம் என அழைக்கப்படும் பிளாஜ் நகரம், டிரான்சில்வேனியவில், ருமேனிய கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையின் சமய மற்றும் கலாச் சாரத்தின் முக்கிய மையமாகும். 
இந்நகரின் சுதந்திர வளாகத்தில், இச்சனிக்கிழமை உள்ளூர்
நேரம் காலை 11 மணிக்குத் தொடங்கிய கிரேக்க வழிபாட்டு முறை இறைவழிபாட்டில், கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையின், ஏயடநசரை கூசயயைn குசநnţரை, ஏயளடைந ஹகவநnநை, ஐடியn ளுரஉரை, கூவை டுiஎரை ஊhiநேணர, ஐடியn க்ஷăடயn, ஹடநஒயனேசர சுரளர, ஐரடரை ழடிளளர ஆகிய ஏழு மறைசாட்சி ஆயர்களை, அருளாளர்களாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார். இவர்களில், குசநnţரை, ஹகவநnநை, ளுரஉரை, ஊhiநேணர
ஆகிய நான்கு அருளாளர்களும், கம்யூனிச ஆட்சியில், சிறையிலேயே இறந்தனர். க்ஷăடயn, சுரளர, ழடிளளர ஆகிய மூவரும், சிறையில் அனுபவித்த கடும் சித்ரவதைகளால் பின்னர் இறந்தனர். 1948 ஆம் ஆண்டு நவம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், கிரேக்க-கத்தோலிக்க ஆயர்கள் அனைவரும், கம்யூனிச அரசால் கைது
செய்யப்பட்டனர். அதிலிருந்து, 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி கம்யூனிச ஆட்சி முடியும் வரை, வத்திக்கான் வானொலி, ருமேனியக் கத்தோலிக்கருக்கென திருவழிபாட்டை ஒலிபரப்பியது குறிப்பிடத்தக்கது.
இவ்வழிபாட்டில், ஏறத்தாழ அறுபதாயிரம் விசுவாசிகள் கலந்துகொண்டனர். இந்த இறை வழிபாட்டின் இறுதியில் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த இறைவழிபாட்டை நிறைவுசெய்து, பிளாஜ் நகர் பேராயர் இல்லம் சென்று மதிய உணவருந்தி, சிறிதுநேரம் ஓய்வும் எடுத்தார். ஜூன் 02 ஆம் தேதி உள்ளூர் நேரம் மாலை
3.40 மணிக்கு, சுடிஅ நாடோடி இன சமுதாயம் வாழ்கின்ற க்ஷயசரெ டுயரவயசர பகுதிக்குக் காரில் சென்று, அவர்களைச் சந்தித்து திருத்
தந்தை பிரான்சிஸ் உரையாற்றி னார். இம்மக்கள், பிளாஜ் நகரின்
மிகப்பழைய இடத்தில் வாழ் கின்றனர். அந்நிகழ்வில், சுடிஅ நாடோடி இனச் சிறார் பாடிய பாடலில் மகிழ்ந்து அவர்களை ஆசீர்வதித்தார். அவ்வினச் சமு
தாயத்தின் ஆலயத்திற்கு, திருநற்கருணை கதிர் பாத்திரம் ஒன்றையும், திருப்பலிப் பாத்திரம் ஒன்றையும் திருத்தந்தை பிரான்சிஸ்
அன்பளிப்பாக அளித்தார். பின்னர், பிளாஜ் நகரிலிருந்து,
சிபியு நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். சிபியு விமானத்தளத் தில், ருமேனிய அரசுத்தலைவர் திருத்தந்தைக்குப் பிரியாவிடை அளித்து, நன்றியுடன் உரோம்
நகருக்கு அனுப்பி வைத்தார். இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ்அவர்களின் முப்பதாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக அமைந்த ருமேனியா நாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது.

Comment