No icon

புனித தேவசகாயத்தை

இழிவுபடுத்தும் கட்டுரைக்கு கிறிஸ்தவர்கள் கண்டனம்

RSS இந்து சார்பு இதழ் ஒன்று, தேவசகாயம் பிள்ளையைதிருடன் என்றும், ‘மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும் அழைத்திருப்பது கிறிஸ்தவர்களிடையே பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. RSS இன் குரலாக அறியப்படும், மலையாள மொழி வார இதழான கேசரியில், ஜூன் 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட இதழில் "தேவசகாயம் பிள்ளையும் புனிதப் பாவங்களும்" என்ற தலைப்பில் எழுத்தாளர் முரளி பரபுரத்தின் மூன்று பக்க அளவில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் தேவசகாயம், கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டம் பெறுவதற்கான அனைத்து காரணங்களும் முற்றிலும் போலியானவை, சோடிக்கப்பட்டவை. ஏனெனில் அவரிடம் ஆன்மீக மாற்றம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அக்கட்டுரையில் தேவசகாயம் பிள்ளையை "அவரது குற்றத்திற்காக சுட்டுக் கொல்லப்பட்ட திருடன்" என்றும், "கிறிஸ்தவ மறைப்பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மதமாற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்" என்றும், "கிறிஸ்துவம் தனது மத நலன்களை மேம்படுத்துவதற்காக போலி ஆவணங்கள் மூலம் வரலாற்றை திரித்தது" என்றும் பல ஆட்சேபகரமான கருத்துகளைக் கூறியிருந்தார்.

இது குறித்து கேரள கத்தோலிக்க ஆயர்கள் ஆணையத்தின் சமூக நல்லிணக்கம் மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் செயலாளர் அருள்தந்தை மைக்கேல் புலிக்கால், ஜூன் 24 ஆம் தேதி UCA  செய்தி நிறுவனத்திடம்," RSS பத்திரிகை மக்களிடையே அவநம்பிக்கையையும் குழப்பத்தையும் உருவாக்கி, அதன்மூலம் வகுப்புவாத முரண்பாடுகளைத் தூண்டுகிறது. RSS ஒருபுறம் இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களில் 2.3 சதவிகிதமாக உள்ள கிறிஸ்தவர்களுடன் நட்புடன் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது, மறுபுறம் அது அவர்களை இழிவுபடுத்த முயற்சிக்கிறது.  RSS  இன் இந்த நிலைப்பாடு ஒரு இரட்டை நிலைப்பாடுநாங்கள் அமைதியை நேசிப்பவர்கள். எங்கள் நன்மைக்காக நாங்கள் வரலாற்றைத் திரிக்கவோ அல்லது மதமாற்றங்களில் ஈடுபடவோ இல்லை" என்று கூறினார். கேரளாவை தளமாகக் கொண்ட உலகளாவிய கத்தோலிக்க காங்கிரஸின் தலைவர், வழக்கறிஞர் பிஜு பராயநிலம்,"இந்த கட்டுரை இந்திய கிறிஸ்தவர்களை இழிவுபடுத்துவதற்காக வெளியிடப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறினார். தீங்கிழைக்கும் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்குமாறு மாநில அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

Comment