சருகணியின் ஞானி
இறை ஊழியர் தந்தை லெவே சே.ச.
- Author வெட்டிவயல் வளவன் --
- Wednesday, 26 Jun, 2019
புரட்சிச் சிந்தனையும் ஆன்மிக எழுச்சியும் நிறைந்த பிரான்சு மண்ணில் ரென் மறைமாவட்டத்து லையே
என்பது அழகான ஊராகும். இவ்வூரில், உழவர் குடும்பத்தில் இறைபக்தி மிகுந்த ஜோசப் லெவே, ஜூலியானா லெபினே என்ற பெற்றோர்க்கு இரு ஆண்டுகள் வரை குழந்தைகள் இல்லை (12.10.1865ல் திரு
மணம்). குழந்தை வரம் வேண்டி 150 கி.மீ. தொலைவிலுள்ள புனித அன்னம்மாள் கோயிலுக் குப் பாத யாத்திரை சென்றனர். அதன் பின்னரே, 5 சகோதரர்கள் 4 சகோதரிகளுடன் பத்தாவது குழந்தையாக லெவே 6.4.1884 அன்று பிறந்தார். லூயி மரி லெவே என்று திருமுழுக்கு கொடுத்தனர். ஆறுவயதில் “லூயி நீ ஒரு குரு” என்ற அக்காளின் குரலொலியும், 12 வயதில் தம் பங்கின் உதவிப் பணியாளர் மூலமும் இறை அழைத்தல் மணியோசையால் ஆட்கொள்ளப்பட்டவர். 1904ல் ‘ரென்‘ வித்ரே திருச் சிலுவை கல்லூரியில் சேர்ந்து மறைப்பணியாளர் ஆகும் நிலைக்கு உறுதியானார். 6.10.1906 லிம்பாக்கில் தூளுஸ் மறைமாநில சேசுசபை நவ துறவியாகப் பயிற்சி பெற்றார். 8.9.1908 அன்று மார்செல் துறைமுகம் சென்று இந்தியாவுக்குப் பயணமானார். 14.10.1908 அன்று பம்பாய் வந்து சேர்ந்தார். அங்கு மொழிப் பயிற்சி தத்துவ இயல் (1908-1912) படித்துத்
தேர்ந்தார். 1912 ஏப்ரலிருந்து 1916 முடிய பாளையங் கோட்டை
யில் களப்பணி, கண்காணிப்பாளர் பணியைச் செய்தார். வேற்றுமை யில் ஒற்றுமை, நல்லிணக்கம், எளியோர் தோழமையைக் கைக்
கொண்டார். 13.1.1920 அன்று மங்களூர் ஆயர் பவுலோ பெரினி சே.ச அவர்களால் மறைப்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
பங்குப் பணியாளராக பொறுப்பேற்று, வானம் பார்த்த பூமியாம் சேதுபதி நாட்டில் அன்றைய இராமநாதபுரம் மாவட்டம் ஆண்டாவூரணியிலும் (1921-29.6.1943) இராமநாத புரத்திலும் (1943-22.1.1956) பங்குப் பணியாற்றினார். பணி நிறைவுக் காலம் ஓய்விற்காக 23.1.1956ல் சருகணிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
அந்நாளில் இச் சீமை யின் மையமான சருகணி முக்கியத்துவம் பெற்ற ஊராகும். இந்த ஊருக்குத்தான் தந்தை லெவே தன் இறுதி நாள் களைக் கழிக்க வந்தார்.
ஆன்மிகத் தாகமும் நற்செய்தி பணி ஏவுதலுமுள்ள தால், உடலும் உள்ள மும் ஓய்வு பெறவில்லை. சமூக, சமயப் பணியாளராகச் சருகணிப் பகுதியில் வலம் வந்தார். தன் சுய தேவைகளை நிறைவேற்ற எண்ணாதவர். எளிய உணவு, எளிமையான உடை, எளிய வாழ்வு, ஏழ்மையின் கோலம் இவையெல்லாம் அன் றைய நாட்டுப்புற மக்களின் பிரதிபலிப்பு. அவர் ஒரு செப மனிதர். தன் செப வலிமையில் மக்களை உறுதிப்படுத்தியர். “ஆயn டிக ழுடின’ என்று பொன்னாடு
சே.ச. அவர்களால் வாழ்த்தப் பெற்றவர்.
சமயங்களைக் கடந்து வாழ்ந்தவர். இனங்களைக் கடந்து பணிசெய்தவர். மின் வசதி இல்லாத அக்காலங்களில், அரிக்கன் விளக்கிலும், மெழுகு திரியிலும் திருப்பலி மற்றும் செபித்தல், படித்தல் சமயக் கடமைகளை ஆற்றியவர் இயேசு சபைப் பணியாளர் என்றாலும் மறைமாவட்ட சுதேசிப் பணி யாளராக பயணித்தவர். திரு அவையின் தியாகி மகான் என பிற சமயத்தவரால் போற்றப்பட்டவர்.
மனிதப் புனிதர், சருகணி யில் சகாப்தம், ஏழைப்பங்காளர் விவசாயியின் தோழர், கால்நடை
களின் மருத்துவரய்யா, வேளாண்மை பூச்சி விரட்டிடும்
கிறித்துவில் நம்மாழ்வார் (ளுஉiடி ஊயi ஊசனைனைi-2 திமொ 1:12 புனையோலையில் எழுதி
தந்த இறைவார்த்தை சருகணி யின் ஞானி, செம்மண் பூமிக் கென்றே வானிலிருந்து இறங்கி
வந்த தேவபுறா, தன் இறப்பை முன்னுரைத்த இறைவாக்குறை ஞர், தாத்தாசாமி, குழந்தை தெரசாவின் ஞானக்குழந்தை. புனித அருளானந்தரின் ‘ரோல் மாடல்’, புனித சவேரியாரை அடிவாழை என்ற அத்துணை பரிணாம வடிவம் கொண்ட புகழ்மாலைகளுக்குச் சொந்தக் காரர் தந்தை லெவே ஆவார் என்றால் உண்மையன்றி வெற்றுரையல்ல. தன் சொந்த மண்ணைத் துறந்து, ஒரு தடவைகூட அங்கு செல்லாது நம்மோடு வாழ்ந்த இரத்த உறவுதான் தந்தை லெவே என்று சொன்னால் மிகையே இல்லை.
தந்தை லெவே 13.1.1970 அன்று சருகணியில் மறைப்பணி வாழ்வின் பொன்விழாவைக் கொண்டாடி மகிழ்ந்திருந்தார். 21.03.1973 அவரது இறப்பும் ஒரு சிறப்பாய் சருகணியில் இறைவனடி சேர்ந்தார். இறை ஊழியராக நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2017 அக்டோபரில் உயர்த்தப்பட்டுள் ளார். அருளாளர் பட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சருகணியில் தான் புதுமை நூல்கள், புனிதர் வரலாறுகள், செபங்கள் பனை யோலையில் வடித்து சமயப் பணி ஆற்றிய ஜேம்ஸ் தே ரோசி என்ற சின்னச் சவேரியார் (1736-1774) 1774 அக்டோபர் 12ல் இறைவனடி சேர்ந்து சருகணி ரோகினி ஆற்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தந்தை லெவே இறை வனடி சேர்ந்த மார்ச்சு 21 அன்று சருகணியில் ஆண்டுதோறும் மக்களால் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தந்தை வாழ்ந்தபோதும் நேரில் தரிசித்து ஆசீர் பெற்றவர் பலருண்டு. இன்றும் தந்தை லெவேயின் திருக் கல்லறையைத் தரிசித்தும், அவர் திருக்கல்லறை மண்ணை அருமருந்தாகப் பயன்படுத்தி உடல் உள்ள சுகம் பெற்றவர்கள் பலருண்டு. சருகணியின் ஞானி தந்தை லெவே கல்லறை சென்று தரிசிப்போம். அவரது ஆசீர்பெறுவோம்.
“ஓ! இயேசுவே! அன்பின் அரசே! உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்" (தந்தை லெவே).
Comment