No icon

ஞாயிறு – 09.07.2023

பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு (செக் 9:9-10; உரோ 8:9,11-13; மத் 11:25-30)

தலைகீழ் மாற்றம்!

இன்றைய இறைவார்த்தை வழிபாடுதலைகீழ் மாற்றம்என்னும் சொல்லை மையமாக வைத்துச் சுழல்கிறது.

) பகைமை மறைந்து, அமைதி

இன்றைய முதல் வாசகப் பகுதி, ‘அண்டை நாட்டினருக்கு வரும் தண்டனைஎன்னும் செக்கரியா இறைவாக்குப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ‘அண்டை நாடு தண்டிக்கப்படும்என எச்சரிக்கிற செக்கரியா, வரவிருக்கும் அரசனுடைய பெருமை பற்றிப் பேசுகிறார். மக்கள் அனைவரும் கொண்டாடுவதற்கான காரணம் ஒன்றை அறிவிக்கிறார் செக்கரியா: “மகிழ்ந்து களிகூரு! ஆர்ப்பரி...! உன் அரசர் உன்னிடம் வருகிறார்.” அரசர் எருசலேம் நடுவில் வருவதால் அவர்கள் மகிழ வேண்டும். ‘நீதியுள்ளவர்’, ‘வெற்றி வேந்தர்என்னும் அடைமொழிகளுடன் வருகிற அரசர் எளிமையுள்ளவராக இருக்கிறார். அவருடைய எளிமை ஓர் உருவகமாகத் தரப்பட்டுள்ளது: ‘கழுதையின் மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்!’ வெற்றி பெற்று வருகிற அரசர்கள் குதிரைகள் மேல் ஏறி வருவார்கள். ஆனால், இந்த அரசர் கழுதையின்மேல் ஏறி வருகிறார். மேலும், அரசர் தேர்ப்படைகளையும், குதிரைப்படைகளையும் அழிப்பதுடன், போர்க்கருவிகளையும் ஒழித்துவிடுகிறார். தாம் வெற்றி பெற்ற அரசராக வந்தாலும், போருக்கான காரணிகளை அரசர் வெறுக்கிறார். கழுதையின்மேல் ஏறி வருவது அமைதியின் அடையாளமாகவும் இருக்கிறது. இந்த அரசர் தம் அரச எல்லைகளை விரிவுபடுத்துகிறார். கிறிஸ்தவப் புரிதலில், செக்கரியா குறித்துக் காட்டும் அரசர்இயேசு!’ வெற்றி ஆர்ப்பரிப்போடு அவர் எருசலேம் நகருக்குள் நுழைந்தபோது கழுதையின்மேல் ஏறி வருகிறார். இயேசுவில் செக்கரியாவின் இறைவாக்கு நிறைவேறுவதாக மொழிகிறார் மத்தேயு (21:1-11).  அரசரின் வருகையால் பகைமை மறைந்து, அன்பு பிறக்கிறது. போர் மறைந்து, அமைதி பிறக்கிறது. இச்செயலை நிகழ்த்துகிறவர் கடவுளே!

) குழந்தைகளுக்கு வெளிப்பாடு

நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், ‘ஞானிகளுக்கு மறைக்கப்பட்டு குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஞானத்தைமுன்னிட்டு தந்தையைப் போற்றிப் புகழ்கிறார் இயேசு. இங்கேகுழந்தைகள்என்பதுகுழந்தையுள்ளம்கொண்ட சீடர்களையும், இயேசுவை ஏற்றுக்கொண்ட அனைத்து நம்பிக்கையாளர்களையும் குறிக்கிறது. கடவுள் தாம் விரும்புபவர்க்குத் தம்மை வெளிப்படுத்துகிறார். அவருடைய எதிர்பார்ப்பு யாரும் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில் நடந்தேறுகிறது.

) அழுத்தாத நுகம்

சமய, அரசியல் மற்றும் கலாச்சாரத் தளங்களில் சுமைகள் பல ஏற்று, அல்லல்பட்ட தம் சமகாலத்து மக்களைத் தம்மிடம் அழைக்கிற இயேசு, “நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்என மொழிகிறார்இயேசுவின் கனிவு, அவர் மக்கள்மேல் கொண்ட உறவில் வெளிப்படுகிறது. அவருடைய மனத்தாழ்மை அவருக்கும், தந்தைக்கும் உள்ள உறவில் வெளிப்படுகிறது. மற்ற நுகங்களை நாம் விடுக்க வேண்டுமெனில், இயேசுவிடம் கற்றுக்கொள்ள வேண்டும். இயேசுவிடம் கற்றுக்கொள்ளுதல் நம் சுமையை எளிதாக்குகிறது.

நிற்க: இன்றைய பதிலுரைப் பாடலில் (திபா 145), “ஆண்டவர் இரக்கமும், கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர்எனப் பாடுகிறார் ஆசிரியர். இன்றைய உலகம் முன்மொழியும் பெருமை, புகழ், வெளி ஆடம்பரம் ஆகியவற்றுக்கு முன் இயேசு மொழியும் எளிமை, கனிவு, மனத்தாழ்மை நம்மிலும் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Comment