No icon

நம்மைப் புதுப்பித்துக் கொள்வோம்!

10.03.2019 தவக்காலம் முதல் ஞாயிறு

ஆண்டவர் இயேசுவில் அன்பார்ந்த வர்களே, கிறிஸ்தவ வாழ்வு ஒரு நெடும்பயணம். நிலைவாழ்வே இதன் இலக்கு. இலட்சியப் பயணி
களாகிய நாம், நம்மைத் தன் னாய்வுச் செய்து நமது பாதையில் உள்ள இடையூறுகளை அகற்றி,
குறைகளைக் களைந்து நம்மை
நாமே புதிப்பித்துக் கொள்ளத் தகுந்த காலம்தான் இத்தவக் காலம். புத்துணர்ச்சியுடன் நம்
பயணத்தைத்  தொடர, புத்துரு வாக்கம் பெறும் வேளையும் இதுவே. 
இன்றைய நற்செய்தியில் இயேசு, கழுகைப்போல தன்னைப்
புதுப்பித்துக் கொள்வதை நாம்
காண்கிறோம்.  இயேசு, பாலைவனத்தில் தனித்திருக் கிறார்; பசித்திருக்கிறார்; விழித்திருக்கிகிறார். வலியும் வெறுமையும் நிறைந்த அந்த பாலைநில அனுபவத்தில் அவர் வலிமை யடைகிறார். அலகையின் அனைத்துச் சூழ்ச்சிகளையும்  சிதறடித்துவிட்டு, தம் இலட்சியப் பயணத்தைப் புத்துணர்ச்சியுடன் தொடர்கிறார். 
காலத்தின் போக்கிற்கேற்ப, தன்னைப் புதிப்பித்துக் கொள்ளாத உயிரினங்கள், இயக்கங்கள், கருத்தியல்கள் எதுவும் வெகுதூரம் வரலாற்றில் பயணிப்பதில்லை. அவை முடங்கிப் போய், தேங்கி விடுகின்றன. இது இயற்கை கற்றுத் தரும் பாடம். விண்ணகப் பயணிகளாகிய நாமும், இறைவேண்டல்  மற்றும் உண்ணா நோன்பு ஆகியவற்றால்  நம்மையே ஒடுக்கி, நம்மைநாமே புதுப்பித்துக் கொள்வோம். நம் பிறரன்புப் பணிகள் வாயிலாக, இறையன்பை வெளிப்படுத்துவோம். அதற்கான அருள்வரங்ளைத் இத்திருப்பலியில் இறைஞ்சுவோம். 
முதல் வாசக முன்னுரை (இணைச்சட்டம் 26:4 - 10) 
துன்பங்களின் மிகுதியால், ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்பிய இஸ்ரயேல் மக்களைக் ஆண்டவர் கண்ணோக்கினார். கானான் நாட்டை அவர்களுக்கு வழங்கி ஆசியளித்தார் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. நமது இக்கட்டான சூழ்நிலைகளில் ஆண்டவரின் உதவியை நாடி, அவரிடம் சரணாகதி அடையத் தூண்டும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 91:1-2, 10-11, 12-13, 14-15,
பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந் தருளும், ஆண்டவரே.
இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர்10:8-13)
இயேசுவே அனைவருக்கும் ஆண்டவர். அவரை உள்ளுர நம்பி, அவரே ஆண்டவர் என வாயால் அறிக்கையிட, தான் பெற்ற பட்டறிவு வழியாக  நமக்கும் அழைப்பு விடுக்கிறார் திருத்தூதரான புனித பவுல். அவரின் அழைப்பை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்
போம். 
நற்செய்தி வாசகம்: லூக்கா 4:1-13
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்
1. வழிநடத்தும் நல்லாயனே இறைவா! 
திருஅவையை வழிநடத்த நீர் தேர்ந்து கொண்ட எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், அருள்
பணியாளர்கள், துறவியர், திரு
நிலையினர் ஆகிய அனை
வருக்கும் ஆசியளித்து அவர்
களை உம் தூய ஆவியாரின் கொடைகளாலும் கனிகளாலும் நிறைத்துக் காத்தருளும். அவர்கள் உம் திருவுளத்திற்கேற்ப வாழ்ந்து, மிகுந்த கனிகளைத் தர நீரே அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அம்மையப்பனே அன்பு இறைவா!
பயங்கரவாதத்தால் பேரிழப்பைச் சந்தித்து வரும் உம் மக்களாகிய எங்கள் மீது பரிவிரக்கம் கொள்ளும். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்
தையும் உம் அன்புக் கரங்களால் அரவணைத்து, தெய்வீக ஆறுதலளித்து அவர்களின் புதுவாழ்விற்க்கு ஏதுவான வழியமைத்துத் தர வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.        
3. அருளின் ஊற்றே தந்தாய்!
தவக்காலம் என்னும் அருளின் காலத்தைத்
தொடங்கியிருக்கும் நாங்கள், இறைவேண்டல், உண்ணாநோன்பு, ஒறுத்தல் முயற்சிகள்,  பிறரன்புச் செயல்கள் ஆகியவற்றின் வழியாக உம் பேரருளை மிகுதியாகப் பெற்று, எம் ஆன்மிக வாழ்வில் இனிமை காணும் புதிய இதயத்தைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 
4. அனைத்தையும் புதிதாக்கும் தந்தாய்!
நிறைவாழ்வை நோக்கிப் பயணிக்கும் நாங்கள், எங்களைத் தன்னாய்வு செய்து, எங்களிடமிருக்கும் குறைகளைத் தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, எங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சிகளை முன்னெடுக்கும் திறந்த உள்ளதை எங்களுக்குத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
 5. தாய்போலத் தேற்றுபவரே இறைவா!
தமிழகப் பெண்கள் பணிக்குழுவை வழி
நடத்திக் கொண்டிருக்கும் எம் தலைவர் ஆயர் நீதிநாதன்,
மாநில செயலர், அனைத்து மறை மாவட்ட செயலர்கள், பணிக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு வருக்கும் உமது ஆசிகளை நிறைவாகப் பொழிந்
தருளும். திருச்சபையின் எதிர்காலத்திற்காகவும், பெண்களின் வாழ்வு முன்னோற்றத்திற்காகவும் அவர்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் உமது வல்லமை வெளிப்பட அருள்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Comment