No icon

"பொதுநிலையினரின் தலைமைத்துவத்தை வளர்த்தெடுப்போம்"

30.06.2019 பொதுநிலையினர் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று நம் பங்கில் பொதுநிலையினர் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். "பொதுநிலையினர் தலைமைத்துவத்தை வளர்த்தெடுப்போம்" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் செயல்பட இறைவன் நம்மை அழைக்கிறார்.
திருமுழுக்கின் வாயிலாகக் கிறிஸ்துவோடு ஓருடலாக்கப்பெற்ற இறைமக்கள் அனைவரும் கிறிஸ்துவின் பொதுக் குருத்துவத்தில் பங்கு பெறுகின்றனர். அதன் வாயிலாக கிறிஸ்துவுக்குள்
கிறிஸ்துவுக்காய் தலைமைப் பண்பையும் இயல்பாகவே பெறுகின்றனர். இதையே புனித பேதுரு ’அரச, குருத்துவத் திருக்கூட்டத்தினர்’ என்று இறைச்சமூகம் முழுவதையும் பெருமைப் படுத்துகிறார். எனவே, திருமுழுக்கின் மூலம் திருஅவையின் உறுப்பினர்கள் ஆகியுள்ள பொது
நிலையினரும் கிறிஸ்துவின் தலைமைத்துவத்தின் மாண்பைப் பெற்றுள்ளனர். அதன் வாயிலாகத் திருஅவையின் மீட்புப் பணியின் முப்பெரும் பணிகளில் ஈடுபாட்டுடன் செயலாற்ற அழைக்கப்படு கின்றனர். இதை இரண்டாம் வத்திக்கான் சங்கம் தெளிவாக வலியுறுத்துகிறது. திருஅவைச் சட்டம் 208-ம் இதைத் தெளிவுபடுத்துகிறது.
ஆயினும், நடைமுறையில் இது இன்னும் முழுமை பெறவில்லை என்பதே கண்கூடு. இந்நிலை மாற வேண்டும். "அருள்பணியாளர்கள் பொதுநிலை யினரின் தலைமைத்துவத்தை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அருள்பணியாளர்கள் திருஅவையில் பொதுநிலையினர் கொண்டுள்ள மேன்மையையும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு அவற்றை மேம்படச் செய்ய வேண்டும். திருஅவையின் பணிப்பொறுப்புகளை அவர்களிடம் நம்பிக்கையோடு ஒப்படைத்து அவர்கள் சுதந்திரத்தோடு செயல்புரிய வாய்ப்பு அளிக்க வேண்டும்" (திரு 37) என்று சங்கம் தெளிவாகக் கூறியுள்ளதை அருள்பணியாளர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
பொதுநிலையினர் தலைமை என்பது அதிகாரம் சார்ந்தது என்று எண்ணாது, பணி சார்ந்ததே என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். "உங்களுள் தலைவனாய் இருக்க விரும்புகிறவன் பணியாளாய் இருக்கட்டும்" என்ற இயேசுவின் வார்த்தைகளை மனத்தில் இருத்த வேண்டும். ஏனெனில், இயேசுவின் தலைமைத்துவம் பணியாள் தலைமைத்துவமே. அதைப் புரிந்து அருள்பணியாளர்களோடு இணைந்து பொதுநிலையினர் தலைமையேற்றுச் செயல்
படும்போது தலத்திருஅவை இறையாட்சியின் அடையாளமும் கருவியுமாகத் திகழும். அதற்கான அருளை இத்திருப்பலியில் இறைஞ்சுவோம்.
மன்னிப்பு மன்றாட்டு:
1.    திருமுழுக்கால் பெற்ற கிறிஸ்துவின் பொதுக்குருத்துவ மாண்பை, பணியை உணராது வாழ்ந்தமைக்காக மனம் வருந்து கிறோம் - ஆண்டவரே இரக்கமாயிரும்.
2.    கிறிஸ்தவ தலைமை என்பது பணியாற்றும் தன்மை கொண்டது என்பதைப் புரிந்து செயல்படாமைக்காக மனம் வருந்துகிறோம் - கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
3.    தலைமைப் பொறுப்பேற்ற வேளைகளில் பிறரை மனம் வருந்தச் செய்த சமயங்களுக்காக மனம் வருந்துகிறோம் - ஆண்டவரே இரக்கமாயிரும்.
முதல் வாசக முன்னுரை: 1 அரசர்கள் 19:16ஆ, 19-21
இறைவாக்கினர் அனவைரும் பொது
நிலைத் தலைவர்கள், இஸ்ரயேல் மக்
களை வழிநடத்த இறைவனே அவர்களை அழைக்கிறார். எலியாவுக்குப் பதிலாக
எலிசாவை இறைவாக்கினராக அருள் பொழிவு செய்யுமாறு எலியாவுக்கு பணிக்கி றார். அவரும் அவரது மேலாடையை எலிசா மேல் தூக்கிப்போட்டு இறைத் திருவுளத்தை அவருக்கு உணர்த்துகிறார். அனைத்தையும் துறந்து இறைப்பணிக்
காகத் தன்னை அர்ப்பணித்ததுபோல், தலைமையேற்று இறைபணியாற்ற அழைக்கப்படுகிறோம் என்ற உணர்வோடு இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
பதிலுரைப்பாடல்:
திபா 16:1-2ஆ, 5, 7-8, 9-10, 11
இரண்டாம் வாசக முன்னுரை:
கலாத்தியர் 5:1, 13-18
பவுலடியார் நமது உரிமை வாழ்வின் அழைப்பையும் அந்த உரிமை வாழ்வுக்குரிய செயல்களையும் விளக்கு கிறார். முக்கியமாக ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமையாய் இருங்கள் என்ற அவரது கூற்று மிகவும் பொருள் வாய்ந்தது. தலைமைத்துவத்தின் அடிநாதம் அன்பே, அன்புள்ளவர்கள் அனைவருக்கும் உரிய
வர்களாக இருப்பர். அன்புப் பணி செய்வர். அத்தகைய மனநிலை நம்மில் நிலைக்க வேண்டும் என்ற உறுதியோடு வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நற்செய்தி முன்னுரை: லூக்கா 9:51-62
இன்றைய நற்செய்தியில் எல்லாரை யும் ஏற்பதும், தன்னை வெறுமையாக்கு வதும் சிறந்த தலைமை என்பதை இயேசு உணர்த்துகிறார். குடும்பம், பணம், புகழ் மீது பற்று அற்றவர்களே சிறந்த சீடர்களாக வும் தலைவர்களாகவும் பணியாற்ற இயலும் என்று உணர்த்துகிறார். இத்தகைய தலைமைப் பண்புகள் நம்மில் வளர வேண்டும் என்ற உணர்வோடு நற்செய்திக் குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்:
1.    அன்பு இறைவா, எம் திருஅவையை வழிநடத்தும் தலைவர்கள் தங்களது அழைப்பின் மாண்பையும் பணியின் மேன்மையையும் உணர்ந்து தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறை மக்களை இறையாட்சிப் பாதையில் வழிநடத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2.     அன்புடன் வழிநடத்தும் இறைவா!
        எமது நாட்டை ஆளும் தலைவர்கள் தன்னலம் மறந்து மக்கள் நலம் பேணும் தியாக உள்ளம் கொண்டவர் களாய், மக்களின் வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபாட்டுடன் உழைத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3.    திருஅவையின் தலைவராகிய இறைவா!
        எங்கள் பங்கில் உள்ள பொதுநிலையினர் திருமுழுக்கின் வாயிலாகத் தாங்கள் பெற்ற அழைப்பின் மாண்பை உணர்ந்து ஒருவரை ஒருவர் அன்பால் ஈர்த்துப் பணிபுரியும் தலைவர்களாகச் செயல்பட வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4.    அன்பு தந்தையே இறைவா!
        தாழ்ச்சியே தலைமைப் பண்பின் முதன்மை என்று உணர்த்திய இறைவா! பொதுநிலையினராகிய எங்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புகளைப் பணிவுடன் ஏற்று, எமது பங்கிற்கு நலமளிக்கும் நற்செயல்களில் ஈடுபட்டு, எமது தலத்திரு அவையை இறையாட்சியின் அடையாளமாகத் துலங்கச் செய்வதற்கு வேண்டிய ஞானத்தையும் ஆற்றலையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5.     தலைமைத்துவத்தை செம்மைப்படுத்தும் இறைவா!
        எம் பங்கில் உள்ள அன்பியங்கள், பக்த சபைகள், நிறுவனங்களில் பொறுப்புனர்வுடன் பணியாற்றி தங்கள் தலைமைப் பண்புகளை வெளிப்படுத்த எம் பங்கு இளைஞர்களும் இளம் பெண்களும் முன்வர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நிறைவு ஆசீர்:
1. இறைவனின் அன்பை இந்த நற்கருணைக் கொண்டாட்டத்தில் சுவைத்த நீங்கள், அதே அன்பின் சாட்சிகளாய்த் திருஅவையிலும் சமுதாயத்திலும் திகழ உங்களைத் தமது அருளால் நிரப்புவாராக.
2. இன்று பொதுநிலையினர் ஞாயிறைக் கொண்டாடும் நீங்கள், திருமுழுக்கினாலும் உறுதிப் பூசுதலினாலும் பெற்ற கடமையையும் உரிமையையும் உணர்ந்து அவற்றைச் செம்மையுற ஆற்ற உங்களுக்கு வரமருள்வாராக.
3. தமது இறையாட்சிப் பணிக்காக உங்களை அழைத்த இறைவன் தமது உடனிருப்பால் உங்களை வளப்படுத்தி இறையாட்சிப் பணியின் செயல்வீரர்களாக உங்களை வளப்படுத்தி இறையாட்சிப் பணியின் செயல்வீரர்களாக உங்களை வழிநடத்திச் செல்வாராக.

Comment