No icon

சூலை 7, 2019

பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை
கிறிஸ்துவில் பேரன்புக்குரிய சகோதர,  சகோதரிகளே! பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறாகிய இன்று, இறையாட்சிப் பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய பல முக்கியப்
பண்புகள் பற்றியும் நடைமுறை யில் அவர்கள் கொண்டிருக்க வேண்டிய அணுகுமுறைகள் பற்றியும் இயேசு தம் சீடர்களை பணிக்கு அனுப்புவதன் வழியாக நமக்குக் கற்பிக்கிறார். “கற்றுக்கொள்வதில் கவனமும் அவற்றை வெளிப்படுத்துவதில் விவேகமும் தேவை” என்பதை மனத்தில் கொண்டு செயல்பட அழைக்கின்றார். இயேசுவின் அறிவுரைகளில்:
1.    மன்றாட கேட்டுக் கொள்கிறார்.
2.    பணித்தளங்களில் சிக்கலும் சிரமமும் மிகுந்திருக்கும்.
3.    உங்கள் தேவைகள் அனைத்தும் உணரப்பட்டு வழங்கப்படும்
4.    நேரத்தை வீணாக்கும் செயல் களில் ஈடுபட வேண்டாம்
5.    இறையாட்சியின் மையப்பொருளான அமைதியை, அளிக்கும் கருவி களாக நீங்கள் செயல்படுங்கள்.
6.    இறையாட்சியின் அடை யாளமாகிய உடல்நலத்தை வழங்குவதில் கவனமாயிருங் கள் ஆகியன முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. 
அன்புக்குரியவர்களே நாம் நம்மை நாடிவரும் இறை யாட்சியைத் திறந்த மனத்தோடு, இருகரம் விரித்து வரவேற்போம். இறையாட்சியை அறிவிக்கும் இனிய கருவிகளாகத் திகழ்வோம்.
இதற்கான அருளை இத்திருப்பலி யில் உருக்கமாக மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை:
எசாயா 60:10-14
பல்வேறு சிறப்புக்கும் மேன்மைக்கும் உரிய சீயோன் மகளாக இறைவாக்கினர்களால் போற்றிக் கூறப்படும் எருசலேம் நகரின் மீது மக்கள் கொண்டிருக்க வேண்டிய செயல்பாடுகள் பற்றி யும் தாயினும் மேலாய் நம்மைத் தேடிவந்து தேற்றும் கடவுளது கருணைமிகு செயல்பாடு பற்றியும் விளக்கும் முதல் வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல் : திருப்பாடல் 66:1-3; 4-5, 6-7, 16, 20
இரண்டாம் வாசக முன்னுரை: கலாத்தியர் 6:14-18
திருத்தூதர் பவுல், தன்னை
யும் உலகத்தையும் ஒப்புமைப் படுத்தி, இறையாட்சியின் உன்னத கொடையாகிய மீட்பைக்
கொண்டுவந்த சிலுவைப் பற்றி பெருமை பாராட்டுவதாகக் கூறுகிறார். விருத்தசேதன விவாதம் எதிலும் அவர் ஈடுபடா மல், புதுப்படைப்பாவதே முக்கியம் என்று கூறுகிறார். இதனை விளக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்தி: லூக்கா 10:1-12, 17-20
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்
1. உமது ஆட்சியின் பணியாளர் களை எமக்கு அனுப்பிய இறைவா!
அனைத்து நற்பண்பு களும் நிறைந்த உமது ஆட்சி எல்லா இடங்களிலும் நிலைபெற வேண்டும் என்று, எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர் கள், குருக்கள், துறவிகள் மற்றும் திருநிலையினரை எமக்கு அனுப்பியுள்ளீர். உமக்கு நன்றி. உமது கற்பித்தலின்படி அவர்கள் செயல்பட்டு, பெருவெற்றிகாண அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2.வளங்களை வழங்கி, எம்மை வாழவைக்கும் இறைவா!
புதிதாக அமைந்துள்ள எமது இந்திய நாட்டு நடு வணரசும், தமிழக அரசும், எங்கள் நாட்டில் நிலவும் குடிநீர், வேளாண்மைக்கான நீர் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான நீரின் தேவையைக்  கவனத்தில் கொண்டு அதன் ஆதாரத்தைப் பெருக்கி அதனைப் பகிர்வதிலும் பாதுகாப்பிலும் நாங்கள் விவேகத் தோடு செயல்பட வழிகாட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம்.
3. மீட்பினை வழங்கும் இறைவா!
திருத்தூதர் பவுலைப்
போல நாங்களும் உம் திருமகன் கிறிஸ்துவின் சிலுவையில் பெருமை பாராட்டுபவர்களாக வாழவும், எங்கள்வாழ்வின் துன்பங்களிலிருந்து நீர் உண்மை யான மீட்பை வழங்குவீர் என்ற நம்பிக்கையுடன் வாழவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ‘கவனம்’ என்ற கொடையை வழங்கும் இறைவா!
எங்கள் இல்ல, பங்கு, அன்பிய, நிறுவன, சமூகக் கடமைகளை நாங்கள் சிறப்பாகச் செய்து, எங்களது சொற்களாலும் செயல்களாலும் உமது ஆட்சி யின் சான்றாளர்களாய் திகழ்வதில் கண்ணும் கருத்துமாய் தொடர்ந் திட அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. படைத்து, பாதுகாக்கும் பரம் பொருளே இறைவா!
தொடர்பு ஊடகங்களின் உருவாக்கம், பயன்பாடு, செயல்
படுத்தும் திறன் ஆகியவற்றில்
போதிய விழிப்புணர்வு இல் லாததால் அவற்றை நன்மைக்குப் பயன்படுத்துவற்குப் பதில் தீமைக்குப் பயன்படுத்தி, நேரம், பொருள், சக்தி ஆகியவற்றை இழந்து தவிக்கும் நிலையி லிருந்து நாங்கள் விடுபட்டு அவற்றை உரியமுறையில் பயன்
படுத்தி பயனடைய வேண்டு
மென்று உம்மை மன்றாடு கிறோம்.
 

Comment