No icon

இங்கு எதுவுமே தவறில்லையாமே!

முதன்மைகளையும் முன் மாதிரிகளை யும் மையப்படுத்தி வளரிளம் பருவத்தினர் வலம் வந்த காலம் எங்கு சென்றது? ரோல் மாடல் என்று சொல்லுமளவிற்கு நல்லவர்களுக்கு ஏன் இங்கு பஞ்சம் வந்தது? எப்படியும் வாழ
லாம் என்கிற நியதி எப்படி எங்கும் நியாயமாய் தென்படுகிறது? இன்றுவரை இருந்த அறநெறி வாழ்வை யார் காவு கொண்டது? தலைவர்கள் என்பவர்களால் எப்படித் துணிந்து பொய்சொல்ல முடிகிறது? ‘நா’ கூசுகின்ற
வார்த்தைகளைப் பொதுவிடமென்றும் பாராமல் வழி காட்டிகளால் எப்படி முழங்க முடி
கிறது? அறநெறியைக் கொள்கையாகக் கொண்டிருக்க வேண்டியவர்கள் தவறுகளை நியாயப்படுத்துவதை என்னவென்பது? தேர்தல் ஆடு
களத்தில் யாம் கண்ட காட்சிகளின் நெருடல் கள்தான் மேற்காணும் அனைத்துக் கேள்விகளும்.
எதுவும் தவறில்லை என்றால்… பொய் பேசுவது தவறு, பிறரை பழித் துரைப்பது தவறு, பொய்வாக்குறுதிகள் தருவது தவறு, குறுக்கு வழிகளை  நாடுதல் தவறு, பதவி, புகழ், செல்வாக்கிற்காக எதையும் செய்யத் துணியும் மனநிலை தவறு… என்றெல்லாம் நீதி நெறிகளை ஈசோப் கதைகள், தெனாலிராமன் கதைகள், அரேபியக் கதைகள் மூலம் கற்றுத் தந்த தலைமுறை இன்றில்லை. தவறுகளே தலைமைகளை அடைவதுதான் இன்றைய நடைமுறை. தூங்குபவனை விரைவில் எழுப்பிவிடலாம், ஆனால் தூங்குவதுபோன்று நடிப்பவனை எழுப்புவது கடினம் தானே! அங்ஙனமே, தவறு செய்வது மனித இயல்பு.
ஆனால் தான் தவறு செய்கிறோம் என்கிற புரிதல் இல்லாத வரை திருத்துவதும் அவர் திருந்துவதும் கானல் நீரே!
நாம் ஒரு தவறை செய்யும்போது அதை நியாயப்படுத்தக் கூடாது, அதை மறுக்கக்கூடாது, பிறரைக் குற்றம் சாட்டக்கூடாது, அதை மீண்டும் செய்யக்கூடாது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒப்புக்கொள்
வது, மன்னிப்புக் கோருவது, தவற்றிலிருந்து கற்றுக்கொள் வது. பெருந்தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கிற வர்கள் தொடங்கி சாமானி யர் வரை ‘தவறு என்று எதுவுமில்லை’ என்கிற ஒருவித ஆளுமை பிறழ்வை நவீனத்துவ சமூகம் தத்தெடுத்துக் கொண்
டிருக்கிறது என்பதே வேதனை. “கற்காலம் நோக்கி கற்றவரை ஓட்டுவதே தற்கால நாகரீகம்” என்று நகைச்சுவையாக கவிஞர் கண்ணதாசன் இதனைத்தான் சொல்கிறாரோ? 
இன்று ஊழல் தவறில்லை, மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்; கள்ளத்தொடர்பு தப் பில்லை, தடம் தெரியாமல் சாதூரியமாக நடந்து கொள்; குறுக்குவழியில் பணம் சம்பாதிப்
பது தவறில்லை தப்பிக்கும் வழிகளை மட்டும் தெரிந்து கொள். பாலியல் சீண்டல்கள் தவறில்லை, வெளியில் விசயம்
தெரியாமல் தப்பித்துக்கொள் பெருகிவரும் வன்முறை சம்பவங்கள், பாலியல் கொடுமைகள், பொறுப்பற்றத் தன்மைகள், சோம்பித்திரியும் போக்குகள், இலக்கற்ற வாழ்வு அனைத்திற்கும் பின்னால் இத்தகு மனநிலைகளையே பார்க்க முடிகிறது. ‘இங்கு யாரும் யோக்கியன் இல்லை’ என்கிற நியாயப்படுத்து தல்களும், ‘எதுவும் தவறில்லை’
என்கிற மனநிலைகளும் ஆக்கமிக்கவர்களாய் திகழ வேண்டிய இளைஞர்களிடம் பல தேக்கங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.  கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் சொல்வார், “ஆராயப்படாத வாழ்வு வாழத் தகுதியற்றது (வாந ரநேஒயஅiநேன டகைந ளை nடிவ றடிசவா டiஎiபே). அப்படியானால் வாழும் வாழ்வை ஆராய்ந்தால்? ஷேக்ஸ்பியர் சொல்வது போல், “நம் எல்லாருடைய வாழ்வும்; வெறும் புகை மண்டலமாய், ஒன்றும் சரக்கின்றி பிசுபிசுத்து விடும் (குரடட டிக ளடிரனே யனே கரசல ளபைnகைலiபே nடிவாiபே). இதுதான் எதார்த்தமாக நாம் கண்டுகொண்டிருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்ட நபர்கள் மேல் எத்தனை எத்தனை குற்றச்சம்பவங்கள். பணபலத்தால், ஆள்பலத்தால் கேடிகளையும் முகமூடி அணி
வித்து தலைவர் என ஏற்றுக்
கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருப்பது எதன் வெளிப் பாடு?
அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே…
நம் இளவல்களை எடுத்துக் கொள்வோம். காற்றின் திசைக்கு இழுத்துச் செல்லப்படும் தூசுகள்போல்தான் பலரது வாழ்வு. ‘கஷ்டப்பட்டு படிச்சு வேலைத் தேடிப்போய் உழைச்சு ஒரளவு நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் எங்களை போன்ற பசங்களுக்கு பொண்ணுங்க கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. எங்கெங்கோ தேட வேண்டியிருக்கு’ என்று அலுத்துக் கொண்டான் ஓர் இளைஞன். அவனுக்குப் பதிலளிக்கும் விதமாய் மற்றொருவன் சொன்னான், ‘ஆமா மச்சி இந்தக் காலத்துல பொண்ணுங்க பகட்டுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க. வெட்டியா, புது மாடல் செல்போன், பைக் வச்சிட்டு, தலைமுடிய கேனத்தனமா வெட்டிக்கிட்டு அங்குமிங்கும் வெட்டித்தனமா சுத்திக்கிட்டு இருக்கிறவங்களுக்குப் பின்னாடி எத்தன பொண்ணுங்க வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றிக்கிட்டு எப்பொழுதும் வெட்டியா செல்போனுல மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்த இளைஞனிடம், ‘கொஞ்ச நேரமாவது போனுக்கு ரெஸ்ட் கொடுக்கக்கூடாதா? எப்பப் பார்த்தாலும் ஒரே ஆளுட்ட அப்படி என்னத்தத்தான் பேசுற’ என்றேன். அதற்கு அவன், “ஒரே ஆளுனு யாரு சொன்னது? சும்மாயில்ல, ஐஞ்சு பேரு. அத்தன பேரையும் சமாளிக்க எவ்வளவு பெரிய டேலண்ட் வேணும். உங்களால முடியுமா?” என்றான். ‘அப்ப நீ யாரையும் உண்மையா லவ் பண்ணலியா’ என்றேன். இந்த காலத்துல ஷாஜஹான் மும்தாஜ் லவ்வெல்லாம் காண முடியுமா? அப்படி நேர்மையா எவன் இருக்குறான். எல்லாம் கொஞ்ச நேர டைம்பாஸ். ஒண்ணில்லனா இன்ணொன்ணு. அது பொண்ணுங்களுக்கும் ரொம்பவே தெரியும்’ என்றான். அறநெறி வாழ்வைப் பார்த்தீர்களா? எதுவும் தவறில்லையாம்!
பலமான இளமைக்கு தேவை...
பாரத தேசத்தின் மக்கள் தொகையில் 65 விழுக்காடு இளைஞர்கள். இவர்கள்தான் இந்தியாவின் பலம். இளைஞர் பலத்தை முறையாகப் பயன்படுத்தி, பக்குவப்படுத்திக் கொள்வதை பொருத்தே நாட்டின் எதிர்காலம் உள்ளது. பொருளாதாரத்தில் தங்களை வலுப்படுத்தும் வளமான காலமான 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களைப் பற்றி நாம் பெரிதும் கவலைப்படாததால் 60 - 70 களில்  வரக்கூடிய நோய்கள் 30 வயதிலேயே வந்து பல உயிர்களைக் காவு கொள்கின்றன. கடந்து வந்த பாதைகளை உற்று நோக்குகையில் நாம் பலதுறைகளில் வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். உண்மைதான்! ஆனால் நாட்டின் இளையோர் பலத்தை பொறுத்தவரையில் இன்னும் பல மடங்கு அதிகமாக நாம் சாதித்திருக்க வேண்டும், சமூகத்தில் மாற்றத்தை விதைத்திருக்க வேண்டும். 
கற்கும் கல்விமுறை பட்டங்களையும் சட்டங் களையும் வழங்குகிறதே தவிர பண்பாட்டைக்
கடைபிடிக்க மறுக்கிறது; ஊடக வளர்ச்சிகள் பல காரியங்கள் குறித்துத் தெளிவையும் விழிப்
புணர்வையும் ஊட்டுகிறதே தவிர பொறுப்புணர்ச்சி யைக் கற்றுத்தர தவறுகிறது; ஏதாவது ஒரு வேலையை அதுவும் கைநிறைய சம்பாதிக்கும் வேலையைத் தேடித் தருவதற்கு படித்த பட்டங்கள் உதவுகின்றனவே தவிர பொறுப்புள்ள சமூக அக்கறை கொண்ட குடிமக்களை உயர்த்த உதவவில்லை. அனைத்திற்கும் மேலாய் எப்படியும் இங்கு வாழலாம், எதுவும் இங்கு தவறில்லை என்பதே பிரதானக் கொள்கையாய் எங்கும் ஒலிக்கிறது.
உலக நாகரீகத்தின் சிகரத்தை தொட்ட உரோமைப் பேரரசு எதனால் வீழ்ந்தது தெரியுமா?  அங்குள்ள இளைஞர்கள் ஆடம்பரங்களிலும் கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவுசார் சிந்தனை களையும் உழைப்பையும் இழந்துதான் என்கிறது வரலாறு. இன்றைய நம்  இளைஞர் சக்தி எந்நிலையில் இருக்கின்றது? எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது? என்பதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் இந்தியாவின் எதிர்காலமல்ல நிகழ்காலமே கேள்விக்குறி!  உறவுக்கார பையன். ரிக் ஆயில் நிறுவனத்தில் ஏதாவது வேலைக்குச் சேர வேண்டும் என்றான். அதற்கேற்ற படிப்பு அவனிடம் இல்லை என்பது எனக்கு தெரியும். இருப்பினும் பல லட்சம் கொடுத்து ஏன் ரிக் நிறுவனத்தில் வேலைக்கு சேர விரும்புகிறாய் என்று காரணம் வினவினேன், கைநிறைய சம்பாதிக்கலாம், மாத விடுமுறைகள் கிடைக்கும், அப்புறம் என்ன வசதியான வீட்டுல பொண்ணு கிடைக்கும்…இதுதான் பல இளைஞர்களின் வாழ்வும் கனவும்! இவை போதாது?
போட்டி நிறைந்த காலக்கட்டத்தில் அடிக்கடி பல நிறுவனங்கள் மூடுவிழா காண்கின்றன.
சில நிறுவனங்கள் முன்னேறிச் சென்று கொண்டே யிருக்கின்றன. அது எப்படி? அணுகுமுறைகள்தான் காரணம்! வளர்ச்சிப்படி இருநிலைகளில் வளர்ச்சிப்படிநிலைகளை வகுக்கிறார்கள். ஓன்று வழக்கமான செயல்பாடுகள் (சுடிரவiநே ஹஉவiஎவைநைள) மற்றொன்று மேம்பாட்டு செயல்பாடுகள் (க்ஷரளiநேளள னுநஎநடடியீஅநவே ஹஉவiஎவைநைள). வழக்கமான செயல்பாடுகளுக்கு 60 விழுக்காடு நேரத்தையும், மேம்பாட்டு செயல்பாடுகளுக்கு 40 விழுக்காடு நேரத்தையும் ஓதுக்குகிறார்கள். நம் இளவல்களும் வழக்கமான காரியங்களை மட்டும் செய்து கொண்டு அல்லது வழக்கமாக எல்லாம் இப்படித்தான் என வரையறைகளை வகுத்துக் கொண்டு முடங்கி விடுதல் நல்லதல்ல. இளைஞர்கள் சரியான திட்டமிடல் இன்மையால், தவறான நேர ஒதுக்கீட்டினால்; 100 விழுக்காடு நேரத்தையும் வழக்கமான செயல்பாடுகளுக்கு ஒதுக்கிவிடும் நிலையை மாற்ற வேண்டும். அத்தோடு காலத்தின் சூழலுக்கேற்ப தங்களுக்கான மேம்பாட்டுச் செயல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துதல் அவசியம். அதில் தங்கள் தனித்திறன்களை இழந்து விடாமலும், தவறான வழிகளில் சென்று விடாமலும் பார்த்துக் கொள்வதும் தேவை. இல்லையெனில், இங்கு எதுவும் தவறில்லை என்கிற மனநிலையில் வழக்கமான செயல்பாடுகளோடு இளமை தொலைந்து விடும்; கயவர்கள் என்றைக்குமே  நல்லவர்களாக நடிக்கும் கயமைத் தொடர்ந்திடும்.

Comment