‘நம் வாழ்வு’ வெளியீடு – 92
அயலகக் கிறித்துவர் தமிழ்ப்பணிகள் பக்கங்கள் 248, விலை ரூ.150. ISBN 978-81-948397-4-3
மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் வாழ்த்துரையோடும், சிறுபான்மை ஆணையத் தலைவர் உயர்திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் அணிந்துரையோடும் வெளிவந்துள்ள, பேரா. முனைவர் பாக்யமேரி அவர்களின் இந்நூல், எல்லா கிறிஸ்தவ இல்லங்களிலும் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு வரலாற்றுப் பேழை. மேலை நாட்டுக் கிறித்துவர் தமிழ்ப்பணிகள் என்ற முதல் பகுதியில் 28 மேலை நாட்டு அறிஞர்களின் இலக்கியப் பங்களிப்பை வரலாற்றோடு விவரித்து, ஆவணப்படுத்தி, ஈழ நாட்டு கிறித்துவர்கள் 24 பேர், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் இலக்கியத்திற்கும் அளித்துள்ள பங்களிப்பை பதிவு செய்து, முட்டையினுள்ள வெள்ளைக்கரு, மஞ்சள்கருவைப் போல பாதுகாத்து பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு பேரும் வரலாறு. ஒவ்வொரு பக்கமும் அளப்பரிய அரியப்படாத தகவல்கள் நிறைந்த ஓர் அறிவுப் புதையல். இவ்விரண்டு நூல்களும் பல்வேறு பரிசுகளைப் பெற தகுதியுள்ள நூல்கள் என்றால் அது மிகையன்று. ‘நம் வாழ்வி’ன் வெளியீடுகளில் தலை சிறந்த இலக்கிய நூல்கள் இவை என்றால் அதுவே உண்மை. ஒவ்வொரு தமிழ்க் கிறித்தவரும் ஞானத்திமிருடன் வாங்கி படித்து, பாதுகாக்க வேண்டிய அரிய நூல்கள் இவை. கிறித்தவர்களின் பங்களிப்பின்றி இன்றையத் தமிழ்மொழி வளரவில்லை என்பதற்கு இந்நூலே சாட்சி. இவ்விரு நூல்களும் ரூ. 300 மட்டுமே. கூரியர் மூலம் விரைந்து அனுப்புதல் முற்றிலும் இலவசம்.
Comment