நூல்கள்
நம் வாழ்வு வெளியீடு
- Author நம் வாழ்வு --
- Wednesday, 25 Jan, 2023
1. தமிழகத் திரு அவையின் இறைஊழியர்கள்12
அருள்பணி.
ஆ. தைனிஸ், க.ச.
ரூ.150/-978-81-948397-3-6
256 பக்கங்கள் - புனிதர்கள்
‘தமிழகத் திரு அவையின் இறைஊழியர்கள்’ என்னும் இந்த அற்புதமான நூலை, இறைநம்பிக்கையாளராக வாசிக்கும்போது தாய்த் திரு அவையின் சிறப்பையும் அவளின் உலகளாவிய பண்பையும் அறிந்துகொள்ள முடிகிறது. தமிழ்க்கிறிஸ்தவராக வாசிக்கும்போது நம் இனம், பண்பாடு, மொழி இவற்றின்மீது உயர் மதிப்பையும் இம்மண்ணுக்காக, இம்மக்களுக்காக இன்னும் சிறப்பாக உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் பெற்றுக் கொள்ள முடிகிறது.
பொருள் : ஆன்மீகம், வரலாறு, புனிதர்கள்
2. ஐரோப்பியக் கிறித்துவர் சமயப்பணிகள்
பேரா. முனைவர்
பாக்யமேரி
ரூ.150/- 978-81-948397-0-5
256 பக்கங்கள் - இலக்கியம்
பண்டைத் தமிழகத்தின் வளங்கள், கிறித்தவம் தமிழகத்திற்குள் வந்தமை, ஐரோப்பிய நாட்டினர் கிறித்தவ சமயப் பணிகளை மேற்கொண்டமை முதலான கருத்துக்களை விரித்துரைப்பது பேரா. முனைவர் பாக்யமேரி அவர்களின் நோக்கமாக உள்ளது. இந்நூல் தாங்கி நிற்கும் புனித தோமையார், புனித பிரான்சிஸ் சவேரியார், புனித அருளானந்தர் மூவரும் ஒன்றாக ஒரே இடத்தில் காட்சி தந்து தமது அருள் பாலிக்கும் திருத்தலமான சென்னையில் உள்ள சாந்தோம் பேராலயத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது நூலின் நிறைவாக உள்ளது.
பொருள் : இலக்கியம், வரலாறு, மொழி, சமயம், தமிழ்
3. அயலகக் கிறித்துவர் தமிழ்ப்பணிகள்
பேரா. முனைவர்
பாக்யமேரி
248 பக்கங்கள் - இலக்கியம்
அயலகக் கிறித்துவர், ஈழநாட்டுக் கிறித்துவர் ஆகியோரின் தமிழ்ப் பணிகளைத் தொகுத்துத் தரும் அரும்பணியினைக் கிறித்தவத் தமிழுலகிற்குத் தனது பங்களிப்பாக ஈந்துள்ளார். நூலின்கண் பல அரிய செய்திகள் நூலின் போக்கில் ஆங்காங்கு காணக்கிடக்கின்றன. அவை படிப்பதற்கு அரிதான நிகழ்வுகளாகவும், அறிந்துகொள்ள வேண்டிய வரலாறுகளாகவும் உள்ளன.
பொருள் : கிறிஸ்தவம், தமிழ், இலக்கியம், வரலாறு
4. நான் உங்கள் அசிசி பிரான்சிஸ்
அருள்பணி.
ஆ. தைனிஸ், க.ச.
ரூ.125/- 978-81-958082-3-6
176 பக்கங்கள் - ஆன்மீகம்
நான் உங்கள் அசிசி பிரான்சிஸ்” என்ற தலைப்பில் புனித அசிசி பிரான்சிஸ் தனது வாழ்வை தானே கூறுவதுப்போல் இந்நூல் மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலை வாசிக்கின்றபோது 13ஆம் நூற்றாண்டு புனித பிரான்சிஸ் இன்று நம்மோடு நேரிடையாக பேசுவதுப் போல உணரலாம். புனிதரின் ஏழ்மை, எளிமை, தாழ்ச்சிப் போன்ற நற்செய்தி புண்ணியங்கள் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளன. எளிய, இனியத் தமிழில் படைக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு.
பொருள் : ஆன்மீகம், வரலாறு, திரு அவை, துறவறம்
5. திருவும் மதியும்
அருள்பணி.
எம். ஏ. ஜோ
ரூ.120/- 978-81-955630-2-9
192 பக்கங்கள் - வாழ்வியல்
இந்நூலில் எல்லாமே வெகு நேர்த்தியாக இருக்கிறது. ஆழ்ந்து, அனுபவித்து, உணர்வுப்பூர்வமாக எழுதப்படும் எழுத்துக்களுக்கு ஆயுள் நிறைய. எனவே, இவை நிரந்தரமாக ஒவ்வொரு இதயத்திலும் கல்வெட்டாய் பதிந்திருக்கும். திருவும் மதியும் காலத்தால் அழியாதவர்கள், எத்தனை வருடங்களானாலும் தம்பதியருக்கு ஒரு கையேடாக உதவக்கூடியவர்கள். அது மட்டுமல்ல, திருமணப் பரிசாக மணமக்களுக்குக் கொடுக்க - மிகச் சிறந்த புத்தகம் இது.
பொருள் : இல்லறம், குடும்பம், உளவியல்
6. உள்ளம் நலமா?
அருள்பணி.
எம். ஏ. ஜோ
ரூ.150/- 978-81-955630-9-8
248 பக்கங்கள் - உளவியல்
பதற்றம் நிறைந்த வாழ்க்கை, சந்தைப் பொருளாதாரத்தின் வீச்சு, சராசரி மனிதனை ஆலாய் பறக்கவிடும் நுகர்வோர் கலாச்சாரம், சரிந்து வரும் தனி மனித ஒழுக்கம், தளர்ந்து கரை ஒதுங்கிக் கிடக்கும் மனிதர்களைக் கரைசேர்க்க ஜோ எடுத்துள்ள முயற்சிதான் இந்த அற்புதப் படைப்பு!
பொருள் : உளவியல், வாழ்வியல்
7. தேடுங்கள் கிடைக்கும்
அருள்பணி.
எம். ஏ. ஜோ
ரூ.150/- 978-81-958082-0-5
256 பக்கங்கள் - வாழ்வியல்
விழுமியங்களைக் கட்டுரைகளின் மூலம் சொல்வதனால் எந்தப் பயனும் இல்லை. கதைகளின் மூலமாக அவற்றைச் சொன்னால் அவை இளையோரைச் சென்றடையும் வாய்ப்பு நிறைய உள்ளது என்ற புரிதலின் விளைவாக, தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, பல நாடுகளைச் சார்ந்த ஆங்கில எழுத்தாளர்களின் கதைகளையும் புகழ்பெற்ற கிராமியக் கதைகளின் மூலமாக இளையோரின் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் அவர்கள் மனதில் எழுகின்ற கேள்விகளுக்கும் பதில் கூற விழைந்திருக்கிறேன்.
பொருள் : கதைகள், வாழ்வியல், இளையோர்
8. கடைசியில் வந்தோருக்கும்...
அருள்பணி.
எம். ஏ. ஜோ
ரூ.150/- 978-81-958082-1-2
280 பக்கங்கள் - ஆன்மீகம்
கிறிஸ்தவர்களுக்கு இந்நூல் ஒரு மறையுரை. கிறிஸ்தவர்கள் அல்லாத வர்களுக்கு இந்நூல் ஓர் அருளுரை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்நூல் ஓர் ஆன்மீக நூல். கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு இந்நூல் ஒரு நல்லொழுக்கப் பாடம். இந்நூல் எச்சமயத்தவருக்கும் பொருந்தும். நம் எல்லாரையும் ஒருவர் மற்றவரோடு பொருந்திப் போகச்செய்யும். முதலில் வந்தோருக்கும் நியாயம் செய்யும்; கடைசியில் வந்தோருக்கும் வாழ்வாதாரம் வழங்கும்.
பொருள் : மறையுரை, கிறித்தவச் சிந்தனைகள், அருளுரை
9. படைப்பு அனைத்தும் உமதே
அருள்முனைவர்
ச. இஞ்ஞாசிமுத்து, சே.ச.
ரூ.300/- 978-81-948397-6-7
366 பக்கங்கள் - சுற்றுச்சூழல், ஆன்மீகம்
இயற்கை ஆர்வலர், உயிரி தொழில்நுட்ப அறிஞர், பூச்சியியல் துறை வல்லுநர், அறிவியலாளர் அருள்முனைவர் ச. இஞ்ஞாசிமுத்து சே.ச அவர்கள், படைப்புகள் அனைத்தையும் குறித்து, வியந்து, படைப்பிற்கு மூலாதாரமான கடவுளைப் போற்றி எழுதியுள்ள, ஒருவகையில் செபித்துள்ள ‘படைப்பு அனைத்தும் உமதே!’ என்னும் இந்நூல் சுற்றுச்சூழல் ஆன்மீகத்தை அடித்தளமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. செபிக்கும் அனைவரையும் சூழலியல் போராளிகளாக மாற்றிவிடும் ஆற்றல் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையன்று. ஒவ்வொரு செபமும் செபிப்பவரின் ஆன்மாவை ஊடுருவி, நம் அனைவரையும் படைப்பு அனைத்தின் கண்காணிப்பாளராக நியமிக்கிறது.
பொருள் : செபம், சுற்றுச்சூழல் ஆன்மீகம், இயற்கை
10. மக்கள் போப்
அருள்பணி.
குடந்தை ஞானி
ரூ.100/- 978-81-920030-4-7
160 பக்கங்கள் - ஆன்மீகம்
திருத்தந்தையின் பூர்விகம், குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம், இறையழைத்தல், குருத்துவம், கையறுநிலை, ஆயர் பணி, கர்தினால் பணி, திருத்தந்தையுடன் நேர்காணல் என ஒவ்வொரு வாழ்வியல் சூழலையும் நூலாசிரியர் குடந்தை ஞானி வாசிப்பவருக்கு சுவாரசியம் குறையாமல் விவரிக்கிறார். நூலில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் முக்காலத்தையும் நம் கண்முன் விரிக்கின்றன.
பொருள் : ஆன்மீகம், வரலாறு
11. நம்ம போப்
அருள்பணி.
குடந்தை ஞானி
ரூ.100/- 978-81-920030-5-4
136 பக்கங்கள் - ஆன்மீகம்
மேலேறி, மேடையேறி, தீயோர் செய்யும் தீமைகளை எளியோர் நம்மால் தடுத்து நிறுத்த முடியாமல் போகலாம். ஆனால் அரிதாய் நல்லவர் ஒருவரை இறைவன் உயர் பதவியில் அமர்த்தி, அவரால் நல்லவை அரங்கேறும் போது, நாம் குறைந்தபட்சம் எழுந்து நின்று கரவொலி எழுப்பிப் பாராட்டலாம். குனிந்து அவர் கைகளை முத்தமிட்டு நம் அன்பைச் சொல்லலாம். அவரின் முயற்சிகள் யாவும் வெற்றி பெறட்டும் என்று மனதார வாழ்த்தி மன்றாடலாம். தமிழறிந்த மக்கள் நாமெல்லாம் இவற்றைச் செய்ய குடந்தை ஞானியின் இந்நூல் உதவட்டும்.
பொருள் : மறையுரை, கிறித்தவச் சிந்தனைகள், அருளுரை
12. தமிழர் வாழ்வியல் பெருமைகள்
அருள்பணி.
இராஜசேகரன்
ரூ.120/- 978 -81-941643-7-1
208 பக்கங்கள் - ஆன்மீகம்
தமிழ் மொழியின் மற்றும் தமிழினத்தின் வாழ்வியல் பெருமைகளான - அறம், குடும்ப ஒழுக்கம், இயற்கை நேயம், பல்லுயிர் நேயம், மொழிவளம், கலாச்சார மேம்பாடு, நாகரிகப் பெருமை ஆகியவை இந்நூலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது இதன் தனிச் சிறப்பு. இத்தகைய பெருமைகளைப் புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது இன்றையச் சூழலில் காலத்தின் கட்டாயம்.
பொருள் : தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம்
13. நற்செய்தி தரும் தேடல்கள்
அருள்பணி.
இராஜசேகரன்
ரூ.120/- 978-81-955630-7-4
176 பக்கங்கள் - இறையியல்
கருவறை முதல் கல்லறை வரை வாழ்க்கைப் பயணம் தேடலில்தான் கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு தொட்டிலும் ‘எப்போது’ என்று தேடுகிறபோது, ஒவ்வொரு கல்லறையும், ‘எங்கே?’ என்று தேடுகிறது. அப்படி தேடலால் கட்டமைக்கப்பட்ட இடைப்பட்ட நம்வாழ்வில் ஒவ்வொரு தேடலும் முத்தாக, புதையலாக இருக்க வேண்டும்.
பொருள் : இறையியல்
14. சிதைக்கப்படும் உடலில் வதைக்கப்படும் கடவுள்
அருள்முனைவர்
சி. பேசில் சேவியர், சே.ச.
ரூ.125/- 978-81-955630-5-0
168 பக்கங்கள் - இறையியல்
இலக்கியம், மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம், பின் நவீனத்துவம், இறையியல் மரபு, திரு அவைப் போதனைகள், இறையியல் அணுகுமுறைகள், விளிம்புநிலை மக்களின் பிரச்சனைப்பாடுகள், நாட்டார் சமயங்கள், வாழ்வியல் கேள்விகள் என்று அனைத்துத் தளங்களில் அநாயசமாக தன் சிந்தனைகளைப் புகுத்துகிறார். இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் நம் சிந்தனையை ஊடுருவும் பக்கங்களாக அமைவது பாராட்டுக்குரியது. ஒவ்வொரு அடிக்குறிப்பிலும் அவர்தம் ஆய்வு மனப்பான்மை தென்படுகிறது. நிறைகுடமாய் உள்ள இவர்தம் படைப்பு, தமிழ்த்தாய்க்கு சூட்டப்பட்ட மணி மகுடமே.
பொருள் : மெய்யியல், இறையியல், வாழ்வியல்
15. யோக்கியர்கள் கவனத்திற்கு!
அருள்பணி.
ம. டைட்டஸ் மோகன்
ரூ.150/- 978-81-941643-6-4
320 பக்கங்கள் - வாழ்வியல்
யோக்கியர்கள் கவனத்திற்கு என்ற இந்நூல் ஒரு வரலாற்று நினைவூட்டலோ, இலக்கியப் புதினமோ அல்ல! மக்களை அலட்டிக் கொண்டிருக்கிற நிகழ்கால ஆற்றாமைகளின் பதிவு. நூலாசிரியரின் அறச்சீற்றம் வாசகர்களையும் தொற்றிக் கொள்ளும் வகையிலான இந்தக் கட்டுரைத் தொகுப்பைக் குறிப்பிட்ட காலகட்டம் சார்ந்த ஒரு ஆவணமாகவும் கருத இயலும்.
பொருள் : வாழ்வியல்
16. பொதுவெளி இறையியல்: ஒரு கிறித்தவத் தேடல்
அருள்முனைவர்
ஞானா பேட்ரிக்
பக்.160 978-81-955630-4-3
ரூ.125/- இறையியல்
தத்துவார்த்த மற்றும் இறையியல் ரீதியாக ஆங்கில இலக்கியத்தில் விவாதிக்கப்படும் பல்வேறு விடயங்களை தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியிருப்பது சாலச் சிறந்தது. சமூகவியலாளர்கள், மெய்யியலாளர்கள் மற்றும் இறையியலாளர்களின் பங்களிப்பை மிகச் சுருக்கமாகத் தேவைப்படும் இடங்களில் எடுத்துக்கூறி அறிமுகப்படுத்தியிருப்பதும், அதே சமயத்தில் ஒவ்வொரு கருத்துருவாக்கத்தின் தோற்ற வளர்ச்சியையும் எடுத்துக்கூறி, இன்றைக்கு இந்திய அளவில் அதன் வடிவம் மற்றும் தேவையைப் பற்றி விவாதிப்பது இந்த நூலை வாசிப்பவர்களுக்கு அந்தக் கருத்தின் விசாலமான பார்வையைக் கொடுக்கிறது.
பொருள் : இறையியல், கிறித்தவம், பல்சமய உரையாடல்
கிடைக்குமிடம்:
நம் வாழ்வு, 62, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004
87787 53947 / 94980 32244
editor@namvazhvu.in
Comment