No icon

கர்தினால் பிலிப் நேரி ஃபெராவோ

மிகச்சிறந்த இறையியலாளர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இறையியலாளராக, கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றும் பேரார்வம் கொண்டவராகத் திகழ்ந்தவர் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் என்று கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயரும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) தலைவரான கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ கர்தினால் பிலிப்பு நேரி ஃபெராவோ குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள், சிறந்த அறிவாற்றல், தூய்மை, தாழ்ச்சி போன்றவற்றைக் கொண்ட உயர்ந்த மனிதர், 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இறையியலாளர்களுள் ஒருவர், கடவுளின் நற்செய்தியை உலகம் முழுவதும் எடுத்துரைப்பதில் பேரார்வம் கொண்ட சிறந்த போதகர் என்றும் அவரைக் குறித்து கர்தினால் பிலிப் நேரி கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இறுதிச்சடங்கு நாள் நடைபெற இருக்கும் சனவரி 5 வியாழனன்று மாலை 4.30 மணியளவில் பழைய கோவா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாளில் கத்தோலிக்க மறைமாவட்ட அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் திறக்கப்படவில்லை; வத்திக்கான் கொடியானது அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டு திருத்தந்தையின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Comment