No icon

ஹின்டன்புர்க் நிறுவனம்

அதானியின் வீழ்ச்சி

அதானி குழுமத்தின் முதன்மைக் கம்பெனிகளின் பங்குகள் வெகு காலமாக 26.5ரூ குறைந்தன. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அதானி முதல் பத்து இடங்களிலிருந்து கீழே தள்ளப்பட்டுவிட்டார்.

ஆசியாவிலேயே முதல் இடத்திலிருந்து கீழே இறங்கி விட்டார்.

அதானி குழுமத்திற்கு ஏழு நிறுவனங்கள் இருக்கின்றன. மின் பகிர்வு, பசுமை எரிசக்தி, துறைமுக நிர்வாகம் முதலியவை அதானியின் பெயரில் இயங்குகின்றன. சிமென்ட் தயாரிப்பு, விமான நிலைய நிர்வாகம், நிலக்கரி சுரங்கம், டிஜிட்டல் சந்தை என்று, எல்லாத்துறைகளில் அதானி அவர்களுடைய ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது.

ஆனால், ஹின்டன்புர்க் (Hindenburg) அறிக்கை வெளியானவுடன், அதானி அவருடைய மொத்த சொத்து மதிப்பில்  40ரூ இழந்துவிட்டார் என்று, The Wall Street Journal எழுதுகிறது. அந்த ஏடு அதானியின் அசுர வளர்ச்சி பற்றியும் எழுதுகிறது. திரு. மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அரசு துறைமுகத்தின் அதனுடைய பங்கு அதானி ஏற்றுமதி நிறுவனத்திற்கு வந்து விட்டது. அது இந்நாளின் மிகப்பெரிய ஏற்றுமதி துறைமுகமாக ஆயிற்று. அதுதான் அதானியின் தொழில் வெற்றிக்கு திறவுகோலாக அமைந்தது. திரு. நரேந்திர மோடிக்கு மிக முக்கியமான அரசியல் வெற்றியாகவும் அமைந்தது.

அதானியின் அசுர வளர்ச்சி பற்றி அந்த ஏடு மேலும் சொல்கின்ற விவரங்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன. மிக முக்கியமாக அதானி, அதானி என்ட்ர்பிரைசஸ் என்ற குழுமத்தைப் பற்றிய செய்திகள் உலக வர்த்தகச் சந்தையையே அதிர்ச்சியடைய செய்கின்றது.

2020 ஆகஸ்ட் 18க்கும் அதானி என்டர் பிரைசஸ் பங்கு 8.0ரூ, அடுத்த நாள் 11.86ரூ பிறகு, ஆகஸ்ட் 25 க்கு பிறகு  24ரூ அதிகரித்தன.

பிப்ரவரி 2021 மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 23.5ரூ பங்குகளை வாங்கியது..

மே 16, 2022 சிமென்ட் கம்பெனி 10.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டது.

ஆகஸ்ட் 23, 2022 நியூ டில்லி டெலிவிஷனில் (NDTV) 29 சதவீத பங்குகளை வாங்கியது.

செப்டம்பர் 16, 2022 உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் அதானி. அதானி எண்டர்பிரைசின் பங்குகள் ஐந்தாண்டுகளில் 1000ரூ கூடி விட்டன.

கல்லூரி படிப்பை இடையில் நிறுத்தி, வைர வியாபாரத்தில் இறங்கிய அதானி 10 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பணக்காரராக ஆனது எப்படி?

2012 இல், அம்பானியின் சொத்தில் ஆறில் ஒரு பங்காக இருந்த சொத்து, பத்தாண்டுகளில் அம்பானியையும் சாப்பிடும் அளவிற்கு அதிகரித்தது எப்படி?

உலக ஏடுகள் எல்லாம் அதானியின் வளர்ச்சிக்கு அவருடைய அரசியல் நெருக்கம்தான் காரணம் என்று எழுதுகின்றன. ஒரு நாளைக்கு அதானி குடும்பத்திற்கு மட்டும் ரூ.1,600 கோடி வருவாய் என்று எக்கனாமிக்ஸ் டைம்ஸ் ஏடு தலைப்புச் செய்தி போடுகிறது.

 2022 ஆம் ஆண்டில், அவருடைய சொத்து மதிப்பு ரூ.10,94,400 கோடி. அம்பானியைவிட ரூ.3 லட்சம் கோடி அதிகம்.

கடந்த ஆண்டில் மட்டும் அவருடைய சொத்து 116 விழுக்காடு கூடிற்று. ஐந்து ஆண்டுகளில் 1440 விழுக்காடு கூடியது. அவருடைய பங்குகள் மதிப்பு 1200ரூ  முதல் 7992ரூ  அதிகரித்தன.

எனினும் செப்டம்பர் 22,2022 அன்றே நியூ இந்தியா எக்ஸ்பிரஸ் Equitymaster என்ற பங்குச் சந்தை பற்றி ஆய்வு செய்யும் ஒரு நிறுவனம், அந்த எச்சரிக்கையையும் வெளியிட்டது. "தொழில் சராசரியைவிட அதிக மதிப்பில் அதானி குழுமம் வியாபாரம் செய்ததாகவும், அதாவது அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

வேறு சில ஆய்வாளர்களும் அதானி குழுமத்தின் அதிகமாகிக் கொண்டு வரும் கடனைப்பற்றியும், அதிகமாக மதிப்பீடு செய்து வருவது பற்றியும் எழுதின. எனினும், முதலீடு செய்பவர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய குழுமம், அதுவும் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு நிறுவனம் பெரிய அளவில் இழப்பைச் சந்திக்க வாய்ப்பில்லை என்று சொல்லிக் கொண்டார்கள்.

அதானி, பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று பேசிக் கொண்டார்கள் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதுகிறது.

இந்த நிலையில்தான் 2023 ஜனவரி 24 அன்று ஹின்டன்புர்க் ஆய்வு அறிக்கை வெளியானது. இரண்டாண்டு காலம் செய்த ஆய்வின் முடிவை, பங்குச் சந்தையைப் பற்றி ஆய்வு நடத்தும் அந்த நிறுவனம் “அதானி குழுமம் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பணக்காரராக இணைவதற்கு, வரலாற்றில் மிகப் பெரிய ஏமாற்று வேலையை நடத்தியிருக்கிறது” என்ற தலைப்பில் தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

* பல பத்தாண்டுகளாகத் துணிச்சலாகப் பங்குசந்தையில் தனக்குச் சாதகமாக விலை மாற்றி ஏமாற்றிக் கணக்குகளைக் காட்டியிருக்கிறது.

* கவுதம் அதானி 120 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்தைக் குவித்திருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளில் டாலரின் விலையைச் சாதகமாக்கி, 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதனோடு கூட்டியிருக்கிறார். இந்தக் கால கட்டத்தில் அவரது குழுமத்தின் பங்குகள் 81.9ரூ உயர்ந்திருக்கின்றன.

* அதானி கம்பெனிகள் அதிகப்படியான விலைகளைக் குறித்த பங்குகளை அடகு வைத்து, ஏகப்பட்ட கடன்களை வாங்கியிருக்கின்றன. அவை மூழ்கிப்போகும் நிலையிலுள்ளன.

* அதானி குழுமத்தின் முக்கிய பொறுப்புகளில் அதானி குடும்பத்தார் மட்டுமே இருக்கிறார்கள். இது ஒரு குடும்ப கம்பெனி.

* அதானி குழுமம் நான்கு பெரிய ஏமாற்று வேலைகளுக்காக அரசால் விசாரிக்கப்பட்டிருக்கிறது. வரிசெலுத்துவோரின் பணம் திருடப்பட்டுள்ளது. இந்த ஊழலின் அளவு 17 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஐக்கிய அரபு நாடுகள், மொரீஷியஸ் முதலான வெளிநாடுகளிலும் ஏமாற்று வேலைகள் நடந்திருக்கின்றன.

* அதானியின் தம்பி ராஜேஷ் அதானி Directorate of Revenue Intelligence

 ஆல் வியாபார ஊழலில் குற்றம் சாட்டப்பட்டார். அதன் தலைவராக அதானியின் மைத்துனரும் சேர்க்கப்பட்டார்.

* அதானியின் அண்ணன்  வினோத் அதானிக்கும் மொரிஷியஸ் முதலான இடங்களில் நடக்கும் விவகாரங்களில் தொடர்பு உண்டு.

*கடலில் எண்ணெய் கிணறுகள் தோண்டுவது தொடர்பான வேலைகளில் பல ஊழல்கள் நடைபெற்றிருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.

இவ்வாறு, அடுக்கடுக்காக ஹின்டன்புர்க் அறிக்கை ஊழல் குற்றங்களை முன்வைக்கிறது.

வெட்கக்கேடு என்னவென்றால், அந்த அறிக்கையின் முதலில் கூறப்பட்டிருப்பது தான். “உலகின் மிகப் பிரகாசமான தொழில் முனைவோர், பொறியியலாளர், தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் தாயகம் இந்தியா. உலகின் சூப்பர் பவராக வந்து கொண்டிருக்கிறது. எனினும், நாட்டின் பொருளாதாரம் அதன் மூல தனச் சந்தையின் உடைந்து போன நிலையில் பின்தங்கிப் போகிறது” என்று எழுதுகிறது. பங்குச்சந்தை ஊழல் எப்படி நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அதானியின் ஊழல் நமது பொருளாதாரத்தை எவ்வளவு பாதித்திருக்கும் என்பதை எல்லாம் நம்மால் கணக்கிட்டுப் பார்க்க முடியாது. அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அதானி குழுமத்திற்குத் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது இந்த ஹின்டன்புர்க் நிறுவனம்.

அறிக்கை வெளியானவுடன் பங்குச்சந்தையிலும், அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன. ஆனால், அதானியை தூக்கிப் பிடித்து நிறுத்த இந்தியாவில்தான் ஆட்கள் இருக்கிறார்களே!

Comment