No icon

ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி

திருத்தந்தை புதுப்பித்துள்ள ‘C9’ கர்தினால்கள் ஆலோசனை அவை

முந்தைய கர்தினால்கள் அவையின் ஆணையுரிமை காலக்கெடு முடிந்த நிலையில், ஆயர் மார்கோ மெலினோ அவர்களை செயலராகக் கொண்டC9எனப்படும் திருத்தந்தைக்கான கர்தினால்கள் ஆலோசனை அவையை திருத்தந்தை பிரான்சிஸ் புதுப்பித்துள்ளார்.

 ‘C9புதிய கர்தினால்கள் அவையின் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காலை திருத்தந்தையின் இல்லமான சாந்தா மார்த்தாவில் நடைபெற உள்ளது.

உலகளாவிய திரு அவையின் நிர்வாகத்தில் திருத்தந்தைக்கு உதவுவதற்காக 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இந்தக் கர்தினால்கள் ஆலோசனை அவை உருவாக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை நடைபெற்றது.

உரோமன் தலைமைச் செயலகத்தில் மாற்றங்களைக் கொணரும் விதத்தில் நிறுவப்பட்ட இந்தக் கர்தினால்கள் ஆலோசனை அவை, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட புதிய அப்போஸ்தலிக்க அமைப்புமுறைச் சட்டமான பிரேடிக்கேட் எவாக்ங்கலியம் Praedicate Evangelium-ன் வழியில் அதன் திட்டச் செயல்பாடுகள் நிறைவேற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினால்கள் 1. பியத்ரோ பாரோலின், 2. பெர்னான்டோ வர்கீஸ் அல்சாகா, 3. ஃபிரிடோலின் அம்போன்கோ, 4. மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், 5. சீன் பாட்ரிக் மாலே, 6. ஜூவான் ஜோஸ் ஓமெல்லா, 7. ஜெரால்டு லாக்ரோய்க்ஸ், 8. ஜீன் கிளவுடே ஹோலேரிச், 9. செர்ஜியோ டா ரோக்கா ஆகியோர் புதிய கர்தினால்கள் ஆலோசனை அவையின் உறுப்பினர்கள் ஆவர்.

Comment