No icon

நல்லிணக்கப் போராளி தந்தை லெவே

இறையடியார் லெவேயின் விண்ணக பிறப்பு 50 ஆம் ஆண்டு

இறையடியார் லூயி மரி லெவே சே. . அவர்களின் பெற்றோர்கள் ஜோசப் லெவே, ஜுலியான் லெபினே-க்கு இரு ஆண்டுகள் (02.10.1865 திருமணம்) குழந்தை இல்லை. 100 கி.மீ தொலைவு உள்ள புனித அன்னம்மாள் கோவிலுக்கு நடை பயணம் சென்று வேண்டினர். 5 சகோதரர்கள் 4 சகோதரிகளுக்கு பின்பு 10வது பிள்ளையாக லெவே 06.04.1884-ல் பிரான்சுரென்மறை மாவட்டலையேஊரில் பிறந்தார். பக்தியில், ஞானத்தில் சிறந்து விளங்கிய சாதாரண விவசாயம் குடும்பத்தில் வளர்ந்தவர். 14.10.1908-ல் சேசுசபை குருவாகும் எண்ணத்தில் இந்தியா வந்து 13-01-1920 சேசுசபை குருவாக திருநிலைப் படுத்தப்பட்டார். மதுரை மறைபரப்பு மையத்தில் சேர்ந்து பணி செய்ய வந்தார். 1921, ஏப்ரலில் ஆண்டாவூரணி (இந்நாள் சிவகங்கை மறை மாவட்டம்) பணி நியமனம் பெற்று அதே ஆண்டு நவம்பர் 19-ல் தான் பணியினை ஏற்றார். 1921-1943 ஆண்டுகளில் ஆண்டாவூரணியிலும், 1943 - 56 வரை இராமநாதபுரத்திலும் பங்கு பணியாளராகப் பணி செய்தார். 1956 -21.03.73 முடிய சருகணியில் பணி செய்து இறைவனடி சேர்ந்தார். 21.03.2023 - அன்று இறையடியார் லூயி மரி லெவே விண்ணகப் பிறப்பு 50 ஆண்டு விழா. சிவகங்கை, சருகணியில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. புனிதர் பட்டமும் விரைவில் கிடைக்கும் என்ற உறுதியுள்ளது.

சருகணியில் 1956-73 வரை பணி ஓய்வு என்பது லெவே அடிகளாரைப் பொறுத்தமட்டில் பணி ஓய்வு அல்ல. சருகணி பங்கு கிளைக் கிராமத்தில் எட்டுக் கோயில்களைக் கட்டிய கட்டிடப் பொறியாளர், புனித அருளானந்தரால் மனமாறிய கிறித்தவர், இடையில் தாய் மதம் சேர்ந்தோரை ஆற்றுப்படுத்தியவர்- பிற சமூக, சமய மக்களை கிறித்துவில் கொண்டு வந்த சமயப் போராளி-இந்து முஸ்லீம் என வேற்றுமை பாராது மக்களுக்கு செபித்தும், கல்வி உதவியும் தபால் கார்டிலே பரிந்துரை கடிதம் கொடுத்து உதவிக் கரம் நீட்டிய சமூக ஆர்வலர்; செப ஆசீர், மந்திரிப்பும், உழவர்களின் வேளாண்மைக்கும், கால் நடைக்கும் நம்மாழ்வார் லெவேயாகவும், மருத்துவராக இருந்து செபித்து குணப்படுத்திய மருத்துவர்; செபிக்கும் கையாலே மழை பொழியச் செய்யும் மழை மேக வண்ணர்; நெருக்கம் எனக்கு இல்லை. ஆனால், பல தடவை ஆசீரும், நெற்றி சிலுவை பெற்றவன் என்பதால் இறையடியார் லூயி மரி லெவேயின் பொன்னடி போற்றி வணங்கி அவர் தம் விண்ணகப் பிறப்பு விழா 50 ஆம் ஆண்டு நாளில் போற்றுகிறேன். அவரடி தொழுவோம்! புனித மனிதர், கடவுளின் மகான், செப தவத்தின் மா மனிதர்; கடவுளின் ஆன்மீக செயலாக்கம் - தவக்குரு, இறைவாக்குரைஞர் என பல ஆளுமை பரிணாமங்களை கொண்டிருந்தாலும், அவரது வாழ்வில், வரலாற்றில் பதிந்தவை பல நிகழ்வுகள்; சாதனைகள்-புதுமைகள்-வெற்றிச் செய்திகள்-பற்பல-எழுதிட சொல்லிட நாட்களாகும்.

சமூக நல்லிணக்கப் போராளி

அவரைப் பற்றி கேட்டால் போராளி போல் தெரியும்-ஆனால் பார்த்தால் நல்லிணக்கத் தூதுவர் துறவி என்று தான் கூற வேண்டும். 1921, நவம்பர் 19-ல் ஆண்டாவூரணிக்கு பங்கு பணிப் பொறுப்பு ஏற்றார். மழலைத் தமிழ்-குள்ள உருவம்-நடைபயணி-சில நேரம் மாட்டு வண்டிப் பயணி எனலாம். 1774 உலகில் சே. . தடைபட்ட கால முதல் 1830  மறைபரப்பு மையம் தொடங்கும் காலம் வரை சேசு சபையார் விட்டு சென்ற பல பணித்தளங்கள், பதுரவதோ எனப்பட்ட கோவா போர்த்துக்கல் நாட்டினர் மேற்பார்வையில் மயிலை ஆயர் கீழ் இருந்தன. அப்படி இருந்த ஊர்களில் ஒன்று தெற்கு ஆண்டாவூரணி, வடக்கு ஆண்டாவூரணி மதுரை மறைப்பு மையம் உரோமை கர்தினால் மார்க்கு உட்பட்ட விசுவாசப் பரப்பு ஆணையம் (புரொபகாண்டா) கீழ் சேசு சபையார் கையில் இருந்தது. வடக்கூர், தெற்கூர் இரண்டையும் பிரிப்பது. ஆண்டாள் தேவதை பெயரில் அமைந்த குடி நீர் ஊருணி இருகரையிலும் ஊர்கள். வடக்கூர் பாதுகாவலர் மிக்கேல் அதிதூதர். தெற்கூர் பாதுகாவலர் அடைக்கல அன்னை. இரு ஊரின் வட தென் எல்லை சேர்த்தால் 1/2 பர்லாங்கு தான் அன்று.

5.10.1893 - ல் புளியால் பங்கிலிருந்து 106 கிளைக் கிராமங்களுடன் பிரிந்தது ஆண்டாவூரணி. இதில் அன்று மூன்று ஒரு பங்கு மக்கள் கோவையார் பங்கு எனப்பட்ட கோவன் குருக்கள் மேற்பார்வை (தெற்கூர்). பங்கு கோயில் வடக்கூர் சே. . குருக்கள் வசம்-ஓரின மக்கள் கொள்வினை கொடுப்பினை, சமூக உறவு யாவும் உண்டு. சமய உறவில் மட்டும் பிரிவினை போக்கு. உரோம் இடும் சமயக் கட்டளைக்கு மட்டும் கோவையார், கோவன் குருக்கள் கட்டுப்படுவர். நிர்வாகம் பிற தொடர்புகள் அவர்களது உரிமை-சடங்குகளில் குழப்பம்.

தந்தை லெவே பணி ஏற்றார் மூன்றே திங்களில் பங்கு கிராமங்களைப் பார்வையிட்டு முடிவு கொண்டு. இரு ஊர்களை ஒன்றுபடுத்த, ஊர்க்கு நடுவில், ஊருணி மேல் கரையில், பணி. லூசியான்ஸ் வாங்கி போட்ட இடத்தில் பொது திருக்கோயில், இரக்கமிகு அன்னையின் அருள் கிடைக்க கோயில் எழுப்பத் திட்டமிட்டார். இரு ஊர் மக்களிடம் உறவாடினார் - செபித்தார். செபிக்க மக்களைத் தூண்டினார். பொருள் உதவி வேண்டினார். அம்மக்களின் முன்னோர் 18-ம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்தவர்கள். ஏழ்மை நிலை - இருப்பினும் அவரது நண்பர் பாரிசில் குடியேறியவர் (அமெரிக்கர்) மரிய பிளாங்கா 100 டாலர் அனுப்பினார். ஆண்டாவூரணி சூசை மேஸ்திரி. பர்மாவுக்கு பிழைக்கப் போனவர். கோவில் கட்ட 1000 ரூபாய் அனுப்பினார் (பீடம் கட்டப்பட்டது). இரக்க நாயகி சுரூபம் மரிய பிளாங்கா அனுப்பினார். 1924 - 28க்கு இரக்க நாயகி கோயில், பொதுக் கோயில் கட்டப்பட்டு திருச்சி ஆயர் அகஸ்தீன் பெசாந்தியாரால் அர்ச்சிக்கப்பட்டு இன்றும் உள்ளது. 1930-ல் உரோம் - போர்த்துக்கல் உடன்பாட்டின் படி கோவன் பொறுப்பு. மயிலை ஆயர் கீழ்பணி ஒழிந்தது. ஒரே ஆயன் ஒரே மந்தை ஆனது. மயிலை ஆயர் பொறுப்பிலிருந்த ஓரியூர் ஆண்டாவூரணியுடன் இணைந்து, 1943-ல் ஓரியூர் தனி பங்கு சேசு சபையிலும், ஆண்டாவூரணி மதுரை மறை மாவட்டத்திலும் சேர்ந்தது. இரு ஊர் மக்களும் இணைந்தனர் முறைப்படி என்றாலும் தந்தை லெவேயின் நல்லிணக்கத்தாலும், உறவாலும், செபத்தாலும் இரக்க நாயகி ஆலயம் கட்டுமான முதலே இரு ஊரும் இணைந்து விட்டனர் என்பதே உண்மை. அந்த நாளில் பர்மா சென்ற சூசை மேஸ்திரியை தந்தை லெவே வாழ்த்தி ஆசீர் அளித்து எந்நாளும் இறைவனுக்கு உம் குடும்பம் ஊழியம் செய்யும் என்றாராம். அதன்படி இன்று நாம் பார்க்கலாம். சூசை மேஸ்த்திரிக்கு இரு சகோதரர்கள் இரு சகோதரிகள் ஒரு தம்பி (பெயர் தெரியவில்லை) அவரது பேரன் பிரான்சிஸ் சேவியர் (அமரர்) சேவியர் தம்பி மகன்; அவரது கொள்ளு பேரன் பணி. சூ. . செயசீலன் சிவகங்கை மறை மாவட்டம். மற்றொரு தம்பி சந்தியாகு பாதரக்குடி இவரது பேரன் பணி. . . இருதயராசு (தஞ்சை மறை மாவட்டம்); ஒரு சகோதரி மரியம்மாள் வெள்ளாகுளம், ஆலங்குடி வட்டம் K. இராசிய மங்களம் பங்கு அவரின் கொள்ளுப் பேரன் பணி. பீட்டர் டேமியன் (தஞ்சை மறை மாவட்டம்) தந்தை லெவேயின் தீவிரப் பக்தர். ஆசி பெற்றவர். மற்றொரு சகோதரி சவரியம்மாள் ஆண்டாவூரணி, அவரின் பேரன் பணி. மரிய லூயிஸ் சே. ., பேத்தி அருட்சகோதரி சாராள் என்ற சுகந்தி (..).

ஆண்டாவூரணியிலிருந்து பர்மாவுக்கு பிழைக்கப் போன லூயி சூசை மேஸ்திரி, தந்தை லெவேயின் ஆசீரைப் பெற்றவர். தந்தையின் ஆசீராலும், செபத்தாலும் திரு அவை இறைப்பணியில் அவரது குடும்பம் ஒளிர்கிறது என்பதை நினைத்துப் பார்த்து நன்றி கூர்வோம். அவரது உறவினர்கள் இன்று இரு ஊர்களிலும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். 25.09.1933-ல் பிரான்சில் தனது சகோதரிக்கு பர்மா சூசைப் பற்றி பாராட்டி எழுதியுள்ளார். அன்னை இரக்க நாயகி கோயில் 1928 ஆம் ஆண்டு பங்கு கோயிலானது. வடக்கூர் அதிதூதர் மிக்கேல் திருக்கோயில் அருள் மணக்கும் திருக்கோயிலாக, புதுமைச் கோயிலாக இன்றும் உள்ளது.

வாசிப்பை நேசித்த தந்தை

செப மனிதர்; மந்திரித்து குணப்படுத்துபவர் பூச்சிகளை விரட்டி வேளாண்மை காத்தவர் என்றுதான் மக்களுக்குத் தெரியும். 30 கோயில்களைக் (15+7+8) கட்டிய கட்டிட இயலாளர் என்பது பலர்க்கு தெரியாது. பிரான்சில் வாழ்ந்த தன் சகோதரர், சகோதரி, மருமகள் ஆகியோருக்கு பாளையங்கோட்டையிலிருந்து (26), ஆண்டாவூரணியிலிருந்து (26) மடல்கள் எழுதி, தன் பணி பற்றி-மக்கள் பற்றி, உதவி பற்றி என கடிதங்கள் எழுதி செம்மண், சிவகங்கை மறை மாவட்டத்து பவுல் அடிகளார் எனப் புகழத்தக்கவர் தந்தை லெவே ஆவார். தந்தை லெவே ஒரு மிகப் பெரிய எழுத்தாளர் என்பதை காரித்தாஸ் 1963-ஜனவரி இதழைப் படித்தவர்கட்கு தெளிவு தரும். தனது உறவினர்கள் என்னென்ன நூல்கள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மடலிலும் எழுதுவார். தான் படித்தது பற்றி கூறுவார். பணி. ப்ரோ எழுதிய பிரான்சிஸ் சேவியர்; பணி. க்கிரோஸ் எழுதியநம் வாழ்வுகளில் தொடர்புள்ள ஆன்மா I, II; புனித தெரசாவின் ஆன்மீக உணர்வுமலர்களின் மழைத் தாரகைகள் (இயேசுவின் ஆக்னஸ் எழுதியது); புனித இஞ்ஞாசியார்ஆன்மீகப் பயிற்சிகள்; புனித தெரசாவின் சுய வரலாறு, (புனிதர்) நிறைவு நிலையின் பாதைகள், விவிலிய வாசிப்பு என்பன போன்ற பல நூல்களைத் தான் படித்துள்ளதாகவும், நீங்களும் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடித வாயிலாக எழுதியுள்ளதைப் படிக்க முடிகிறது. எந்த புனிதர்கள் வரலாறு நமக்கு நெருக்கமாக உள்ளதோ அந்த வரலாற்றை தேர்ந்து கொள்க என்று கூறுகிறார். வரலாறு தான் உங்கள் வழிகாட்டி பாதுகாவலர் என்று 25.09.1927 (ஆண்டாவூரணி) மடலில் கூறுகிறார். இராமநாதபுரத்தில் பணியேற்ற 1943-ல் 200 பேர்கள் கிறித்தவர்கள். ஏழைப் பணியாளர்கள், படிக்க வசதியில்லாதவர், அவர்தம் குழந்தைகள் படிக்க, இராமநாதபுரம் செபமாலை அன்னை ஆலயத்தின் வளாகத்தில் மாணவர், பெரியோர் படிக்க நூலகம் ஏற்படுத்தி கற்றலை, வாசிப்பை, எழுத்தினை போற்றினார் தந்தை. இன்று கை தொடும் ஊடகங்கள் வாசிப்பை கழற்றி விடுகின்றன. அரிக்கன், மெழுகுதிரி ஒளியில் கண்ணாடி அணியாது குனிந்து பல நூறு செப, தப, விவிலிய செய்திகளை வாசித்தவர் தந்தை லெவே. அவரது கண்களின் ஒளி வெள்ளம் நம்மவர்க்கு இன்று இல்லை-வாசிப்பும், நூலகம் நேசிப்பும், அருகி விட்டன. அரசு புத்தக காட்சி மூலம், நூலகங்கள் மூலம் வாசிப்பை ஊக்குவிக்கின்றன. இச் செயல் நம் கண்களுக்கு காதுகட்கு எட்டி இருக்கலாம். தந்தை லூயி மரி லெவே விண்ணகப் பிறப்பு 50 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவர் கண்ட, போற்றிய வாழ்ந்து காட்டி பல ஆளுமைகளில் சமய, சமூக நல்லிணக்கத்தை மறவாமல் பேணுவோம், நூல்களின் வாசிப்பை நேசிப்போம், பங்கு தோறும் நூலகம் காண்போம்.

தந்தை லெவேயின் மலரடி தொழுவோம்-புனிதர் ஆகும் நாளுக்காக செபிப்போம்.

Comment