No icon

திருத்தந்தையின் மறைக்கல்வி

நற்செய்தி அறிவிப்பு பற்றார்வம்

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி இயேசுவின் பிரதிநிதியாக இருந்து திருஅவையை வழிநடத்த திருத்தந்தையாக கர்தினால்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2023 மார்ச் 13 ஆம் தேதி திங்களோடு திருத்தந்தை பிரான்சிஸ் பத்தாண்டுகளை நிறைவுச் செய்துள்ளார். இதனை திருஅவை சிறப்பாகக் கொண்டாடியபின் இவ்வாரம் புதன்கிழமையன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கில் திருப்பயணிகள் குழுமியிருக்கநற்செய்தி அறிவிப்பிற்கான பற்றார்வம்: விசுவாசிகளின் அப்போஸ்தலிக்க உத்வேகம் என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் மறைக்கல்வியுரையை வழங்கினார். முதலில் லூக்கா நற்செய்தியின் 10ஆம் பிரிவிலிருந்து முதல் இரு வசனங்கள் பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டன. அதன்பின் திருத்தந்தை தன் சிந்தனைகளை திருப்பயணிகளோடு பகிர்ந்துகொண்டார்.

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர் சகோதரிகளே, மறைப்பணி பேரார்வம் குறித்த புதன் மறைல்வித்தொடரில் இன்று நற்செய்தி அறிவித்தலின் அப்போஸ்தலிக்க கூறு குறித்து நோக்குவோம். நமது விசுவாச அறிக்கையில் நாம், நம் திருஅவையைஅப்போஸ்தலிக்கஎன்று அறிக்கையிடுகிறோம். அப்போஸ்தலர் என்ற வார்த்தை, ‘அனுப்பப்பட்ட ஒருவர்என்ற நேரடி அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இயேசு பன்னிரெண்டு சீடர்களை தனக்கெனத் தேர்ந்துகொண்டு, பின்னர் அவர்களை நற்செய்தி அறிவிப்பிற்கென அனுப்பியதாக விவிலியத்தில் வாசிக்கின்றோம். இயேசு உயிர்த்தபின் தன் சீடர்களுக்குத் தோன்றினார். அப்போது அவர் அவர்களை நோக்கி, “தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்என்றுச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படாஎன்றார் (யோவா 20:21-22).  இயேசு கிறிஸ்துவின் மறையுடலில் காணப்படும் மறைப்பணிகள் மற்றும் தனிவரங்கள் என்னும்  பன்முகத்தன்மைகளின் உதவியோடு, திருமுழுக்குப்பெற்ற அனைவரும் திருஅவையின் அப்போஸ்தலிக்கப்பணியை முன்னோக்கி எடுத்துச்செல்ல அழைப்புப் பெறுகிறார்கள்திருப்பொழிவுப் பெற்றோர் அனைவரும், இயேசுவின் பெயராலும் அதிகாரத்தாலும் கற்பிக்கவும், நிர்வகிக்கவும், புனிதப்படுத்தவுமான மறைப்பணியை பெற்றுள்ள அதேவேளை, திருஅவையின் அங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவின் குருத்துவ, இறைவாக்குனர்க்குரிய, அரச அலுவல்களில் பங்குபெறுபவர்களாக, நற்செய்தி அறிவிப்பின் சீடர்களாக, அதாவது, அப்போஸ்தலிக்க திருஅவையின் சீடர்களாக அழைப்புப் பெற்றுள்ளார்கள். நமது பொதுமாண்பு மற்றும் சரிநிகர்தன்மையை ஏற்றுக்கொள்வது என்பது, நற்செய்தியை அறிவிப்பதில், மேலும் நம் ஒன்றிப்பு மற்றும் ஒத்துழைப்பைக் குறிப்பதாகும், மேலும், வார்த்தையாலும் நடவடிக்கையாலும், இயேவின் மீட்பின் நற்செய்தியை அறிக்கையிடுவதாகும்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

Comment