புனித பாத்திமா அன்னை
மரியன்னையின் காட்சிகள்
முதல் காட்சி
* 1917 ஆம் ஆண்டு, மே மாதம் 13 ஆம் நாள், ஆடுமேய்க்கும் சிறார்களுக்கு முதன் முறையாக காட்சியளித்த அன்னை தொடர்ந்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என 6 முறை காட்சியளித்தார்.
* ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு செய்தியை கூறிவிட்டு மறைந்தார். உலகில் போர் முடியவும், அமைதி ஏற்படவும் நாள்தோறும் செபமாலை ஜெபிக்க வேண்டும்.
* லூசியா வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்; அனைவரும் ஒவ்வொரு நாளும் தவறாமல் செபமாலை செபிக்க வேண்டும்.
* போர் பற்றிய அறிவிப்பு, ரஷ்ய நாட்டை மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.
* தினமும் ஜெபமாலை சொல்ல வேண்டும், கடைசி மாதத்தில் மக்கள் நம்பும்படியான புதுமைகள் நடக்கும்.
* போர் விரைவில் முடியும்; மனிதர்கள் தங்கள் பாவங்களை எண்ணி வருந்தி ஜெபிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்ல வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும்.
* நிறைவேறிய பாத்திமா செய்திகள் அன்னை தன் காட்சிகளில் கூறிய செய்திகள் பல அவர்களின் வாழ்வில் நிறைவேறின.
* நீ வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அன்னையின் இரண்டாம் காட்சியின் சொல்படி லூசியா கன்னிமடத்தில் சேர்ந்து முறைப்படி எழுத படிக்க கற்றுக்கொண்டாள்.
* அன்னையின் மூன்றாம் காட்சியின் செய்திபடி 1952 இல், திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் ரஷ்ய நாட்டை மரியாவின் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக் கொடுத்தார்.
* திருத்தந்தை 15 ஆம் ஆசீர்வாதப்பரின் ஆலோசனையில் 18 ஆண்டுகால தீவிர விசாரணைக்கு பின் 1931 இல், ஆயர்கள் அனைவரும் பாத்திமா காட்சிகள் அனைத்தும் உண்மை என்று அதிகார பூர்வமாக ஒப்புக்கொண்டனர்.
நம் அன்னையின் அன்பு தரணியே அழிந்தாலும், நமது குடும்பங்களை அழியாமல் காப்பதும் ஆன்மீகப் பாதையில் வழிநடத்துவதும் நம் அன்னைதான். பாத்திமா அன்னையின்றி ஏது வெற்றி? அந்த அன்னையிருக்க ஏது தோல்வி?
மாசற்ற முறையில் கருவிலே உருவாகி, மனுமகனைப் பெற்றபோதும் தம் கன்னிமையில் கிஞ்சித்தும் குன்றா காரிகையவள்! விண்ணையும், மண்ணையும் இணைக்கும் பாலமாக அன்பிலே விளைந்த ஆரமுதாக அவனிக்கு வந்த காரிகையவள்! அன்பையே உயிர்நாடியாக கொண்டவள்.
நெல்லுக்குள் மணியையும் நெருப்புக்குள் ஒளியையும் உள்ளுக்குள் வைத்த தெய்வம், புனித பாத்திமா அன்னையை நம் அனைவருக்கும் அன்னையாக தந்துள்ளார். நாவார அவள் புகழ்பாடி மனமாற அவர்களை தஞ்சமடைவோம். கிருஷ்ணகிரி புனித பாத்திமா திருத்தலம் வந்து அவர்தம் பரிந்துரையால் ஆயிரம் புதுமைகள் காண்போம். வாருங்கள்! அனைவருக்கும் இறையாசீர்!
Comment