உழைப்பின் உயர்வை உணர்த்திய உத்தமர்
தொழிலாளரின் பாதுகாவலர், புனித “யோசேப்பு”
- Author ‘வெட்டிவயல்’ வளவன் --
- Saturday, 29 Apr, 2023
இப்பிரபஞ்சத்தின் தூய
இதயக் கனவுப் பூங்காவின்
நீதிமானே! யாக்கோபின் திருமகனே!!
எளிமையிலும், மேன்மையிலும், தொழிலின்
அருமையை உணர்த்திய நாசரேத் ஓசேபே !
இன்று எங்களால் வாழ்த்தப்பெறும் தந்தை
யோசேப்பே !
தேம்பாவணிப் புலவர் நாவின் வளனே !
கன்னி மரியின் கரம்பற்றி
வானவர் கருத்துரு ஏற்ற பெருமானே !
கனவின் முதல்வனின் புனித நாட்கள்
மார்ச் பத்தொன்பதும் - மே முதல் நாளுமா?
இன்றும் தான் இல்லை - என்றும் தான் !
மீட்பர் இயேசுவின் மீட்பு
இறைத் திட்டத்தில் கனிவான
கனவு மொழி மூத்தவரே !
நற்செய்தி ஞானியே !
சோதனைகளிலும், வேதனைகளிலும்
தூய ஆவியின் ஏவுதலில் நடத்தப்பட்ட
கனவின் பலன் சான்றளிக்கும் மூலவரே !
அந்த இரு நாட்களிலுமா? நினைக்கிறோம்
இல்லை; இல்லை - என்றும்தான் !
தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கைச் சு(சூ)ழல்
சக்கரத்தில் உம்மை மறக்காமல் இருக்க
“மே” தினியின் இனியவரே !
‘மே’ முதல் நாள் உன் பெருநாள் பெருமை மட்டுமல்ல!
உழைப்பின் மேன்மையை உலகுக்குணர்த்திய
உன்னத நாள்: உழைப்பு - உழைப்பே !
தச்சர் மகன்தானே என்று
எச்சமிட்ட யூதர்கள் மத்தியில்
பிறர் பொருளைக் கவர்ந்த கொள்ளையர் நடுவில்
உழைப்பின் உயர்வை உணர்த்திய உத்தமரின்
தந்தையே ! (யோசேப்பே)
ஓ ! எம் பாதுகாவலரே !
மே தினத்து நாளின் முதல் போராளி !!
நீர்தான் ! உமக்கு எம் பேர் வணக்கம் !
மரியாவின் கரம் பற்றிய கனவின் கலை மகனே !
நாசரேத் தச்சுப் பட்டறையின் தொழிலாளியே !
உம் நினைவு முத்திரை ஒவ்வொரு மணித்துளியும்
சுத்தியலிலும், உளியிலும், இழைப்புக் கருவியிலும்
அறுவை இரம்ப உருளையிலும், உம் பிம்பங்கள்
தெரிகின்றன பெருமானே !
உம் வாஞ்சையின் அருமையும் ! தெரிகிறது !
நீவீர்,
(அ) தச்சுத்தொழிலாளி மட்டுமல்ல !
சமூக அந்தஸ்தில்
வாழ்ந்த உயர் சமூகத்து கட்டடக் கலைஞர் !
கட்டடக் கலைஞரின் மகன் என்பதாலே - இயேசு
எருசலேம் தேவாலயத்தில் குருமார்கள் மத்தியில்
கேள்விக்கணைகள் கேட்க முடிந்தது; ஆலயத்தின்
வணிகரைத் துரத்த முடிந்தது - கிரேக்க மொழியில்
‘டெக்டான்‘ என்றால்
தச்சுத்தொழிலாளி - எனில் பொருளோ,
கட்டடக் கலைஞர் எனவும் கூறுவர்
(ஆ) (ஆடம் பிராட்போர்டு என்ற பைபிள் ஆய்வர் கருத்து இது, - “ஜுசஸ் டிஸ்கவரி)
அநியாயம், அக்கிரமம், சாதி, இனம், மொழி இழைக்கப்படும் அநீதியிலும்
நீதிமானே ! உம்மை நினைக்கிறோம்
நீதிமானே ! ஒற்றுமை வேற்றுமையாக்கப்பட்டு
புலம் பெயர்ந்தவர்களின் துயர்களைக்
கேட்கும் போதெல்லாம்
இறைமகன் பிறப்புக்கு இடமின்றித் தவிர்த்தும்
பின், தூதர் மொழியால்
எகிப்துக்கு புலம்பெயர்ந்ததும் - மீண்டதும்
எம் கண்ணில் வந்து - வந்து நிழலாடுகிறது !
பாலியல் வன்கொடுமை, குழந்தைக் கடத்தல்
குழந்தைத் தொழிலாளரின் கொடுமைகள்
பிஞ்சு மனக்குமுறல் - அரக்கத்தனம்
கேட்கும் போதும் - ஊடகங்களில் படிக்கும் போதும்,
எருசலேம் திருவிழாவில் - அன்னை மரியும்
நீவீரும் பதறித் தேடிய காட்சிகள் - தினம்
வந்து - வந்து அலைபாய்கின்றன !
கணவர் மனைவி வேலைக்குப் போகும்
நாட்களில் - இன்று
ஒருவர்க்கு ஒருவர் உதவியாய் இருக்க
இலக்கணம் வகுத்த
திருக்குடும்பத் தலைவனே !
எங்கள் வாழ்க்கைப் போராட்டக்களத்தில்
‘தெருக்’ குடும்பங்கள் மத்தியில் -
இல்லறத் ‘தெரு’க் குடும்பங்களாய் பற்பல !
எளிமையிலும் அமைதியிலும்
மேன்மையிலும்
உம்மை - எம்
இல்லறப் பந்தத்தில் என்றும்
மறக்கமாட்டோம் ! - வழிகாட்டியே !
நீதி தவறாத பெருமானே ! - குழந்தை
வளர்ப்பின் மூத்தத் தந்தையே !
வரலாறு உம்மை வாழ்த்துகிறது என்றும் !
எத்தனை எத்தனை அவ மரணங்கள் -
கொலைகள் நல்ல - திரு
மரணம் அடைய உம் பரிந்துரை நாளும் வேண்டும்.
அமைதிச் சாசனம் வகுத்த நீதிமானே !
உம் வேண்டுதல் வேண்டுமே
கல்விக்குக் காவலனே ! தொல்
கல்வியின் முதல் அச்சாரமே - இன்று
கலை பயில் தெளிவு கூடங்கள்
இம்மண் கண்ட பூச்சரங்கள் !
துவண்டிடும் மனித வாழ்க்கையிலும் சரி
குடும்ப வாழ்க்கையிலும் - துறவு நிலையிலும்
எண்ணிலடங்கா கல்விச் சுரங்கங்கள் !
நிறுவப்பட்ட கல்விக் கூடங்கள் - மாடங்கள் !
வளன் - சூசை - ஜோசப் - ஜோ - ஜோஸ்
ஸோ ... சூசை ராசு, மாணிக்கம்
என்ற பெயரைக் கேட்கும் பொழுதெல்லாம்
கண்முன் தெரியும் வள(வ)னே ! - உம்
பெயர் பொறித்த பலகைகளைப் பார்க்கும்
பொழுதெல்லாம் - நாளெல்லாம்
வள(வ)னே ! நீர் போற்றப்படுகிறாய் - வணங்கப் பெறுகிறாய் - இம்மண்ணை வளர்ப்பாய் ! நாளும்
பல்லியின் சத்தம் - காக்கையின் கரைதல்
கூகையின் அலறல் - உம் கனவின் பலன்
தூதர்கள் அவைகள் இல்லையே ! உணர்கிறோம் !
கிளி சோதிடம் - எலி - சோதிடம்
குறி கேட்பார் மத்தியில்
நல்ல காலம் பொறக்குது என்பார்
சொல்லை - அவன் வானதூதரா? - கேட்கமாட்டோம் !!
இல்லை இல்லை - நாம்
நீதிமான் - தந்தை யோசேப்பின்
காப்பாளர்கள் - அவரே நமக்கு காவல்
என்போம் - உறுதி கொள்வோம் !
தாவீது கோத்திரத் தச்சரே !
திருத்தந்தை 13ஆம் லியோ - உம்மை
திருஅவைக்குத் தலைவராக்கினார் -
திருத்தந்தை 23ஆம் அருளப்பர்
திருஅவையின் பாதுகாப்பை உம்மிடம்தான்
ஒப்படைத்தார் - அதை
இரண்டாம் வத்திக்கான் சங்கம் உறுதி செய்தது.
கனவின் நிலை கண்ணியத்தை - இறைக்
குரலாம் கனவின் புண்ணியத்தை
பாதுகாப்போம் - வாழ்வாக்கிட
திருஅவை பெற்றிட - நம்
புரட்சித் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
மெய்க்காப்பாளரே - உசுப்பி விடுபவரே ! - புதிய
இறைவாக்குரைஞராய் - தந்தை
சூசை - மாமுனிவரே - உள்ளீர் - நீர்
எம்மால் என்றும் வணங்கப்படுகிறீர்
ஒவ்வொரு வினாடியிலும் !
ஒருமையுடன், உணர்வுடன் என்றும் !!
சூசையப்பப்பட்டினம், சூசைபுரம்,
சூசையப்பர் நகரின் அரியாசனமே !
‘செய்யும் தொழிலே தெய்வம்‘
விவேகம் நல்லுறுதி கலை பயில
தெளிவுடன் - வாழ
சுமையைச் சுகமாக்கும் - கனவின்
புனித தந்தை சூசையப்பரே ! வளனே !
உமக்கு எம் வாழ்த்து ! இனிது ! எம் கனவு
மெய்ப்படவேண்டும். நன்றி ! “டிh ளயகந”!
Comment