No icon

உழைப்பின் உயர்வை உணர்த்திய உத்தமர்

தொழிலாளரின் பாதுகாவலர், புனித “யோசேப்பு”

இப்பிரபஞ்சத்தின் தூய

இதயக் கனவுப் பூங்காவின்

நீதிமானே! யாக்கோபின் திருமகனே!!

எளிமையிலும், மேன்மையிலும், தொழிலின்

அருமையை உணர்த்திய நாசரேத் ஓசேபே !

இன்று எங்களால் வாழ்த்தப்பெறும் தந்தை

யோசேப்பே !

 

தேம்பாவணிப் புலவர் நாவின் வளனே !

கன்னி மரியின் கரம்பற்றி

வானவர் கருத்துரு ஏற்ற பெருமானே !

கனவின் முதல்வனின் புனித நாட்கள்

மார்ச் பத்தொன்பதும் - மே முதல் நாளுமா?

இன்றும் தான் இல்லை - என்றும் தான் !

 

மீட்பர் இயேசுவின் மீட்பு

இறைத் திட்டத்தில் கனிவான

கனவு மொழி மூத்தவரே !

நற்செய்தி ஞானியே !

சோதனைகளிலும், வேதனைகளிலும்

தூய ஆவியின் ஏவுதலில் நடத்தப்பட்ட

கனவின் பலன் சான்றளிக்கும் மூலவரே !

அந்த இரு நாட்களிலுமா? நினைக்கிறோம்

இல்லை; இல்லை - என்றும்தான் !

 

தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கைச் சு(சூ)ழல்

சக்கரத்தில் உம்மை மறக்காமல் இருக்க

மேதினியின் இனியவரே !

மேமுதல் நாள் உன் பெருநாள் பெருமை மட்டுமல்ல!

 

உழைப்பின் மேன்மையை உலகுக்குணர்த்திய

உன்னத நாள்: உழைப்பு - உழைப்பே

தச்சர் மகன்தானே என்று

எச்சமிட்ட யூதர்கள் மத்தியில்

பிறர் பொருளைக் கவர்ந்த கொள்ளையர் நடுவில்

உழைப்பின் உயர்வை உணர்த்திய உத்தமரின்

தந்தையே ! (யோசேப்பே)

! எம் பாதுகாவலரே !

மே தினத்து நாளின் முதல் போராளி !!

நீர்தான் ! உமக்கு எம் பேர் வணக்கம் !

 

மரியாவின் கரம் பற்றிய கனவின் கலை மகனே !

நாசரேத் தச்சுப் பட்டறையின் தொழிலாளியே !

உம் நினைவு முத்திரை ஒவ்வொரு மணித்துளியும்

சுத்தியலிலும், உளியிலும், இழைப்புக் கருவியிலும்

அறுவை இரம்ப உருளையிலும், உம் பிம்பங்கள்

தெரிகின்றன பெருமானே !

உம் வாஞ்சையின் அருமையும் ! தெரிகிறது !

 

நீவீர்,

() தச்சுத்தொழிலாளி மட்டுமல்ல !

சமூக அந்தஸ்தில்

வாழ்ந்த உயர் சமூகத்து கட்டடக் கலைஞர் !

கட்டடக் கலைஞரின் மகன் என்பதாலே - இயேசு

எருசலேம் தேவாலயத்தில் குருமார்கள் மத்தியில்

கேள்விக்கணைகள் கேட்க முடிந்தது; ஆலயத்தின்

வணிகரைத் துரத்த முடிந்தது - கிரேக்க மொழியில்

டெக்டான்என்றால்

தச்சுத்தொழிலாளி - எனில் பொருளோ,

கட்டடக் கலைஞர் எனவும் கூறுவர்

 

() (ஆடம் பிராட்போர்டு என்ற பைபிள் ஆய்வர் கருத்து இது, - “ஜுசஸ் டிஸ்கவரி)

 

அநியாயம், அக்கிரமம், சாதி, இனம், மொழி இழைக்கப்படும் அநீதியிலும்

நீதிமானே ! உம்மை நினைக்கிறோம்

நீதிமானே ! ஒற்றுமை வேற்றுமையாக்கப்பட்டு

புலம் பெயர்ந்தவர்களின் துயர்களைக்

கேட்கும் போதெல்லாம்

இறைமகன் பிறப்புக்கு இடமின்றித் தவிர்த்தும்

பின், தூதர் மொழியால்

எகிப்துக்கு புலம்பெயர்ந்ததும் - மீண்டதும்

எம் கண்ணில் வந்து - வந்து நிழலாடுகிறது !

 

பாலியல் வன்கொடுமை, குழந்தைக் கடத்தல்

குழந்தைத் தொழிலாளரின் கொடுமைகள்

பிஞ்சு மனக்குமுறல் - அரக்கத்தனம்

கேட்கும் போதும் - ஊடகங்களில் படிக்கும் போதும்,

எருசலேம் திருவிழாவில் - அன்னை மரியும்

நீவீரும் பதறித் தேடிய காட்சிகள் - தினம்

வந்து - வந்து அலைபாய்கின்றன !

 

கணவர் மனைவி வேலைக்குப் போகும்

நாட்களில் - இன்று

ஒருவர்க்கு ஒருவர் உதவியாய் இருக்க

இலக்கணம் வகுத்த

திருக்குடும்பத் தலைவனே !

எங்கள் வாழ்க்கைப் போராட்டக்களத்தில்

தெருக்குடும்பங்கள் மத்தியில் -

இல்லறத்தெருக் குடும்பங்களாய் பற்பல !

எளிமையிலும் அமைதியிலும்

மேன்மையிலும்

உம்மை - எம்

இல்லறப் பந்தத்தில் என்றும்

மறக்கமாட்டோம் ! - வழிகாட்டியே !

நீதி தவறாத பெருமானே ! - குழந்தை

வளர்ப்பின் மூத்தத் தந்தையே !

வரலாறு உம்மை வாழ்த்துகிறது என்றும் !

எத்தனை எத்தனை அவ மரணங்கள் -

கொலைகள் நல்ல - திரு

மரணம் அடைய உம் பரிந்துரை நாளும் வேண்டும்.

அமைதிச் சாசனம் வகுத்த நீதிமானே !

உம் வேண்டுதல் வேண்டுமே

 

கல்விக்குக் காவலனே ! தொல்

கல்வியின் முதல் அச்சாரமே - இன்று

கலை பயில் தெளிவு கூடங்கள்

இம்மண் கண்ட பூச்சரங்கள் !

துவண்டிடும் மனித வாழ்க்கையிலும் சரி

குடும்ப வாழ்க்கையிலும் - துறவு நிலையிலும்

எண்ணிலடங்கா கல்விச் சுரங்கங்கள் !

நிறுவப்பட்ட கல்விக் கூடங்கள் - மாடங்கள் !

வளன் - சூசை - ஜோசப் - ஜோ - ஜோஸ்

ஸோ ... சூசை ராசு, மாணிக்கம்

என்ற பெயரைக் கேட்கும் பொழுதெல்லாம்

கண்முன் தெரியும் வள()னே ! - உம்

பெயர் பொறித்த பலகைகளைப் பார்க்கும்

பொழுதெல்லாம் - நாளெல்லாம்

வள()னே ! நீர் போற்றப்படுகிறாய்வணங்கப் பெறுகிறாய் - இம்மண்ணை வளர்ப்பாய் ! நாளும்

 

பல்லியின் சத்தம் - காக்கையின் கரைதல்

கூகையின் அலறல் - உம் கனவின் பலன்

தூதர்கள் அவைகள் இல்லையே ! உணர்கிறோம் !

கிளி சோதிடம் - எலி - சோதிடம்

குறி கேட்பார் மத்தியில்

நல்ல காலம் பொறக்குது என்பார்

சொல்லை - அவன் வானதூதரா? - கேட்கமாட்டோம் !!

இல்லை இல்லை - நாம்

நீதிமான் - தந்தை யோசேப்பின்

காப்பாளர்கள் - அவரே நமக்கு காவல்

என்போம் - உறுதி கொள்வோம் !

 

தாவீது கோத்திரத் தச்சரே !

திருத்தந்தை 13ஆம் லியோ - உம்மை

திருஅவைக்குத் தலைவராக்கினார் -

திருத்தந்தை 23ஆம் அருளப்பர்

திருஅவையின் பாதுகாப்பை உம்மிடம்தான்

ஒப்படைத்தார் - அதை

இரண்டாம் வத்திக்கான் சங்கம் உறுதி செய்தது.

 

கனவின் நிலை கண்ணியத்தை - இறைக்

குரலாம் கனவின் புண்ணியத்தை

பாதுகாப்போம் - வாழ்வாக்கிட

திருஅவை பெற்றிட - நம்

புரட்சித் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்

மெய்க்காப்பாளரே - உசுப்பி விடுபவரே ! - புதிய

இறைவாக்குரைஞராய் - தந்தை

சூசை - மாமுனிவரே - உள்ளீர் - நீர்

எம்மால் என்றும் வணங்கப்படுகிறீர்

ஒவ்வொரு வினாடியிலும் !

ஒருமையுடன், உணர்வுடன் என்றும் !!

சூசையப்பப்பட்டினம், சூசைபுரம்,

சூசையப்பர் நகரின் அரியாசனமே !

செய்யும் தொழிலே தெய்வம்

விவேகம் நல்லுறுதி கலை பயில

தெளிவுடன் - வாழ

சுமையைச் சுகமாக்கும் - கனவின்

புனித தந்தை சூசையப்பரே ! வளனே !

உமக்கு எம் வாழ்த்து ! இனிது ! எம் கனவு

மெய்ப்படவேண்டும். நன்றி ! “டிh ளயகந”!

Comment