No icon

‘எளியோர்க்கு நற்செய்தி’

தந்தை மிக்கேல் அன்சால்தோ ஒரு புதிய சகாப்தம்

‘எளியோர்க்கு நற்செய்தி’ என்னும் இயேசுவின் வார்த்தையைத் தனது இலட்சியமாக்கி, ஒடுக்கப் பட்டோருக்கு உரிமை வாழ்வு, கைவிடப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரவணைப்பு அளித்து, தனது வாழ்வை அர்ப் பணித்தவர் இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ.

இயேசுவின் பாதையில் தடம் பதித்திட கனவு கண்ட இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோவின் கனவை நனவாக்கிட அன்சால்தோ மாநிலச் சகோதரிகள் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கின்றனர்.

ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வு ஒளிர...

தந்தை மிக்கேல் அன்சால்தோ அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி மிக்கேல் அன்சால்தோ மாநிலச் சகோதரிகள்  பணிபுரியும் பகுதிகளில் உள்ள பெற்றோரை இழந்த சிறுவர்களையும், கல்வி பெற போதிய வசதியில்லாத மாணவர்களையும் இனங்கண்டு, அவர்களுக்கு அறிவொளி ஏற்றிடும் பணியைத் திறம்படச் செய்து வருகின்றனர்.  குறிப்பாக, கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மங்கினிபுடி, மைலவரம், மச்சலிபட்டினம், சூளாநகர், குணதலா, மோட்டக்குண்டூர் மற்றும் சின்னபுரி போன்ற பகுதி களில் பெற்றோரை இழந்த சிறார்கள், உயர் கல்வி பெற வசதியில்லாத மாணவர்கள் போன்றவர்களைத் தேடி, இனம் கண்டு அவர்கள் கல்வி பெற உதவி செய்து வருகின்றனர். மேலும், அவர்களை எல்லா நிலைகளிலும் ஊக்குவிக்கும் வகையில் தீபாவளி, கிறிஸ்துமஸ், நிறுவனரின் நினைவு நாள் (நவம்பர் 3) மற்றும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் மாநில இல்லத்திற்கு வரவழைக்கப்படுகின்றனர். அந்நாள் முழுவதும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், ஒருவர் மற்றவர்களைத் தெரிந்து  நட்புறவு கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகின்றது. மேலும், அவர்களின் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில்  திறன் வளர் போட்டிகளும், விளையாட்டுப் போட்டிகளும்  நடத்தி அவர்களின் ஆளுமையை வெளிக் கொணர்கின்றனர்.

வாழ்வில் எல்லாச் சூழ்நிலைகளிலும் உறுதி யுடனும், தெளிவுடனும், மகிழ்வுடனும் வாழ வழி காட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பயிற்சியும் கொடுக்கப்படுகின்றது. அந்நாளின் இறுதியில் ஒரு சிறிய அன்பளிப்புடன் இல்லம் திரும்புகின்றனர். இப்படியாக  அந்தக் குழந்தைகள் மிக்கேல் அன்சால்தோ இல்லத்தின் சொந்தக் குழந்தைகளாகவே தங்களை உணர்ந்து மகிழ்வர். மாணவர்கள் தங்கள் படிப்பு காலம் முடித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்து, தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்ட பிறகும் தங்களை இந்நிலைக்கு உயர்த்திய சகோதரிகளோடு இன்னும் நட்புறவில் இணைந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கின்றது. இவ்வாறாக, அவர்களும் பல குழந்தைகள் வாழ்வாதாரத்தைப் பெற உதவி செய்கிறார்கள்.

மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளித்து, தந்தை மிக்கேல் அன்சால்தோவின் உள்ளுயிரை நனவாக்கும் பணியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ அவர்கள் பாதச்சுவடுகளை நோக்கிக் கைவிடப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு

இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோவின் பெயரில் இயங்கிவரும் பெண்கள் சமூக மையமானது ஒன்பது மையங் களில் பெண்களின் முன்னேற் றத்திற்குப் பணி செய்து கொண்டு வருகின்றது. ஒவ் வொரு மையத்திலும் ஓர் அருள்சகோதரி பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஒன்பது மையங்களில் ஏறத்தாழ 4,500 பெண்கள் உதவி பெற்று வருகின்றனர். 450 சுயஉதவிக் குழுக்கள் உள்ளன.

அரசாங்கம் அளிக்கும் உதவிகளைப் பெறு வதற்கு, சகோதரிகள் வழிகாட்டுகின்றார்கள். பெண்கள் தங்கள்  பிரச்சினைகளை அவர்களே தீர்த்து, அதிலிருந்து விடுபட அருள்சகோதரிகள் பயிற்சி அளிக்கின்றார்கள்.

அவர்கள் தனித்துச் செயல்படக்கூடிய ஆற்றலை வளர்த்தெடுத்தல், விதவைகள் மறுமணம் செய்ய ஊக்குவித்தல், தைரியத்துடன் பெண்கள் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்க வழிகாட்டுதல், விதவைப் பெண்களை முன்னிறுத்தி நிகழ்வுகளை நடத்துதல் போன்ற சிறந்த பணிகளைச் செய்து வருகின்றார்கள்.

உயர் படிப்பிற்கு வழியில்லாத மாணவர்களுக்கு அஞ்சல் வழி தொலைதூரக் கல்வியை ஏற்பாடு செய்து ஊக்கப்படுத்தி வருகின்றார்கள். கிராமங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இல்லாத மக்களுக்கு ஆர்வலர்கள், ஊர் பெரியவர்கள் மற்றும் அரசாங்கத்தின் வழியாக வசதிகளைச் செய்து வருகின்றனர்.

இறை ஊழியர் தந்தை மிக்கேல் அன்சால்தோ வழியில் நற்செய்திப் பணி

“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற் 16:15); “ஆண்ட வருடைய ஒரு கருவி மட்டுமே நான், அனைத்து செயல்பாடுகளையும் புதுமையாகச் செய்து வருபவர் அவரே; அனைத்து மகிமையும் அவருக்கு உரி யதே” என்ற அழிக்க முடியாத இறை நம்பிக்கையுடன் பணியாற்றிய மிக்கேல் அன்சால்தோ அவர்களின் அடிச்சுவட்டில் எம்மாநிலம் நற்செய்திப் பணியை மிகவும் ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும், உத்வேகத்துடனும் செய்து வருகின்றது.

தாழ்த்தப்பட்ட பெண்கள், கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனை இழந்தோர் இவர்களும் இறைவனின்  பிள்ளைகளே என்ற உள்ளொளியை உணர்ந்தவர்களாக, வாழ்க்கையில் உயர இவர் களுக்குத் தையல் மற்றும் கைவேலைகளைக் கற்றுத்தந்து இவர்களும், சமுதாயத்தில் மனித மாண்புடன் மதிக்கப்பட உழைத்து வருகின்றனர். அன்பு, சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவம் நிலவ இயேசுவின் இறையாட்சிப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

“நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை; நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” (மாற் 2:17) என்ற இயேசுவின் நிலைப்பாட்டை, சகோதரிகள் தங்களில் தாங்கி, வீடு வீடாகச் சென்று, நோயுற்றவர்களுக்கு இயேசுவின் திருவுடலை உணவாகக் கொடுத்து, ஆன்ம நலம் பெற வழி செய்து வருகின்றனர்.

நடமாடும் விவிலியமாக, இயேசுவின் வார்த்தைகளின்படி வாழவும், மக்களை ஆன்மிக வாழ்வில் வளர்க்கவும், நிறுவனர் மிக்கேல் அன்சால்தோவின் நினைவு நாளன்று விழாவில் பங்குகொள் வோருக்கு,  திருவிவிலியம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ அடிச்சுவட்டில் கல்விப்பணி

தந்தை மிக்கேல் அன்சால்தோ அவர்கள் விட்டுச் சென்ற கல்விப் பணியை அன்சால்தோ மாநிலம் முன்னேற்புடனும், உத்வேகத்துடனும் செய்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு, அதிலும் குறிப்பாக, பெண் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதைக் கடமை என உணர்ந்த தந்தை மிக்கேல் அன்சால்தோ அவர்கள் கல்விப்பணியைத் திறம்படச் செய்ய சகோதரிகளை உருவாக்கினார், அவர்களை  ஊக்குவித்தார்.

சகோதரிகள் கல்விப் பணியின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கும், பெற்றோரை இழந்து அனாதைகளாகக் கைவிடப்பட்டுள்ள குழந்தைகளுக்கும் இலவசக் கல்வியைக் கொடுத்து வருகின்றனர்.

சாதியைக் கடந்து, மதங்களைக் கடந்து குழந்தைகளுக்குக் கல்வி புகட்டி, ஆதரவற்ற மக்களை இனங்கண்டு, அந்தக் குழந்தைகளுக்குத் தாயாகவும், சகோதரியாகவும் இருந்து வழிநடத்துகின்றனர்.

பெண்களை ஆசிரியப் பணிக்குத் தகுதியுள்ள வர்களாக உருவாக்கி, தகுதியுள்ள ஏழைப் பெண்களை ஆசிரியப் பணிக்கென உருவாக்குகின்றனர்.

நிறைவுரை...

நிறுவனர் தந்தை

மிக்கேல் அன்சால்தோவின்

அடிச்சுவட்டின் வழி

இலக்கு மக்களின் வாழ்வை வளமாக்கிட

அவரின் உள்ளுயிரையும், திட்டத்தையும்

இயேசுவின் நிலைப்பாட்டோடு ஏற்று

ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்து

இறையாட்சி பணி செய்து

இறைஊழியரின் அடிச்சுவட்டில்

பயணத்தைத் தொடர

தாயாம் கொன்சாகாவை வாழ்த்துகிறோம்!

 

Comment