No icon

‘ஒற்றுமையே பலம்’

​​​​​​​வகுப்பறை தரும் வாழ்வியல் பாடம்

அன்பிற்குரிய மாணவ-மணிகளே! தேர்வில் தேர்ச்சி பெற்று மேல் வகுப்பிற்கான ஒரு புதிய கல்வி ஆண்டிற்குள் நுழைந்துள்ள உங்கள் அனைவருக் கும் எங்களின் வரவேற்புடன் கூடிய வாழ்த்துகள்! முதலில் நாம் ஒவ் வொருவரும் நம்மைப் பற்றி அறிந்துகொள்வது மிக அவசியம். மதிப்பீடுகள் நம்மை அலங்கரிக்க வேண்டும். நம்மிடம் உள்ள நிறை-குறைகளை நாமே பட்டியலிடுக. நிறைகளை வளர்த்துக் கொண்டு, குறைகளைக் குறைத்துக்கொள்ள முயற்சிப்போம்.

தூய்மைநமக்கு முதல் பாடமாகட்டும். நாம் நம் உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல் தூய்மையோடு உள்ளத் தூய்மையும் மிக அவசியம். எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்த்து, நம்பிக்கை ஊட்டும் நேர்மறைச் சிந்தனைகளை நோக்கியே உங்கள் பயணம் இருக்கட்டும்.

எந்தச் சூழ்நிலையிலும் எதற்கும் அடிமையாகி விடாதீர்கள். மாணவர்களாகிய உங்களை  அடிமைப் படுத்துவதில் கைப்பேசியும், சமூக ஊடகங்களும் முதலிடம் வகிக்கின்றன. அவற்றைச் சரியாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி உடலையும், உள்ளத்தையும் காத்துக்கொள்ள வேண்டும். மேலும், ஆசிரியரின் பாராட்டு ஒரு மாணவனின் மிகப்பெரிய விருது! சக மாணவர்களைப் பாராட்டுவதும், பிறரிடம் இருந்து பாராட்டினைப் பெறவும் தயங்காதீர்கள். அதனால் தன்னம்பிக்கை வளர்கிறது. மேலும், பயம், கூச்சம் போன்றவைகள் விலகும்.

நாம் ஒவ்வொருவரும் நம் பாடக் கல்வியோடு இணைந்து, கல்வி இணைச் செயல்பாடுகள், வாழ்க்கைத் திறன்கள், மனப்பான்மை மற்றும் விழுமக் கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் நன்றாகப் பாடப்புத்தகங்களைப் படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம். ஆனால், அதே நேரத்தில் வாழ்வில் மேன்மேலும் என்றால் பல்வேறு சமூகவியல், மானிடவியல் குறித்த நூல்களைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். பொது அறிவினை வளர்த்துக்கொள்ள வாசித்தல் மிக அவசியம். அறிவை வளர்க்க கல்வி, உடல் ஆரோக்கியத்தை வளர்க்க உடற்பயிற்சி தேவை. நம் எதிர்கால வாழ்வுக்கு அடித்தளமாக, ஆணிவேராக இருந்து உன்னத இலட்சியத்தை அடைய வழிகாட்டியாக அமைவதும், மனித நேய அடையாளமாவதும் மாணவ-ஆசிரி யரின் இணக்கமான உறவே ஆகும். எனவே, நாம் நம் உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். மன எழுச்சி முதிர்ச்சியே நம் உறவுகளைப் பலப்படுத்தும்.

ஒற்றுமையே உயர்வுக்கு வழி’, ‘ஒற்றுமையே பலம்என மாணவர்கள் உணர, குழு செயல்பாடுகள் சிறந்த வழியாகும். தன்னையும், மற்றவரையும் வளர்த்துக்கொள்ள குழு செயல்பாடு மிக அவசியமான ஒன்று. ‘கூடா நட்பு கேடுஎன்பதால், மாணவர் கள் தங்கள் நட்பினைச் சரியாகப் புரிந்து, நல்ல நண் பர்களைத் தேர்வு செய்வது மிக இன்றியமையாத ஒன்று. சமுதாயத்தில் சிறந்த மனிதனாக உயர பெற்றோர்-பெரியோர்-ஆசிரியர் மற்றும் சான்றோர் இவர்களுக்கு மதிப்பளித்து, நாமும்தாழ்ச்சிஎன்ற பண்பினை மனதில் வளர்த்தல் மிக அவசியம்.

உண்மை, நேர்மை, நன்மை, உழைப்பு, ஒற்றுமை இவை, உன்னையும் உயர்த்தும், நாட்டையும் உயர்த்தும். கல்வியைக் கற்று, கடமையை முடிப்போம். நல்லதை நினைப்போம், நன்மையே செய்வோம். உண்மையைப் பேசி உழைப்பால் உயர்வோம். இயற்கையைக் காப்போம், இறைவனைப் போற்றுவோம். எதிர்காலச் சந்ததிக்கு வளமான வாழ்வுக்கு வழி காட்டுவோம்.

மனம் பக்குவப்பட்டால் பாதை தெளிவாகும்; பாதை தெளிவானால் பயணம் எளிதாகும்; பயணம் எளிதானால் வாழ்க்கை இனிதாகும்!

எனவே, உன் வகுப்பறை உன் வாழ்வியல் பாடமாக அமைய இவ்வாண்டு இனியதோர்  ஆண்டாக இருக்க வாழ்த்துகிறோம்.

 

 

Comment