கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு (UCF)
கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள்
கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு (UCF) கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 23 மாநிலங்களில் இருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான 274 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம், இதுவரை 155 வழக்குகளுடன் அதிக எண்ணிக்கையைக் கொண்டு இந்த ஆண்டில் முதலிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில், மத்திய இந்திய மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் 31 வன்முறைச் சம்பவங்களுடன் முதல் இடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கும் அவ்வமைப்பு, வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வன்முறை நிகழ்ந்து வரும் வேளை, அங்கு மேலும் நூற்றுக்கணக்கான வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டுள்ளதுடன், பல விலைமதிப்பற்ற உயிர்களும் பறிக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகிறது. உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூரைத் தவிர, சத்தீஸ்கர் 84 சம்பவங்களையும், ஜார்க்கண்ட் 35, ஹரியானா 32, மத்தியப்பிரதேசம் 21, பஞ்சாப் 12, கர்நாடகா 10, பீகார் 9, ஜம்மு-காஷ்மீர் 8, மற்றும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 7 சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, அசாம், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் கோவாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஐந்துக்கும் குறைவான சம்பவங்கள் நடந்துள்ளன என்று அவ்வமைப்பின் அறிக்கை கூறுகின்றது.
Comment