No icon

கும்பகோணம் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் பேரருள்திரு. ஜீவானந்தம் அமலநாதன்

கும்பகோணம் மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு பேரருள்திரு. ஜீவானந்தம் அமலநாதன் என்கிற அமிர்தசாமி அவர்களைக் கும்பகோணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, சனவரி 13, 2024 அன்று திருத்தந்தை நியமித்துள்ளார். இவர் 1963-ஆம் ஆண்டு ஏப்ரல் 2 -ஆம் தேதி மிக்கேல்பட்டியில் பிறந்தார். கும்பகோணம் திரு இருதய இளம் குருமடத்தில் குருத்துவப் பயிற்சியின் துவக்க நிலையும், பின்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள திரு இருதய குருமடத்தில் மெய்யியல், இறையியலும் பயின்றவர். உரோமையில் உள்ள வத்திக்கானில் லேட்டரன் பல்கலைக்கழகத்தில் மேய்ப்புப்பணி இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

1990-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் நாள் கும்பகோணம் மறைமாவட்டத்திற்குக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். முதலில் அம்மன்பேட்டை பங்கின் உதவி பங்குப் பணியாளராகப் பணியாற்றினார் (1990-1991). பிறகு திரு இருதய இளம் குருமடத்தில் மாணவர்கள் ஆசிரியராவும் (1991-1992), பாத்திமாபுரம், புனித பாத்திமா அன்னை ஆலயப் பங்கின் பங்குப் பணியாளராகவும் (1992-1993), கபிஸ்தலம், புனித அந்தோணியார் ஆலயப் பங்கின் பங்குப் பணியாளராகவும் (1993-1998) பணியாற்றியுள்ளார். சென்னை திரு இருதய இறையியல் கல்லூரியில் மேய்ப்பு பணிப் பேராசிரியராகவும் (1998-2002 மற்றும் 2008-2014), பூண்டி பசிலிக்காவின் அதிபர் தந்தையாகவும் மற்றும் பங்குப் பணியாளராகவும் பணியாற்றியுள்ளார் (2015-2016). புதிய ஆயர் அவர்கள் 2016 முதல் கும்பகோணம் மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகப் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் தற்போது கும்பகோணம் மறைமாவட்டத்திற்கே ஏழாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆயரைநம் வாழ்வு

வாழ்த்தி வரவேற்கிறது!

- முதன்மை ஆசிரியர்

நம் வாழ்வு

Comment