ஆயராகும் தூய பவுல் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் அருள்முனைவர் ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் அனஸ்தாஸ்
1966, டிசம்பர் 16-ஆம் நாள் கோட்டாறு மறை மாவட்டம், மணவிளை எனும் ஊரில் பிறந்த இவர் மதுரை கருமாத்தூர் கிறிஸ்து இல்லக் குருமடம், அருளானந்தர் கல்லூரியில் மெய்யியல் படிப்பும், திருச்சி, தூய பவுல் குருத்துவக் கல்லூரியில் இறையியல் படிப்பும் பயின்றவர்.
1992, ஏப்ரல் 26-இல் கோட்டாறு மறைமாவட்டத்திற்காகக் குருத்துவ அருள்பொழிவு செய்யப்பட்டு முளகுமூடு துணைப் பங்குத்தந்தை (1992-1993), கேசவன்புத்தன்துறை பங்குத்தந்தை (1993-1994), நாகர்கோவில் - புனித அலாய்சியுஸ் இளம்குருமட துணை அதிபர் (1994-1995), மதுரை - கருமாத்தூர் கிறிஸ்து இல்லக் குருமடம் (1995-1998), இராஜாவூர், புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலப் பங்குத்தந்தை (1998-2000) எனப் பணியாற்றிய பிறகு, பெல்ஜியம் நாட்டிலுள்ள லூவைன் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முதுகலைப் பட்டமும், அருள்பணி இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றார் (2000-2007).
பிறகு குருசடி, பங்குத்தந்தை (2007-2008), கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழுச் செயலர் (மறைக்கல்வி, திருவழிபாடு, விவிலியம்) (2007-2012), புன்னை நகர் பங்குத்தந்தை (2008-2014), கோட்டாறு சமூகச் சேவை நிறுவனத்தின் கிளை அமைப்பாகிய கிராமிய விழிப்புணர்வு திட்ட (RMP) இயக்குநர் (2013-2016), கோட்டாறு வட்டார முதன்மை அருள்பணியாளர் (2014-2016), மறைமாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர், மறைமாவட்ட சேவியர் நிதி நிறுவன மேலாண்மை இயக்குநர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். 2016 -ஆம் ஆண்டு முதல் திருச்சி, தூய பவுல் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியர், நூலகப் பொறுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் சனவரி 13, 2024 அன்று குழித்துறை மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராகத் திருத்தந்தையால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஆயரை ‘நம் வாழ்வு’
வாழ்த்தி வரவேற்கிறது!
- முதன்மை ஆசிரியர்
நம் வாழ்வு
Comment