No icon

திருச்சி ஆயருக்கு பொதுநிலையினர் அமைப்புகளின் வரவேற்பு

திருச்சி ஆயருக்கு பொதுநிலையினர் அமைப்புகளின் வரவேற்பு

திருச்சி மறைமாவட்ட பொதுநிலையினர் பேரவை சார்பில் திருச்சி மறைமாவட்ட புதிய ஆயர் மேதகு ஆயர் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு வரவேற்பு வழங்கும் நிகழ்வு பொதுநிலையினர் பேரவைத் தலைவர் திரு.வேளாங்கன்னி அவர்களின் தலைமையில் நல்லாயன் நிலையத்தில் உள்ள புனித பவுல் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சி மறைமாவட்ட குருகுல முதல்வராக பொறுப்பேற்றுள்ள பேரருள்திரு.அந்துவான் அவர்களுக்கும் ஒருசேர வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் பணிக்குழு தொடக்கச் செபத்தைச் செபித்து விழாவைத் தொடங்கி வைத்தவுடன் பேரவைச் செயலாளர் திருமதி. மங்களமேரி வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் தந்தை அருள்பணி. அல்போன்ஸ் ஆயர் அவர்கள் பற்றியும், குருகுல முதல்வர் பற்றியும் அறிமுக உரையாற்றினார். பேரவையில் உள்ள 16 அமைப்புக்கள் சார்பாக ஆயர் அவர்களுக்கும், குருகுல முதல்வருக்கும் மரியாதை செய்யப்பட்டது.

பேரவைத் தலைவர் திரு.வேளாங்கன்னி அவர்கள், ஆயர் அவர்களுக்கு வரவேற்புரை வழங்கி வாழ்த்திப் பேசினார். பேரவைப் பொருளாளர் திரு.பெர்ஜித் ராஜன் அவர்கள் குருகுல முதல்வராக பொறுப்பேற்றுள்ள பேரருள்திரு. அந்துவான் அவர்களை வரவேற்று வாழ்த்திப் பேசினார். முதன்மைக் குரு அவர்கள் ஏற்புரை வழங்கினார். நிறைவாக ஆயர் அவர்கள் ஆசியுரை வழங்கி மறைமாவட்ட பொதுநிலையினர் அமைப்புகளை தொடர்ந்து ஊக்கப்படுத்துவதாகவும், பொதுநிலை அமைப்பு செயல்பாடுகளை மனதாரப் பாராட்டுவதாகவும் பேசினார். பேரவை துணைத் தலைவர் திரு.குழந்தை ராஜ் அவர்கள் இறுதியில் நன்றி தெரிவித்தார்.

Comment


TOP