Apr 1
Uyirpu Peruvizha
- Author --
- Monday, 10 Jun, 2019
உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்து
‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள் ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் (யோவா 3: 16). நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள் ளேன் (யோவா 10:10). இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன (யோவா 20:31). நற்செய்தியாளரான புனித யோவான் மேற்கண்ட இந்த வார்த்தைகளுடன் இயேசுவின் வாழ்வின் ஒட்டு
மொத்த நோக்கத்தை மிகத் தெளிவாகக் குறிப் பிடுகிறார்.
ஏனெனில், “இயேசு ஆண்டவர்” என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள் (உரோ 10:9).
வாழ்வைப் பெறுவதற்கு, அதுவும் நிறை வாகப் பெறுவதற்குத் தேவையான நிபந்தனை, உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கை கொள்வது என்ற ஒன்றுதான் என்று புனித பவுலடியார்
கற்பிக்கிறார். நான்கு நற்செய்தி யாளர்களைப் போல அவர் இயேசுவின் மண்ணக வாழ்வைப்பற்றி அதிகம் பேசுவதில்லை. அவர் முழுக்க முழுக்க தம் கவனத்தைச் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் மேலும் உயிர்த்த ஆண்டவரின் மேலும் செலுத்துகிறார். மீட்பளிக்கும் நிகழ்வுகள் அனைத்தும் இயேசு துன்புற்ற, மரித்த, அடக்கம் செய்யப் பட்ட, வாழ்வுக்கு உயிர்த்த அந்தக் கல்வாரி மலையில் தான் நடைபெற்றன. கல்வாரி
யில்தான் இயேசு தன் உடலை உடைத்தார்; அவர்தம் இரத்தத்தைச் சிந்தினார்; நம் நலனுக்காக, நம் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவதற்காக, நாம் நிலைவாழ்வு பெறுவதற்காகத் தம் வாழ்வைக் கொடுத்தார்.
பாஸ்கா மறைபொருள்களின் பலன்கள் அனைத்தும் அருளடையாளங்கள் வழியாக மனிதர் அனை வருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ நுழைவு அருளடையாளங் களான திருமுழுக்கு, உறுதிப்பூசுதல், நற்கருணை ஆகியவை கிறிஸ்தவ வாழ்வுக்கான அடித்தளத்தைக் கட்டமைக் கின்றன. திருமுழுக்கால் விசுவசிப்போர் புதிதாகப் பிறக்கின்றனர். உறுதிப்பூசுதல் என்னும் அருளடை யாளத்தால் வலிமைப்படுத்தப் படு கின்றனர். நிலைவாழ்வு தரும் உணவான நற்கருணையைப் பெறுகின்றனர். புனித திருமுழுக்கு என்பது ஒட்டுமொத்த கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமாகும். தூய ஆவிக்குள் வாழ்வுக்கான நுழைவாயிலாகும். ஏனைய அருளடையாளங் களைப் அனுபவிப்பதற்கு கதவாகவும் உள்ளது. திருமுழுக்கு வழியாக நாம் பாவத்திலிருந்து விடுவிக்கப்படுகிறோம் இறை வனின் பிள்ளைகளாக மீண்டும் பிறக்கிறோம். கிறிஸ்துவின் மறைவுடலாகிய திரு அவையின் அங்கத்தினர்களாகிறோம். அதில் இணைக்கப்பட்டு மறைப்பணியில் பகராளிகளோகிறோம் (உஉஉ 1212, 1213).
கிறிஸ்தவ வாழ்வையும் கிறிஸ்தவர்களையும் வரையறுக்கப் புனிதபவுலடியார் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துகிறார்.
கிறிஸ்துவுடன்
கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவுடன் இணைந்து துன்புறவேண்டும். (உரோ 8:17); அவர்கள் கிறிஸ்துவுடன் சிலுவையில் இணைந்து அறையப்பட்டுள்ளனர் (உரோ 6:6). அவர்கள் கிறிஸ்துவுடன் இணைந்து உயிர்க்கின்றனர் (எபே 2:6). அவர்கள் கிறிஸ்துவுடன் இணைந்து மாட்சிப்படுத்தப் படுகின்றனர் (உரோ 8:17).
கிறிஸ்துவுக்குள்
திருமுழுக்கு என்னும் அருளடையாளத் தின் வழியாகவும், விசுவாசச் செயல்பாட்டில் தம்மையே முழுமையாகக் கையளிப்பதன் வழியாகவும் உயிர்த்த ஆண்டவருக்குள் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்துவில்
கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவில் வாழவும் கிறிஸ்துவில் வளரவும் கிறிஸ்துவில் இருக்கவும் அழைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்தவர்கள் தாயின் கருவறைக்குள் வளரும் கருவைப்போல கிறிஸ்துவில் வளர்கின்றனர். திராட்சைக்கொடியோடு இணையாமல், ஒரு கிளையானது தனக்குத்தானே கனிகளைத் தாங்கி நிற்க இயலாததைப்போல, கிறிஸ்தவர்களும் இயேசுவுக்குள் வாழாவிட்டால் அவர்களாலும் தமக்குத்
தாமே கனிகளைத்தாங்கி நிற்க இயலாது. (யோவா 15:5-6).
கிறிஸ்துவுக்காக
கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவுக்காகவும் கிறிஸ்துவின் பணிக்காகவும் வாழ அழைக்கப்பட்டுள் ளனர். கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் சீடர்களாக, கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக இருக்க, கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்ற, உயிர்த்த ஆண்டவரின் அமைதி மற்றும் மகிழ்ச்சியின் கருவி களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த உயிர்ப்புக்காலம் நம்மை நாமே தக்க முறையில் தயாரிக்க அழைக்கிறது. இதன்மூலம் நாம் உயிர்த்த ஆண்டவரில், உயிர்த்த ஆண்டவருடன், உயிர்த்த ஆண்டவருக்காக, நம்மால் முழுமையாக வாழ இயலும். ஆன்மாக்களின் மேய்ப்பர்கள், குறிப்பாக பங்குத் தந்தையர்கள் அனைவரும், அருளடையாளங்களின் அருளை குழந்தைகள், இளைஞர்கள், மற்றும் மக்கள் அனைவரும் தகுதியோடும் பலன் தரும் முறையிலும் பெறுவதற்கு தக்க முறையில் தயாரிப்பதை உறுதி செய்திட வேண்டும்.
நம் நேசத் தாய் மரியா இவ்வாழ்வை அனுபவிக்க நமக்கு உதவுவராக. உயிர்த்த ஆண்டவரின் அமைதியும் மகிழ்வும் உங்களோடு இருப்பதாக. அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்!
ஆசியுடன், பேராயர் அந்தோனி ஆனந்தராயர். புதுவை - கடலூர் உயர்மறைமாவட்டம்.
Comment