No icon

சிவகங்கை மறைமாவட்டம் வின்செந்திய இளையோர் கருத்தரங்கம்

03.03.2019 அன்று காலை 9 மணியளவில் சிவகங்கை வியான்னி அருட்பணி மையத்தில் சிவகங்கை மறைமாவட்டம் மத்திய சபை சார்பில் வின்செந்திய இளையோர் கருத்தரங்கம் ஆரம்பமானது. முறைப்படி மத்திய சபை தலைவர் சகோ. சூசைராஜ் வரவேற்புரை நல்கினார்.
இச்சபையின் ஆன்ம ஆலோசகரும் வியான்னி அருட்பணி மைய இயக்குநருமான பணி ஆரோக்கியசாமி முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். திரு. ஆஸ்டின் குத்துவிளக்கேற்றி தலைமை உரை ஆற்றினார். இச்சபையின் தமிழ் மண்டல ஒருங்கிணைப்பாளர் சகோ. சந்தியாகு மாணிக்கம் வின்செந்திய பணிகள் பற்றியும், இச்சபையின் இந்திய தேசிய சபை இளைஞர் பிரதிநிதி சகோ. லியோ லெவன் இச்சபையின் இந்திய தேசிய சபை கணக்குத் தணிக்கையாளர் கோ. வின்சென்ட் செந்தியத்தில் இளைஞர்களின் பங்கு பற்றியும், இச்சபையின் தமிழக மண்டல பெண்கள் பிரதிநிதி சகோ. ராணி தகவல் அறியும் உரிமைச் சட்டமும் வின்செந்தியர்களும் பற்றியும் கருத்தூட்டாளர்களாக செயல்பட்டனர். மேதகு ஆயர் சூசைமாணிக்கம் அவர்கள் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
அதில் இச்சபையில் இளம் பெண்கள் அதிகம் சேர்ந்து பயனடைதல் நற்செய்தியின் அடிப்படையில் இளைஞர்கள் செயல்படுத்தல் இன்றைய இளைஞர்களுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளை பற்றிய திருத்தந்தையின் செய்தி ஆகியவற்றை உள்ளடக்கியும்,  இக்கருத்தரங்கில் ஆண் இளைஞர்களை விட பெண் இளையோரை தாம் அதிகம் காண்பதாகவும் இதற்கான ஏற்பாட்டை செய்த மத்திய சபைப் பொறுப்பாளர்களை வாழ்த்தியும் மறையுரை ஆற்றினார்.
இச்சபையின் பொருளர் சகோ. அமிர்தசாமி நன்றி நவில இறுதி செபத்துடன் கருத்தரங்கு நிறைவுற்றது. இக்கருத்தரங்கில் தேவகோட்டை ஆனந்தா கல்லாரி, சருகனி இருதயா கல்லூரி முத்துப்பேட்டை (ஊயரரளயயேட) கல்லூரி மாணவ, மாணவியர் இச்சபையிலிருந்து இளைஞர் பிரதிநிதிகள் உள்பட 500 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகள் மத்திய சபை தலைவர் சகோ. சூசைராஜ், செயலர் சகோ. ஜோசப், பொருளர் அமிர்தசாமி Project Co-ordinator சகோ. ஜார்ஜ், பெண்கள் பிரதிநிதி சகோ. ஜெசிந்தா ஆகியோர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

Comment