அண்ணா பல்கலைக்கழகம்
PG Entrance: TANCET, CEETA தேர்வுகளுக்கான விண்ணப்பம் - கடைசி நாள் எப்போது?
- Author குடந்தை ஞானி --
- Saturday, 04 Feb, 2023
MBA, MCA முதலிய உயர் படிப்புகளுக்கான சேர்க்கைக்குத் தமிழ்நாடு அரசு நடத்தும் பொது நுழைவுத்தேர்வான TANCET-ல் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அதேபோல M.Tech, ME, M.Arch, M.Plan முதலிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு Common Engineering Entrance Test and Admission (CEETA) என்ற நுழைவுத்தேர்வை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது தமிழக அரசு.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் TANCET தேர்வு மார்ச் 25-ம் தேதி தமிழகத்தில் உள்ள 14 நகரங்களிலும் CEETA தேர்வு மார்ச் 26-ம் தேதியும் நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு
பொதுவாக முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் டான்செட் தேர்வை மட்டுமே எழுதுவார்கள். இந்நிலையில் முதுநிலையில் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மட்டும் இந்த CEETA தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
2023-24 கல்வியாண்டில் முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://tancet.annauniv.edu/tancet/index.html. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி நாள் - பிப்ரவரி 22ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இத்தேர்வு தொடர்பான சந்தேகங்கள் இருப்பின், tanceeta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொண்டு விளக்கங்களைப் பெறலாம் என டான்செட் இயக்குநர் அறிவித்துள்ளார்.
Comment