No icon

சமூகக் குரல்கள்

“நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு எதிரான அநீதி நிகழ்கிறது. இதனால் ஒருபுறம் அமைதி சீர்குலைகிறது. மறுபுறம் மக்களிடையே வெறுப்புணர்வு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் வன்முறை தூண்டிவிடப்படுகிறது. மத்திய அரசுக்கு எதிராக யார் கேள்வி எழுப்பினாலும், தவறுகளைச் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் மீது சி.பி.ஐ. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் ஏவிவிடப்படுகின்றன.”

- திரு. இராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.

“அரசு எவ்வளவு திட்டங்களைக் கொண்டு வந்தாலும், பள்ளித் தேர்வுகளில் பிற பாடங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்ப் பாடங்களில் மாணவர்கள் மிகக் குறைவாகவே மதிப்பெண்கள் எடுக்கின்றனர். பலர் மாற்று மொழி பாடங்களைத் தேர்வு செய்கின்றனர். மாணவர்களிடையே தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”

- திரு. ஒளவை ந. அருள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்

“தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பார்வையற்ற ஆசிரியர்களைக் கணக்கிட்டு, அவர்களுக்கு 1ரூ இட ஒதுக்கீட்டின்படி பணி நியமனம் செய்ய வேண்டும். பகுதி நேரமாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். கண் பார்வையற்று வேலை இல்லாதோருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ. 1000-லிருந்து ரூ. 5000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.”

- பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்

Comment