No icon

சமூகக் குரல்கள்

“காலனித்துவ ஆட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆவணங்களாக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் காலகட்டங்களில் ஆவணங்களை அரசு அலுவலர்களால் மட்டும் கையாள முடிந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்புதான் அவை மக்களின் சொத்து எனக் கருதப்பட்டது. ஆவணக் காப்பகத்தில் இருக்கும் எல்லா ஆவணங்களும் உண்மைத்தன்மை கொண்டுள்ளதாகக் கருதக்கூடாது. அதன் தகவல்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அரசு போன்று பொதுத்துறை, தனியார் நிறுவனங்களும் தங்களது நடவடிக்கைகளை ஆவணப்படுத்த வேண்டும். தற்போது ரிசர்வ் வங்கி தனது வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. அதுபோன்று ‘டாடாஉள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பதிவு செய்து வருகின்றன. இன்று பொதுமக்கள் எதில் ஆர்வம் காட்டுகின்றனரோ, அதன் மீதுதான் அரசும் அதிக கவனம் செலுத்தும். பொதுமக்கள் தங்களின் பாரம்பரிய, பண்பாட்டைப் பாதுகாக்க நினைக்கும் போதுதான் ஆவணக் காப்பகத்துக்கும், அருங்காட்சியகத்துக்கும் பொற்காலமாக அமையும்.”

- பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி

“தமிழர்கள் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களது ஆவணப்படுத்தும் முறையை மாற்றிக்கொள்கின்றனர். இந்தியாவில் உள்ள எந்தவொரு மாவட்டமும் தமிழ்நாடு போன்று ஆவணப்படுத்தப்படவில்லை. அச்சுக்கலை  வந்த பிறகு தெற்காசியாவில் முதல் மூன்று நூற்றாண்டுகளில் அச்சில் ஏறிய 40 சதவிகித நூல்கள் தமிழ் நூல்கள்தான். செய்திகள் அறிவுப்புலத்தைச் செழுமைப்படுத்தும் வல்லமை மிக்க தரவுகளை ஜனநாயகப்படுத்த வேண்டும். இதனால் ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது. தரவுகளால் வரலாற்றைக் கட்டமைக்காவிட்டால் கட்டுக் கதைகளால் கட்டமைக்கும் அபாயம் ஏற்படும்.”

- திரு. ஆர். பாலகிருஷ்ணன், சிந்து சமவெளி ஆய்வாளர்

“பருவகால காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா தீநுண்மியால் ஏற்படும் கடுமையான சுவாச நோய்த்தொற்று ஆகும். இது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் இந்தப் பருவகால காய்ச்சலில் இரண்டு உச்ச நிலைகள் காணப்படுகின்றன. ஜனவரி முதல் மார்ச் வரை மற்றும் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்திலும் இது ஏற்படுகிறது. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்தப் பருவகாலக் காய்ச்சலால் அசாதாரணமான ஆபத்து வரலாம். இப்போது அதிகரிப்பு இல்லை. ஆனால், முன்னெச்சரிக்கை தேவை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கால்நடைகள் மற்றும் பாலில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளது.” 

                                                   

- மத்திய சுகாதார அமைச்சகம்

Comment


TOP