No icon

சமூகக் குரல்கள்

தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை, இவ்வளவு ஆண்டுகளாகச் சும்மா ஒப்புக்காவது ஒரு திருக்குறளைச் சொல்லிப் பட்ஜெட்டை வாசித்தார்கள். இந்த முறை திருவள்ளுவரும் கசந்து போய்விட்டார் போல. இப்படிப்பட்ட பட்ஜெட்டில் திருக்குறள் இடம்பெறாதது ஒரு வகையில் நிம்மதிதான்.”

- திரு. மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

கேலோ இந்தியா தொடங்கப்பட்டது முதல், கடந்த ஏழு ஆண்டுகளில், பா... ஆளும் உத்தரப்பிரதேசத்துக்கும், குஜராத்துக்கும் தலா 400 கோடிக்கு மேல் தந்து தாராளம் காட்டியிருக்கிற ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு வெறும் 20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத் துறையின் முகமாகத் தமிழ்நாடு மாறி வரும் நிலையில்இது தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை ஒன்றிய பா... அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.”

- திரு. உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர்

ஒரு மதத்தில் பிறந்ததற்காகவே, அதே மதத்தில் அவரைக் கட்டிப்போட்டு வைக்க எந்தக் காரணமும் இல்லை. தனக்கு விருப்பமான எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு அரசியல் சாசனம் சுதந்திரம் வழங்கியுள்ளது.”

- திரு. வி.ஜி. அருண், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி 

Comment