No icon

அஞ்சலி!

’பைபிள்’ ராசா சே.ச. (1933 - 2019)

இறைவார்த்தையின் ஊழியனாக உறுதியான அர்ப்பண உணர்வோடு அவர் ஆற்றிய பணிகளில் பளிச்சிடுவது - இறைவார்த்தைத் தொடர் ஆய்வு, மொழிபெயர்ப்பு, ஆர்வமுள்ள வகுப்புகள், பொது மறையுரைகள், தியான உரைகள் - இவையெல்லாம் அவரின் இறைவார்த்தைப் பணி யின் பல பரிமாணங்கள்.
அருள்தந்தை. ராசா 53 ஆண்டு இயேசு சபை குருத்துவப் பணியில் 30 ஆண்டுகள் விவிலியம் கற்றுக்கொடுப்பதிலே தன்னைக் கரைத்துக் கொண்டார். சிறப்பாக இளம் குரு மாணவர்களுக்குத் தூய பவுல் இறையியல் கல்லூரியில் 25 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். அத்தோடு பல துறவறசபைகளில் பயிற்சியி லிருந்த மாணவர், சகோதரிகளுக்கு முழுமூச்சாக வகுப்புகள் வழங்கி
யுள்ளார். அவர் ஆற்றிய விவிலியப்
பணி எண்ணற்ற விதங்களில்  உயர்ந்திருந்தது. இறைவார்த்தை யைக் கற்றவர்க்கெல்லாம் தாய் போல ஊட்டி வளர்த்த விதம் அலாதியானது.
பணித்தளங்களை நினைவு
கூறும்போது தூய பவுல் கல்லூரி யில் ஆசிரியராக இருந்த போதே பல்வேறு பயிற்சி நிலையங்களுக் குச் சென்று விவிலியப் பயிற்சியை ஆண்டுதோறும் ஆற்றியது
அவர் இறைப்பணியில் கொண்டி ருந்த தாகத்தை வெளிப்படுத்தி
யது. சில பயிற்சிக் கூடங்களைக்
குறிப்பிட வேண்டும் - மாத்தர் தேயி (கோவா), ஜீவன் ஜோதி (ஆந்திரா), அருள் ஒளி இல்லம் (திண்டி வனம்), அருட்கடல் (சென்னை) இங்கு பயின்ற சகோதரிகளும் குரு
மாணவர்களும் அவர் வகுப்புகளுக் காக ஆவலோடு காத்திருந்தனர்.
“விவிலிய ராசா” என்ற பெயர் பெற்ற இவர் டெல்லியில் இயேசுசபை குருத்துவக் கல்லூரி (வித்யஜோதி) கல்லூரி அதிபராகப் பணியாற்றியபோது (1988 - 1993) அகில இந்திய ஆயர் பேரவையால் திருந்தந்தையின் விவிலிய ஆராய்ச்சிக் குழுவுக்கு ஆசிய பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பணியில் 10 ஆண்டுகள் சிறப்பாய்ச் செயலாற்றினார். பல மொழிகளை அறிந்திருந்ததால் - இத்தாலியன், ஜெர்மன், ஆங்கிலம் விவிலிய மொழிகள், தமிழில் முதுகலைப் பட்டம். அவரது மொழிப்புலமை சிறப்பாகப் பணி புரிய கை கொடுத்தது. திருத் தந்தை விவிலியக் கூட்டுக்குழு வெளியிட்ட முக்கியமான ஒரு வெளியீட்டிற்குத் தரமான பங் களித்துள்ளார். அந்த ஏட்டின்
பெயர் - திருஅவையில் இறை வார்த்தை பொருள்கோள்முறை 1999-லிருந்து ஆசிரியப் பணி ஓய்வு
பெற்று இரண்டு விவிலிய மொழி
பெயர்ப்போடு, ஆன்ம குரு பணி களில் ஈடுபட்டார். திண்டிவனம் ஒளி இல்லத்தில் சகோதரிகளுக்கு ஆன்ம வழிகாட்டியாய் வாஞ்சை யோடு வாழ்ந்தார். அதன்பின் லயோலா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இயேசு சபை இளந் துறவிகளுக்குரிய பெர்க்மான்ஸ் இல்லத்தில் (சென்னை) ஆன்ம குருவாக இருந்து வழிகாட்டி
னார். சொந்த உரையாடல்களிலும் ஊக்குவிக்கும் பாணியிலும் மகிழ்ந்து
வாழ்ந்தார். தொடர் பணிகளான தியானத் தயாரிப்புகள், ஆன்ம புதுப்
பித்தலுக்கு வழங்கிய மாதாந்திர
உரைகள், சுருக்கமானதாகவும் மையப்பொருள் பளிச்சிடும் விதத்தி
லும் வழங்கி ஆன்ம விழிப்புணர்வு ஊட்டினார்.
அவர் பங்கு கொண்ட விவிலிய கருத்தரங்குகளிலும் விவிலியக் கூட்டங்களிலும் அவர் அறுதியிட்டுக் கூறிய ஆழ் வுணர்வு - “இறைவார்த்தையே இறையியலின் ஆன்மா” - இந்தத் தீர்க்கமான உள்ளுணர்வால் - அவரிடம் திருச்சபையோடு பிர மாணிக்கம், அறிவுப்பூர்வமான தொகுப்பு, முழுமையான பார்வையும் ஒளிர்ந்தன. இப்பண்புகள், குரு
மாணவரிடமும் துறவற பயிற்சி பெற்ற
வரிடமும் பொது நிலையினரிடமும் தாக்கத்தை உருவாக்கின. அடக்கத்
திருப்பலிக்கு திண்டுக்கல் மறை
மாவட்ட மேதகு ஆயர் தாமஸ்
பால்சாமி தலைமை தாங்கினார். ராசா சாமி அவருக்கு ஆசிரியராக
இருந்தவர். நினைவில் நின்ற வற்றைப் பற்றி பகிர்ந்துகொண்டார். 
தந்தை ராசா விவிலியம் கற்றுக் கொடுப்பதில் கையாண்ட  போதனா முறை எல்லாருக்குமே எளிதாக இருந்தது. உறவு சார்ந்த வகுப்பு பரிமாற்றங்களையும் பெருமையோடு பகிர்ந்தார். திருச்சி புனித புவுல் குருத்துவக் கல்லூரி யில் தற்போது பேராசிரியராகப் பணியாற்றும் அருள்பணி. சந்தி யாகு ராசா பணியாற்றிய நாள்களில் கல்லூரி வளாகத்தில் பைபிள் ராசா நிரந்தர பதிவை ஏற்படுத்தியுள்ளார். அவரது நூலக ஈடுபாட்டுப் பண்பை மாணவர்களும் கண்டு தேர்ச்சிபெற அவருடைய சொந்த மாதிரியாலே வழிகாட்டினார். 
இறுதி அஞ்சலியின்போது, தந்தை. ராசா உறவினர் பேராசிரியர் கமலா கூறியது வியக்கத்தகுந்தது. - கோவிலில் பொது நிலையினருக்கு மறைஉரை ஆற்றியபோதும் இறைவாக்கினருக்கான துணிவோடு உண்மைகளை உரக்கக் கூறியவர் சிலர் விரும்பா
விட்டாலும் இறைவார்த்தையை அறிவிக்கத்தான் வேண்டும் என்று வீரத்தோடு பணியாற்றியவர். சிறப்பாக பொதுநிலையினருக்கு இறைவார்த்தையின் உட்பொருள்
கண்டு வாழ்க்கை சூழலில் பொருத்தி வாழ்ந்திடக் கற்றுக்கொடுத்தார்.
புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் இயேசு சபையின் இறுதி அதிபராகப் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது. ராசா அடிகள்
விவிலிய முனைவர் பட்டத்திற்குத் திருப்பாக்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். எனவே அவர் நடத்தும் பாடங்களில் திருப்பாடல்கள் வகுப்புகள் சிறப்பிடம் பெற்றன. திருப்பாக்களைப் பற்றியே சென்ற இடமெல்லாம் அறிவித்துவந்தார்.
சங்கீத அரசர் தாவீதைப் போல், சேசுராசாவும் சங்கீத ராசா என பயிற்சி பெற்றோரால் பட்டம் பெற்றார்.
இரத்தத்தில் சர்க்கரை கூடுதலாக இருந்ததால் மருத்துவ
மனைக்கு அழைத்துச் செல்லு முன்பே மே மாதம் 6-ஆம் தேதி மதியம் இறை தந்தையின் கைகளில் ஆன்மாவை அமைதியாக ஒப்புக்கொடுத்தார். சிமியோன் போன்று, “உமது சொற்படி உம் அடியான் என்னை அமைதியுடன் போகச் செய்கிறீர்” என்று அவர் ஆன்மா பாடியிருக்கும். இறை வார்த்தையிலே ஊன்றியிருந்த அவருக்கு அமைதியான இறப்பு பரிசுதானே!

Comment