திருத்தந்தையின் புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகள்-திருப்பீடத்தின் திருவழிபாட்டுத்துறை - 11.04.2021
- Author --
- Wednesday, 07 Apr, 2021
திருத்தந்தையின் புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகள்-திருப்பீடத்தின் திருவழிபாட்டுத்துறை
மார்ச் 28, ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறன்று, காலை 10.30 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலி இடம்பெற்றது.
ஏப்ரல் 1, புனித வியாழன் காலை 10.00 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை திருத்தந்தை தலைமையேற்று நடத்தினார். அன்று மாலை, 6 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற ஆண்டவருடைய இறுதி விருந்து திருப்பலியை, கர்தினால்கள் அவையின் தலைவர், கர்தினால் ஜியோவன்னி பாட்டிஸ்டா ரே அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
ஏப்ரல் 2, புனித வெள்ளியன்று மாலை 6 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற ஆண்டவருடைய பாடுகள் திருவழிபாட்டையும், மாலை 9 மணிக்கு புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதை பக்தி முயற்சியையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
ஏப்ரல் 3 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு நடைபெற்ற ஆண்டவருடைய உயிர்ப்புப்பெருவிழா திருவிழிப்பு வழிபாடு, ஏப்ரல் 4 ஆம் தேதி உயிர்ப்புப்பெருவிழா ஞாயிறன்று காலை 10 மணிக்கு திருத்தந்தையின் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற உர்பி எத் ஓர்பி (ஊருக்கும் உலகுக்கும்) உயிர்ப்புவிழாச் செய்தி மற்றும் ஆசிர் ஆகியவற்றை புனித பேதுரு பெருங்கோவிலில் வழங்கினார். இதன் தமிழாக்கம் அடுத்த இதழில் இடம்பெறும்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்குட்பட்டு, புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தும், மிகக் குறைவான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Comment