திரு அவைக்குப் புதிய 14 புனிதர்கள்
அக்டோபர் 20 அன்று வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், ஓர் அருள்பணியாளர், 8 ஆண் துறவறத்தார், 2 அருள்சகோதரிகள் உள்பட மூன்று பொதுநிலையினர் என மொத்தம் 14 பேர் புனிதர்களாக உயர்த்தப்பட்டனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரையின்போது, “கடவுள் அன்பானவர், கடைநிலையில் இருப்பவர்களுக்காகத் தம்மைத் தாழ்த்துபவர். போரை அல்ல; அமைதிக்கான வழிகளை உருவாக்குபவர். பணி பெறுவதற்காக அல்ல; பணிபுரிவதற்காக வந்தவர். அன்பிற்காக அவரது வாழ்வு அர்ப்பணிக்கப்பட்டது. அவரைப் பின்பற்றி, அவருடைய அடிச்சுவடுகளில் நடப்பதன் வழியாகவும், அவருடைய அன்பின் பரிசை வரவேற்பதன் வழியாகவும், நம் சிந்தனை முறையை மாற்றியமைப்பதன் வழியாகவும், நாமும் கடவுளின் செயலைக் கற்றுக்கொள்ளலாம். நாமும் கிறிஸ்துவை, அவரது பணியைப் பின்பற்றவும், உலகத்தில் நம்பிக்கையின் சாட்சிகளாகவும் இருக்க புதிய புனிதர்களின் பரிந்துரையை நாம் நம்பிக்கையுடன் கேட்போம்” என எடுத்துரைத்தார்.
Comment