No icon

பேதுரு வளாகத்தின் மேல்மாடியிலிருந்து, மீண்டும் திருத்தந்தை

பேதுரு வளாகத்தின் மேல்மாடியிலிருந்து, மீண்டும் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தின் மேல்மாடியிலிருந்து, ஒவ்வொரு ஞாயிறன்றும், நண்பகலில் வழங்கிவந்த "வானக அரசியே வாழ்த்தொலி உரை"யை, ஏப்ரல் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மீண்டும் தொடர்கிறார். 
கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியால் இத்தாலிய அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, திருத்தந்தை, தன் புதன் மறைக்கல்வி உரைகளையும், ஞாயிறு நண்பகல் உரைகளையும், திருத்தந்தையர் இல்லத்தின் நூலக அறையிலிருந்து வழங்கிவந்தார்.
மார்ச் 28, குருத்தோலை ஞாயிறு மற்றும் ஏப்ரல் 4, உயிர்ப்புப் பெருவிழா ஆகிய இரு நாள்கள், நண்பகல் மூவேளை செப உரையையும், உர்பி எத் ஓர்பி சிறப்புச் செய்தி, மற்றும் ஆசீரையும் புனித பேதுரு பெருங்கோவிலிலிருந்து திருத்தந்தை வழங்கினார்.
ஏப்ரல் 11, இறை இரக்க ஞாயிறு திருப்பலியை, சாந்தோ ஸ்பிரித்தோ இன் சாசியா என்ற கோவிலில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே கோவிலில், அன்றைய "வானக அரசியே வாழ்த்தொலி உரை"யை வழங்கினார்.
ஏப்ரல் 18 ஆம் தேதி ஞாயிறன்று, திருத்தந்தை, மீண்டும் புனித பேதுரு வளாகத்தைப் பார்த்தவண்ணம் அமைந்திருக்கும் மேல்மாடி சன்னலிலிருந்து, "வானக அரசியே வாழ்த்தொலி உரை"யை வழங்கினார். 

Comment