திருஅவையின் மூன்று புதிய இறையடியார்களின் புண்ணிய வாழ்வு ஏற்பு
- Author --
- Saturday, 04 Sep, 2021
5
திருஅவையின் மூன்று புதிய இறையடியார்களின் புண்ணிய வாழ்வு ஏற்பு
ஓர் அருள்பணியாளர், இரண்டு பெண் பொதுநிலையினர் என மூன்று இறையடியார்களின் புண்ணிய வாழ்வு குறித்த சிறப்பு விவரங்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி திங்களன்று சமர்ப்பிக்கப்பட்டன.
இன்றைய குரவேஷியா நாட்டில் இருக்கும் செர்சோ எனுமிடத்தில், 1907 ஆம் ஆண்டு பிறந்து, 1944 ஆம் ஆண்டு இத்தாலியில் உயிரிழந்த, கன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபையின் அருள்பணி பிளாசிடோ கோர்ட்டேசே, 1969 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்து அந்நாட்டிலேயே 1995 ஆம் ஆண்டில் உயிரிழந்த குடும்பத் தலைவி, இறையடியார் மரிய கிறிஸ்டினா செல்லா மோசலின், 1914ம் ஆண்டு இத்தாலியின் உரோம் நகரில் பிறந்து 2012ம் ஆண்டு அந்நகரிலேயே உயிர்துறந்த பொதுநிலை விசுவாசி என்ரிகா பெலட்ராமே குவாத்ரோச்சி ஆகிய மூவரின் புண்ணிய வாழ்வு விவரங்களை, புனிதர், மற்றும், அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து சமர்ப்பித்தார்.
இத்தாலியிலுள்ள பதுவை நகர் புனித அந்தோனியார் பெருங்கோவிலில் பணியாற்றிய இறையடியார், அருள்பணி பிளாசிடோ கோர்ட்டேசே,அவர்கள், இரண்டாம் உலகப்போரின்போது, புலம்பெயர்ந்த மக்களோடு, குறிப்பாக, யூதர்களோடு பணிபுரிந்து அவர்களின் உயிரைக்காப்பற்ற உழைத்ததற்காக, நாசி படைகளால் கொடுமைப்படுத்தப்பட்டு 1944 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
தற்போது, வீரத்துவ பண்புகளுக்காக ஏற்கப்பட்டுள்ள என்ரிகா பெலட்ராமே குவாத்ரோச்சி அவர்களின் பெற்றோர் லூயிஜி பெல்ட்ராமே குவோத்ரோச்சியும் மரியா கோர்சினியும் ஏற்கனவே திருஅவையில் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இறையடியார் மரிய கிறிஸ்டினா செல்லா மோசலின் என்பவர், தன் மூன்றாவது குழந்தையை கருவில் சுமந்துகொண்டிருந்தபோது, இடது காலில் ஏற்பட்ட அரிதான ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தன் கருவை கலைக்க சம்மதிக்காத தாயாக, தன் 26 ஆம் வயதில் காலமானார்
Comment