திருத்தந்தையிடமிருந்து சிறப்பு பிரதிநிதிகள் நியமனம்
- Author --
- Wednesday, 08 Sep, 2021
திருத்தந்தையிடமிருந்து சிறப்பு பிரதிநிதிகள் நியமனம்
இத்தாலியின் பியெல்லா மறைமாவட்டத்தின் ஒரோபாவின் கறுப்பு அன்னை மரியாவுக்கு முடிசூட்டப்பட்டதன் ஐந்தாம் நூற்றாண்டு நிகழ்வில், தனது சிறப்பு பிரதிநிதியாகப் பங்கேற்பதற்கு, கர்தினால்கள் அவையின் தலைவராகப் பணியாற்றும், கர்தினால் ஜியோவன்னி பாட்டிஸ்டா ரே அவர்களை, ஆகஸ்டு 21 ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.
இந்நிகழ்வு இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி நடைபெறுகின்றது. 1620 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கும், ஆகஸ்ட் மாதத்தின் இறுதி ஞாயிறன்று, இந்நிகழ்வு சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இன்னும், செக் குடியரசின் டெட்டின் நகரில், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி சிறப்பிக்கப்படும். புனித லுட்மிலா மறைசாட்சியானதன் 1,100 ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில், தனது சிறப்பு பிரதிநிதியாகப் பங்கேற்பதற்கு, வியன்னா பேராயர் கர்தினால் கிறிஸ்டோப் ஷோன்போர்ன் அவர்களை, ஆகஸ்டு 21 ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார். புனித லுட்மிலா, பொகேமியாவின் முதல் புனிதர் மற்றும், இளவரசர் புனித வென்சஸ்லாசின் பாட்டி ஆவார்.
Comment