வியாகுல அன்னையை நோக்கி திருத்தந்தை செபித்த செபம்
வியாகுல அன்னையை நோக்கி திருத்தந்தை செபித்த செபம்
- Author --
- Tuesday, 28 Sep, 2021
வியாகுல அன்னையை நோக்கி திருத்தந்தை செபித்த செபம்
ஏழு துயரங்களின் எங்கள் அன்னையே! சகோதர சகோதரிகளாக உம் திருமுன் கூடிவந்து, ஆண்டவரின் கருணைமிகு அன்பிற்காக நன்றி கூறுகிறோம். அன்று, திருத்தூதர்களுடன் மேலறையில் நீர் இருந்ததுபோல், இங்கு எங்களோடு இருக்கிறீர்.
திருஅவையின் அன்னையே! துயருறுவோரின் ஆறுதலே! எங்கள் வாழ்வின் மகிழ்வுகளிலும், துயர்களிலும், உம்மிடம் நம்பிக்கையோடு வந்துள்ளோம். எங்களை கனிவுடன் கண்ணோக்கி, எங்களை அரவணைக்க உங்கள் கரங்களை விரித்தருளும்.
திருத்தூதர்களின் அரசியே! பாவிகளின் புகலிடமே! எங்கள் மனித எல்லைகளையும், ஆன்மீக குறைகளையும், தனிமையில் நாங்கள் அடையும் துயர்களையும் நீர் அறிவீர். உமது கனிவான தொடுதலால் எங்கள் காயங்களை குணமாக்கும்.
இறைவனின் அன்னையே! எங்கள் அன்னையே! உம்மிடம், எங்கள் வாழ்வையும், எங்கள் நாட்டையும் (குடும்பத்தையும்) கையளிக்கிறோம். உம்மக்களாகிய எங்களிடையே இருக்கும் ஒருங்கிணைப்பை, உம்மிடம் ஒப்படைக்கிறோம். உமது மகன் எங்களுக்குச் சொல்லித்தந்தவற்றை பிரமாணிக்கமுடன் செயல்படுத்த எங்களுக்கு வரங்களைப் பெற்றுத்தாரும்.
உம் திருமகன் எங்களுக்குச் சொல்லித்தந்த சொற்களில், அவர் வழியாக, நாங்கள் தந்தையிடம் வேண்டுகிறோம். (’விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ செபம் சொல்லவும்)
இறுதி மன்றாட்டு: இறைவா! அன்னை மரியாவைப் பின்பற்றி, கிறிஸ்துவின் பாடுகளை தியானிப்பதற்கு, உமது திருஅவையை நீர் அழைக்கிறீர். அவரது பரிந்துரையால், நாங்கள், உமது ஒரே திருமகனின் சாயலை, இன்னும் அதிகமாக தாங்கி, அவரது அருளின் நிறைவைப் பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி புரியும் அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
Comment