திருத்தந்தைபிரான்சிஸ்
இறைவார்த்தையை வரவேற்பவர்களையேத் தேடுகிறார் இறைவன்
- Author Fr. Gnani Raj --
- Monday, 01 Nov, 2021
அனைத்திலும் முதன்மையான கட்டளைஎது? என மறைநூல்அறிஞருள் ஒருவ ர்இயேசுவிடம் கேட்டக்கேள்வியைத் தொடர்ந்து இடம்பெற்ற உரையாடல் குறித்து ஞாயிறுவாசகம் எடுத்துரைப்பதைமையப்படுத்தி, தன் ஞாயிறு மூவேளை செபஉரையை திருத்தந்தைபிரான்சிஸ் வழங்கினார்.
மாற்கு நற்செய்தி 12ம்பிரிவில் வரும் இந்த உரையாடலில், கேள்விகேட்டமறைநூல்அறிஞரைநோக்கி, விவிலியத்தைமேற்கோள்காட்டி, இறைவனைமுதலில்அன்புகூரவும், அதன் இயல்பான விளைவாக, நமக்கு அடுத்திருப்பவரை அன்பு கூர வேண்டியதையும் பற்றி இயேசு கூறுவதைக் காண்கிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் வார்த்தைகளையே அந்த மறைநூல் அறிஞர் மீண்டும் எடுத்துரைத்து அங்கீகரித்ததை சுட்டிக்காட்டினார்.
இயேசு கூறிய வார்த்தைகளை அந்த மறைநூல் அறிஞர் திருப்பிக் கூற வேண்டிய அவசியம் என்ன என சிந்திக்கும் நமக்கு, விவிலிய வார்த்தைகளைக் கேட்டால் மட்டும் போதாது, அதனை மீண்டும் மீண்டும் நமக்குள்ளேயே சொல்லி ஒரு பகுதியாக மாற்றி அதனை பாதுகாக்க வேண்டும் என்ற பாடம் இங்கு நமக்குச் சொல்லித் தரப்படுகிறது என திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.
இறைவார்த்தையைமீண்டும்மீண்டும்அசைபோடும்பழக்கத்தைதுறவுமடபாரம்பரியம்நமக்குச்சொல்லித்தருவதுபோல், நம்முழுஇதயத்தோடும்முழுஅறிவோடும்முழுஆற்றலோடும்இறைவாத்தையைநம்வாழ்வாக்கி, அதைநம்இதயத்தில்எதிரொலிக்கும்போது, அந்தஇதயத்தில்குடியிருக்கும்இறைவன்நம்மைநோக்கி, “நீர்இறையாட்சியினின்றுதொலையில்இல்லை”எனஎடுத்துரைப்பார்எனதன்மூவேளைசெபஉரையில்திருத்தந்தைபிரான்சிஸ்கூறினார்.
இறைவன்திறமையானவிவிலியவிரிவுரையாளர்களையல்ல, மாறாகஇறைவார்த்தையைஇனியமுகத்துடன்தங்கள்இதயத்தில்வரவேற்பவர்களையேத்தேடுகிறார்என்பதால், நாம்எப்போதும்இறைவார்த்தையைவாசித்துமீண்டும்மீண்டும்அசைபோடஉதவும்வகையில்,சிறியவிவிலியப்பிரதிஒன்றை, எப்போதும்நம்முடன்வைத்திருக்கவேண்டியதன்அவசியத்தையும்திருத்தந்தைஎடுத்துரைத்தார்.
கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது (எபி 4:12) என கூறப்படுவதற்கு இயைந்த வகையில், நாமும், தூய ஆவியாரால் நம்மில் விதைக்கப்பட்டுள்ள வார்த்தை எனும்முளைமுளைத்து செழித்து வளரும், வாழும் சாட்சிகளாக இருப்போம் என்ற அழைப்பையும் விடுத் ததிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளையும் நமக்கு அடுத்திருப்பவரையு ம்அன்பு கூரவிடப்பட்டுள்ள அழைப்பைப் புரிந்து செயல்படுத்துவோம் என விண்ணப்பித்தார்.
'உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக. உன் மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக ’என்ற இயேசுவின் வார்த்தைகளை ஏற்ற மறை நூல் அறிஞரின் எடுத்துக்காட்டை நம் வாழ்வின் மையமாக்கியுள்ளோமா என நாம் ஒவ்வொரு வரும் நமக்குளேயே கேள்வி எழுப்புவோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் கடவுளை இன்று அன்பு கூர்ந்தோமா, நம் இன்றைய வாழ்வில் சந்தித்தவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை ஆற்றினோமா என்ற கேள்வியை தூங்கச் செல்வதற்கு முன் நம்மையேக் கேட்போம் என விண்ணப்பித்து, அன்னை மரியாவின் துணையை வேண்டி தன் மூவேளை செப உரையை நிறைவுசெய்தார்.
Fr. Gnani Raj

Comment