Fr. Gnani Raj
ஐரோப்பியத்தலைவர்களுக்கு கர்தினாலின் விண்ணப்பம்
- Author Fr. Gnani Raj --
- Wednesday, 03 Nov, 2021
இவ்வுலகில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை என்பதையும், நமது நல வாழ்வு, இந்த பூமிக் கோளத்தின் நல வாழ்வுடன் பிரிக்க முடியாத வண்ணம் பிணைந்துள்ளது என்பதையும், கோவிட் பெருந்தொற்று நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளது என்று, கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள், ஐரோப்பியத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு மடலில் கூறியுள்ளார்.
அக்டோபர்31 ஞாயிறு முதல், நவம்பர்12ம் தேதி முடியஸ் காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற விருக்கும் COP26 கால நிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும்ஐரோப்பியநாடுகளின்பல்வேறுநிறுவனங்களின்தலைவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த ஆயர் மாமன்றங்கள் ஒருங்கிணைப்பின் தலைவரான கர்தினால் Hollerich அவர்கள் அனுப்பியுள்ள மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.
உலக வெப்ப மயமாதலைக் குறித்து, அறிவியல் உலகம் எச்சரித்த காலக் கெடுவை விட துரிதமாக, 1.5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் என்ற பாதாளத்தின் விளிம்பை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று, கர்தினால் Hollerich அவர்கள், இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்து நிறைந்த இந்த சமுதாய நெருக்கடியைத் தடுக்கும் கடமை, உலகின் அனைத்து நாடுகளையும் சார்ந்தது என்பதை உணர்ந்தவர்களாய், கிளாஸ்கோவில் நடை பெறவிருக்கும் உச்சி மாநாட்டில், ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் கடமையை நிறை வேற்றுமாறு, கர்தினால் Hollerich அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
நம்மைச் சூழ்ந்து பயமுறுத்தும் ஆபத்தை எவ்வளவு திறமையாக தடுக்கிறோம் என்பதிலும், குறிப்பாக, கால நிலை மாற்றங்களால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த மக்களுக்கு நாம் வழங்கும் நீதியிலும், நமது பதிலிறுப்பு தீர்மானிக்கப்படும் என்று, கர்தினால் Hollerich அவர்கள், தன் மடலில் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஐரோப்பிய, மற்றும், மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்கள், அளவுக்கதிகமாக வளர்த்துக் கொண்டுள்ள நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து விடுதலையடைந்து, தங்கள் வாழ்வு முறையில் அடிப்படை மாற்றங்களை கொணர வேண்டும் என்று கூறியுள்ள கர்தினால் Hollerich அவர்கள், இந்த முடிவு, இயற்கை வளங்களைஅளவுக்கதிகமாக வீணாக்கும் நம் பழக்க வழக்கங்களை மாற்றியமைப்பதில் வெளிப்படும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
புதைப் படிவ எரி பொருள்களில் முதலீடு செய்தல், அவற்றைப் பயன் படுத்துதல் ஆகியவற்றை முடிவுகளிலிருந்து விலகி, மறு சுழற்சி முறைகளை வளர்த்து வாழ்வதால், நம்மை நெருங்கியிருக்கும் பேராபத்தை நாம் தடுக்க முடியும் என்று, கர்தினால் Hollerich அவர்கள் , இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுக் கடங்காமல் தொழில் மயமாக்கப்பட்டுள்ள உலகில், கட்டாயப் புலம் பெயர்வுக்கு உள்ளாக்கப்படும் பழங்குடியினர், வறியோர் ஆகியோருக்கு உரிய நிலங்களையும், அவர்களுக்கு உரிய நீதியையும் வழங்குவது, COP26 கூட்டத்தின் ஒரு முக்கிய முயற்சியாக இருக்க வேண்டும் என்று, கர்தினால் Hollerich அவர்கள், தன் மடல் வழியே விண்ணப்பித்துள்ளார்.
Comment