No icon

Arul Munaivar S. Michael Raj

அகில உலக ஆயர் மாமன்றம் என்பது என்ன?

அகில உலக ஆயர் மாமன்றம் என்பது, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயர்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத் தந்தையின் தலைமையில் ஒன்று கூடி திருஅவையின் வளர்ச்சிக்காக அவருக்கு ஆலோசனைகள் தரும் அமைப்பு ஆகும். திருஅவை சந்திக்கும் சவால்களை கடந்து செல்லவும், தொடர்ந்து நேர்மையான பாதையில் பயணிக்கவும் திருத்தந்தைக்கு உதவும் ஓர் அமைப்பே அகில உலக ஆயர் மாமன்றம் என அழைக்கப்படுகிறது. ‘Synod எனப்படும் ஆங்கில வார்த்தைAn assembly எனப்படும் கிரேக்க மூலச் சொல்லிலிருந்து புறப்படுகிறது. இதற்குகூட்டம்பேரவை (Synodos) என்று பொருள். ‘Synodos எனப்படும் கிரேக்க மூலச்சொல்Synஎன்றுஇணைந்து வருதல் என பொருள் கொள்ளப்படும் முதல் வார்த்தையிலிருந்தும், nodos எனப்படும் பயணம் அல்லதுகூடிவருதல் என்று ‘‘Coming together என்று இரண்டாவது சொல்லாலும் இணைத்துப் பொருள் கொள்ளப்படுகிறது.

புனித திருத்தந்தை 6 ஆம் பவுல் 1965 ஆம் ஆண்டு அகில உலக ஆயர் மாமன்றம் (Synod of Bishops) என்று இந்த பயனுள்ள அமைப்பைApostolica Sollicitudo என்ற தன் முன்முயற்சி ஏட்டின் மூலம் அறிவிப்பு செய்தார். இன்றைய திருஅவை சட்டமும் CC. 342-348 அகில உலக ஆயர் மாமன்றத்தின் செயல்பாடுகளை மிகத்தெளிவாக வரையறுக்கிறது. அகில உலக ஆயர் பிரதிநிதிகள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட காலத்தில், ஒரே இடத்தில் ஒன்று கூடி வருவது உரோமையின் திருத்தந்தையோடு அடிப்படையில் ஒற்றுமையை உருவாக்குகிறது. ஒற்றுமையை மென்மேலும் பலப்படுத்துகிறது. திருஅவையின் அடிப்படையான நம்பிக்கை வளரவும் காக்கப்படவும் பேணப்படவும்; திருத்தந்தைக்கு இந்த ஆயர் மாமன்றம் ஆலோசனைகள் வழங்கி உதவுகிறது. திருஅவையின் நம்பிக்கை மற்றும் அறநெறிகளை (Faith and Morals) கடைப்பிடிக்கவும், அவற்றை திருஅவையின் அடிப்படை ஒழுங்குகளாகவும் நெறிமுறைகளாகவும் தொடர்ந்து கடைப்பிடிக்கவும், திருத்தந்தைக்கு உதவி செய்யும் ஆலோசனை மன்றமாக செயல்படுகிறது. இன்றைய திருஅவையில் எழும் கேள்விகள் மற்றும் சவால்களுக்கு கவனத்துடன் செவிமடுத்து ஏற்றுக்கொள்ளவும் பதிலளிக்கவும், தேவையான மன நிலைகளை உருவாக்கிக் கொள்ளவும் உதவுகிறது.

அகில உலக ஆயர் மாமன்றம் மூன்று வெவ்வேறு நிலைகளில் கூடி வரலாம்.

1. அகில உலக ஆயர் மாமன்ற பொது பேரவை - இது அகில உலக திருஅவையின் பொது நலனை முன்னிட்டு கூட்டப்படுகிறது (Ordinary General Assembly).

2. அகில உலக ஆயர் மாமன்ற சிறப்பு பேரவை - திருஅவையில் ஏதேனும் சிறப்பு மற்றும் அவசர தேவைகளை முன்னிட்டு கூட்டப்படுகிறது (Extraordinary General Assembly).

3. அகில உலக ஆயர் மாமன்ற தனிப்பேரவை - ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கண்டத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் இணைந்த பேரவையாக நடைபெறலாம் (Special Assembly).

இப்போது நம் திருத்தந்தை பிரான்சிஸ் கூட்டியுள்ள 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் தொடங்கிய அகில உலக ஆயர் மாமன்றம் தொடக்கத்தில் தனிப்பேரவையாகவும் நிறைவாக பொதுப்பேரவையாகவும் நடத்தப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு (அக்டோபர் முதல் 2022 ஏப்ரல் வரை) மறைமாவட்ட அளவிலான தனிப்பேரவையாகவும், 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் வரை கண்டங்கள் அளவிலான தனிப்பேரவையாகவும், 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் உரோமையில் பொதுப்பேரவையாகவும் நடைபெற உள்ளது. இப்படி ஒரு சில ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக அகில உலக ஆயர் மாமன்ற கூடுகை நடைபெறுவதுண்டு. இந்தப் பின்னணியோடும் மிக முக்கிய சிந்தனைகளோடும் திறந்த உள்ளத்தோடும் ஆவியின் குரலுக்கு கவனமாகச் செவிமடுக்கும் நம்பிக்கையாளர்களாக பின்வரும் கருத்துக்களை கவனிப்போம்.

2. திருப் பேரவையின் எதிர்பார்ப்புகள் என்ன?

திருஅவையின் வரலாற்றில், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் (1962-65) பின் நடைபெறும் மிகப்பெரும் திருஅவை வரலாற்று நிகழ்வாக 16ஆவது அகில உலக ஆயர் மாமன்றம் கருதப்படுகிறது. இப்பொழுது நடைபெறவிருக்கும் 16ஆவது அகில உலக ஆயர் மாமன்றம் மறைமாவட்ட அளவிலான தனிப்பேரவையாக தொடங்குவது நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்தரவுகளை சேகரிப்பதற்காக அல்ல; ஆனால், உலகின் அனைத்து பகுதியில் வாழும் நம்பிக்கையாளர்களின் குரலுக்கும், தான் விரும்பிய திசையெல்லாம் வீசுகின்ற ஆவியாரின் குரலுக்கும் செவிமடுப்பதற்காகவேஎன்கிறார். மறைமாவட்ட அவைகளில் ஒன்று கூடும் இந்த பொது பேரவையின் முதல் கூட்டம் ஏதோ இறையியல் கருத்தையோ தனிப்பட்ட ஒருவரின் எண்ணத்தையோ சேர்ப்பதற்கு அல்ல; மாறாக திருத்தூதர் பணி நூலில் நமக்கு தரப்பட்டுள்ள திருஅவையின் வாழ்வு முறையை - இணைந்து பயணித்தல் - என்பதை மீண்டும் நினைவுகூறவும், புதுப்பிக்கவும் அதன்படி வாழ கற்றுக்கொள்ளவும் இந்த ஆயர் மாமன்றம் கூட்டப்படுகிறது என மிகச் சிறப்பாக விளக்கம் தருகிறார்.

16ஆவது அகில உலக ஆயர் மாமன்றம் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமானதாகும்; அடிப்படையுமானதாகும். அகில உலக ஆயர் மாமன்றத்தின் பொன்விழா சிறப்பு நிகழ்வாக நடைபெறும்ஒன்றிப்பின் பாதையில் இணைந்து பயணிப்போம்என்ற விருதுவாக்குடன் இந்த பேரவை ஏதோ கூட்டமாகவோ அல்லது வெறும் நிகழ்ச்சியாகவோ முடிந்துவிடாமல் இணைந்து உரையாடுவது, உறவாடுவது, கலந்தாலோசிப்பது, செவிமடுத்தலும் அதன் விளைவாக ஆவியாரால் தேர்ந்து தெளிதலும் என்ற பாதையைக் காட்டுகிறது. எனவேதான், ஆயர்கள் இணைந்து வரும் மாமன்றம் என்பதையும் கடந்து, இறைமக்கள் அனைவரையும் உள்ளடக்கும் மறைமாவட்டத் திருப்பேரவையாக இது தொடங்க வேண்டுமென 2021 அக்டோபர் 17ஆம் நாள் அனைத்துத் தலத் திருஅவைகளுக்கும் திருத்தந்தை அழைப்பு நல்கினார். இணைந்து பயணிக்கும் திருஅவை என்ற மையக்கருத்து திருஅவைக்கு புதிதல்ல. எனினும்ஒன்றிப்பு மற்றும் இணைந்து நடத்தல்என்பது திருஅவையின் சிந்தனை என்பதையும் கடந்து, ஏதோ ஒரு குரல், முழக்கம், அறிவிப்பு என்பதைவிட இதுதான் திருஅவையின் வேரோட்ட இயல்பு - கூடிவரும் இணைந்து நடத்தும் வாழ்வு என்ற ஆழமான உயரிய சிந்தனைகள் இடம்பெற வேண்டுமென திருத்தந்தை அழைப்பு விடுக்கிறார். இதுவே திருஅவையின் உருவாக, நடைமுறையாக, பணியாக வெளிப்பட வேண்டும் என்ற தன் ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் நல்குகிறார்.

இந்த அகில உலக ஆயர் மாமன்றம் திருஅவையின் ஒன்றிப்பு - பங்கேற்பு - பணி என்ற மூன்று முக்கிய நிலைகளில் வெளிப்படுகிறது. இணைந்து வருதல், இணைந்து வாழ்தல், இணைந்து பயணித்தல் (Path of Synodality) என்ற குறிக்கோளை முன்வைத்துள்ள இந்த திருப் பேரவை திருஅவையின் புதிய வாழ்வு முறையாக மாறிட வேண்டும் என்றால் இறைமக்கள் சமூகமாக நாம் இன்னும் வேரூன்றிட அழைப்பு தரப்படுகிறது. திருஅவையில் நாம் அனைவரும் இணைந்து வருவதுதான் இறைமக்கள் (People of God)) சமூகம் என அழைக்கப்படுகிறது. ஆயர் மற்றும் அருள்பணியாளர்கள் ஆட்சியாளர்களாக மற்றவரெல்லாம் ஆளப்படுபவர்களாக கருதப்பட்ட சிந்தனை மறைந்து நாம் அனைவரும் இறைமக்கள் (People of God)) என்ற இயல்பு திருஅவையின் இயல்பாக, வாழ்வாக, பணியாக மாறிட வேண்டும். இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-65) ஏற்கனவே முன்மொழிந்துள்ள திருஅவையின் பங்கேற்பு அமைப்புகளைப் புதுப்பிப்பது என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல் இந்த அமைப்புகளை உறவுகளையும் ஒன்றிப்பையும் ஏற்படுத்தும் இயக்கங்களாக மாற்றிட வேண்டும்.

உறவுகளுக்கு எதிரான அமைப்புகளை, தடைகளை நீக்கி உறவாடும் சமூகமாக (Communicational Dynamics) என்ற தொடர்பு நிலைக்கு, ஒன்றிப்பு நிலைக்கு இந்த திருப் பேரவை உதவவேண்டும். மறைமாவட்ட அளவிலும், கண்டங்கள் அளவிலும், ஆயர் மாமன்றம் நிகழ்வு என்ற நிலையிலும் இது கூடி (இணைந்து) சிந்தித்தல், இணைந்து முடிவுகளை மேற்கொள்ளுதல் மற்றும் இணைந்து செயல்படுதல் என்ற நிலையை திருஅவையில் உருவாக்க வேண்டும். உரையாடலுக்கு முக்கியத்துவம் தந்து தன்னிச்சையான, எதேச்சதிகாரமான, சர்வதிகார போக்குகளை இது மாற்ற வேண்டும். இந்த நலமான மாற்றமே ஒருவர் மற்றவரோடு தொடர்பு கொள்ளும் உறவுத்தன்மையையும், ஒன்றிப்பு உறவையும் (Binding Relationship) கொண்டுவரும். மேற்கூறியவற்றை செயல்படுத்தினால் நம்மிலும் திருஅவையிலும் ஆநவயnடியை எனப்படும் அடிப்படை இயல்பு மாற்றத்தையும், அமைப்பு மாற்றத்தையும், தனிமனித மாற்றத்தையும் காண இயலும். அதன் விளைவாக ஒருவர் மற்றவருக்கு செவிமடுத்து இணைந்து பயணித்து நடைபயில இயலும். Consensus Building எனப்படும் இணைந்து கட்டியெழுப்புதல் என்ற லட்சியத்தை அனைவரும் இணைந்து நிறைவேற்ற இயலும்.

தொடக்ககாலத் திருஅவையின் வாழ்வு செயல்பாட்டை நாம் மீண்டும் புதுப்பிப்பது என்பதும்வேர்களுக்கு திரும்பிச் செல்லுதல் என்பதும் பழமைக்கு திரும்புதல் என்ற சிந்தனையில் அல்ல; ஆனால், இணைந்து வருதல், இணைந்து திருத்தூதர்களின் போதனைக்கு செவிமடுத்தல், இணைந்து உறவாடுதல், இணைந்து அப்பம் பிடுதல், இணைந்து இறைவேண்டல் செய்தல் (திப 2:42-47) என்ற செயல்பாடுகளுக்கு செயலாக்கம் தந்து புதுப்பித்தலே ஆகும். இதன் அடிப்படையில் இறையியல் பார்வையில் அதிலும் மிக குறிப்பாக திருஅவையியல் Ecclesiological) பார்வையில் ஒன்றிப்பு இறையியல் (Communion Ecclesiology)) என்ற குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். இரண்டாம் வத்திக்கான் சங்கம், கனவு கண்ட இறைமக்கள் சமூகமாக, நாம் இணைந்து பயணிக்க வேண்டும். எனவே, பொதுநிலையினரின் மாண்பும், அழைப்பும் பங்கேற்பும் அதிலும் குறிப்பாக திருஅவையில் பெண்களின் பங்களிப்பும் பணிநிலைகளும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினரும், தலித்துகளும் நம் கவனத்தை ஈர்க்கின்றனர். சமூகத்தின் கடைநிலையில் உள்ள ஏழைகளின் குரல் இன்று நம்மால் கேட்கப்பட வேண்டும். அருள்பணியாளர்களுக்கான பயிற்சி நிலைகள், துறவியர்களுக்கான உருவாக்கங்கள் அனைத்திலும் இது முதன்மை பெற வேண்டும். நிறைவாக பிற சமூகங்களுடன் இணைந்து பயணித்தலும், ஒன்றித்து வாழ்தலும் நமது புதிய ஆன்மீகமாகவே மாறிட இந்த மாமன்றம் அழைப்பு நல்குகிறது. எனவே, இயேசுவின் இதய இயக்கமான இறையாட்சி செயல்பாடு என்ற லட்சியத்தில் அனைவரும் இணைந்து உண்மை வெளிப்பாடாக ஒரு சமூகமாக உறவின் சமூகமாக ஒன்றிப்பின் திரு அவையாக இணைந்து பயணிக்க முடியும்.

 

 

Comment