No icon

அல்பேனியா பிரதமர் சந்திப்பு

திருத்தந்தை அல்பேனியா பிரதமர் சந்திப்பு

அல்பேனிய நாட்டு பிரதமர் எடிராமா அவர்கள், நவம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் ஏறத்தாழ ஒருமணி நேரம் தனியே சந்தித்து கலந்துரையாடினார், இச்சந்திப்புக்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோபரோலின்,  பன்னாட்டு உறவுகள் திருப்பீட துறையின் செயலர் பேராயர் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும் அல்பேனியப் பிரதமர் ராமாஅவர்கள் சந்தித்தார்.

தன் குடும்பத்தினரையும் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்து ஆசீர் பெற்ற அல்பேனியப் பிரதமர் எடிராமா அவர்கள், திருவருகைக்கால நம தன்னை மற்றும் புனித பிரான்சிஸ் வண்ணப்படங்களையும், அல்பேனியாவில் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படும் பிரான்சிஸ்கன் துறவு சபை அருள்பணியாளர் ஜார்ஜிபிஸ்தா அவர்களின் மடல் ஒன்றையும் திருத்தந்தைக்கு பரிசாக வழங்கினார். திருத்தந்தையும், செம்பு கனிமத்தால் வடிவமைக்கப்பட்ட நோவா உருவம் ஒன்றையும், தனது அதிகாரப்பூர்வ வெளியீடுகளையும், செய்திகளையும் அல்பேனியப் பிரதமருக்கு அளித்தார்.

அல்பேனியா நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் சமுதாய நலப்பணிகள், பால்கன் பகுதியின் நிலவரம், அல்பேனியாவும், ஏனைய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் போன்றவை, இச்சந்திப்புக்களில் இடம் பெற்றன என, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்தது.

சந்திப்புக்கள்

மேலும், ஜிம்பாபுவே திருப்பீடத்தூதர் பேராயர் பாலோரூடிலி, மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் சபையின் பேராயர் ஆன்டோனிஜி, ஜெர்மன் குடியரசின் டிரியர்ஆயர்ஸ்டீபன் ஆக்கர்மான் ஆகியோரும், நவம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினர்.

Comment