திருத்தந்தை பிரான்சிஸ்
திருமணத்தை செல்லாதாக்குவது குறித்த சீர்திருத்தங்கள்
- Author திருத்தந்தை பிரான்சிஸ் --
- Monday, 29 Nov, 2021
இத்தாலி நாட்டின் மறைமாவட்டங்களில், திருமணத்திலிருந்து விலக்கீடு செய்வது குறித்த புதிய சட்டங்களை பரிசீலனை செய்வது மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கு, புதிய குழு ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மோட்டு புரோபிரியோ எனப்படும், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் அறிக்கை வழியாக, நவம்பர் 26 ஆம் தேதி வெள்ளியன்று உருவாக்கியுள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 2015 ஆம் ஆண்டில், மிட்டிஸ் யுடக்ஸ் டோமினுஸ் ஏசுஸ் அதாவது நேர்மையான நீதிபதி, நம் ஆண்டவர் இயேசு எனப்படும் மோட்டு புரோபிரியோ அறிக்கை வழியாக, திருத்தந்தை, உரோமன் கத்தோலிக்கர், திருமண விலக்கீட்டைப் பெறுவதை எளிதாக்குவதற்குப் புதிய சட்டங்களை அறிவித்தார். ஏனெனில் திருமண விலக்கீட்டு வழிமுறைகள், சிக்கலானதாக, குழப்பம் நிறைந்ததாக மற்றும் நிதி இழப்பீட்டுக்கு காரணமானதாக இருந்தது.
திருத்தந்தை உருவாக்கவுள்ள புதிய குழு, இத்தாலியில் இந்த வழிமுறைகளை ஆய்வுசெய்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உதவியாகவும், அந்த புதிய சட்டங்களுக்குத் தூண்டுதலாகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருஅவையில் திருமணம் தொடர்புடைய விவகாரங்களைக் கண்காணிக்கும் ரோமன் ரோட்டா உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்படவிருக்கும் இக்குழுவில், இத்தாலிய ஆயர் பேரவையிலிருந்து ஓர் ஆயரின் பங்கேற்பு இருக்கும். இக்குழு, இத்தாலியத் திருஅவைகள், இந்த சீர்திருத்தத்தை வரவேற்பதற்கு ஆதரவாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comment