No icon

குடந்தை ஞானி

பிரெஞ்சு அருள்சகோதரி மரிய ரிவயர்விற்கு விரைவில் புனிதர் பட்டம்

புனிதர் மற்றும், அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவரான கர்தினால் மார்செல்லோ செமெராரோ அவர்கள், டிசம்பர் 13 ஆம் தேதி திங்கள் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து, ஓர் அருளாளர் மற்றும் ஐந்து இறைஊழியர்களின் புண்ணிய வாழ்வு குறித்த சிறப்பு விவரங்களை சமர்ப்பித்தார்.

பிரெஞ்சு நாட்டு அருள்சகோதரி அருளாளர் மரிய ரிவியர் அவர்களின் பரிந்துரையாலும், இத்தாலிய இறைஊழியர் மரிய கார்லோ செக்கின் அவர்களின் பரிந்துரையாலும் இடம்பெற்ற புதுமைகள் குறித்த விவரங்களை, திருத்தந்தையிடம், கர்தினால் செமெராரோ சமர்ப்பித்தார்.

அருள்சகோதரி மரிய ரிவியர்

1768 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் பிறந்த அருள்சகோதரி மரிய ரிவியர் அவர்கள், 16 மாதக் குழந்தையாக இருந்தபோதே, படுக்கையிலிருந்து கீழே விழுந்ததால் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது. ஏறத்தாழ பத்து ஆண்டுகள் அந்த வேதனையைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்த அவர், கைகளாலே அனைத்தையும் செய்வதற்குக் கற்றுக்கொண்டார். எனினும் அவர் கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கை, 1777 ஆம் ஆண்டில் அவருக்கு முழு குணம் அளித்தது. 1786 ஆம் ஆண்டில் அவர் பள்ளி ஒன்றைத் திறந்தார். பின்னர் தொமினிக்கன் சபையில் சேர்ந்து வேலைவாய்ப்பற்ற பெண்களுக்குப் பயிற்சியளித்தார், நோயாளிகள்  மற்றும்  தேவையில் இருப்போரைச் சந்தித்தார். அவர் 1801 ஆம் ஆண்டில் காணிக்கை அன்னை மரியா சபையைத் தோற்றுவித்தார். 1838 ஆம் ஆண்டில் இவர் இறைபதம் சேர்ந்தார். இவரது பரிந்துரையால், பிலிப்பீன்ஸ் நாட்டில், கடும் நோயால் பாதிக்கப்பட்ட புதிதாய் பிறந்த குழந்தைக்கு குணம் கிடைத்தது.

மேலும், இறைஊழியர்களான இஸ்பெயின் நாட்டின்ஆன்ரியா காரிடோ பியர்ல்ஸ், இத்தாலியின் கார்லோ மரிய அபியேட்கிராசோ, பெர்னார்தோ சார்தோரி, போலந்து நாட்டு மேரி மார்கிரேட் ஆகிய நால்வரின் புண்ணியப் பண்புகள் குறித்த விவரங்களும் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

Comment