No icon

குடந்தை ஞானி

பழைய திருவழிபாட்டு சடங்குமுறைகள் குறித்த கேள்விகளுக்குப் பதில்கள்

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குமுன் நடைமுறையில் இருந்த திருவழிபாட்டு சடங்குமுறை நூல்களைப் பயன்படுத்துவது குறித்து இவ்வாண்டு ஜூலையில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறைகள் தொடர்பாக, ஆயர்கள் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் மடல் ஒன்றை, திருவழிபாடு மற்றும் அருளடையாளப் பேராயத்தின் தலைவர் கர்தினால் அர்த்தூர் ரோச் அவர்கள் டிசம்பர் 18 ஆம் சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், “டிரெடிஓநிஸ் கஸ்டோடஸ்என்ற தலைப்பில், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் மோட்டு பிரோபிரியோ அறிக்கையின் வழியாக நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறைகளில் சிலவற்றில் எழுந்துள்ள சந்தேகங்களை, கர்தினால் ரோச் அவர்கள், உலக ஆயர்களுக்கு அனுப்பியுள்ள மடலின் வழியாக தெளிவுபடுத்தியுள்ளார்.

திருத்தந்தை அறிவித்துள்ள புதிய திருவழிபாட்டு விதிமுறைகள் ஒவ்வொன்றும், உறுதியான மனத்தோடு, ஒன்றிணைந்து நடப்பதன் வழியாக, திருஅவை ஒன்றிப்பின் கொடையைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்று கர்தினால் ரோச் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பங்கு ஆலயங்கள்

பங்குத்தளத்தில் இத்திருவழிபாட்டை நிறைவேற்ற வேறோர் இடம் இல்லையென்ற சூழலில் இதனை எவ்வாறு நிறைவேற்றுவது என்று எழுந்துள்ள கேள்விக்குப் பதிலளித்துள்ள கர்தினால் ரோச் அவர்கள், இத்திருவழிபாட்டை நிறைவேற்றும் நம்பிக்கையாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், இக்குழுக்கள், பங்குத்தள குழும வாழ்வின் ஓர் அங்கம் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.   

மற்றோர் ஆலயமோ, சிற்றாலயமோ அல்லது, வேறு பங்குத்தள மேய்ப்புப்பணி இடங்களோ இல்லை என்ற நிலையில் மட்டுமே, இவ்வழிபாட்டுமுறை, பங்கு ஆலயத்தில் நிறைவேற்றப்படலாம், ஆனால் இது, பங்குத்தளத்தின் மற்ற திருப்பலி காலஅட்டவணையில் இணைக்கப்படக் கூடாது என்றும், கர்தினாலின் மடல் கூறுகிறது.

அருளடையாளங்களை நிறைவேற்றுவதற்கு, பழைய வழிபாட்டு சடங்குமுறைகளைப் பயன்படுத்துதல், அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பிலிருந்து வாசகங்கள் வாசித்தல், இவற்றை நிறைவேற்ற நேரம், கால அளவு போன்ற சில கேள்விகளுக்கும் கர்தினால் ரோச் அவர்கள், தன் மடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Comment